576 கர்ப்பூரம்
576 கர்ப்பூரம் கர்ப்பூரம் தனிப்பண்பும், ஊடுருவும் நறுமணமும் கொண்ட கரிமப்பொருள் கர்ப்பூரம் (camphor-C1.H15O) ஆகும். இது இருவளைய டெர்ப்பீன் (bicycle terpene) வகையைச் சார்ந்த கரிமச்சேர்மம் ஆகும். தெய்வ வழிபாட்டிற்கு நறுமணப் பொருளாகவும், மருந் தாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கீழ்த்திசை நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரேபியர்கள் இதை ஐரோப்பிய நாடுகளுக்கு என்று கருதப்படுகிறது. வணிகம் செய்திருக்கலாம் வளர்ச்சி. சீனாவின் கடலோரங்களிலும், தைவா னிலும், ஜப்பானின் தென் பகுதியிலிருந்து வியட்நாம் வரை வளர்க்கப்படும் சின்னமாமம் கேம்ஃபோரா என்னும் மரங்களின் இலைகளிலிருந்தும் பட்டைகளி லிருந்தும் கற்பூரம் தயாரிக்கப்படுகிறது. கலிஃபோர் னியா, ஃபுளோரிடா ஆகிய இடங்களில் இப்போது வை பயிரிடப்படுகின்றன. 12 மீட்டருக்குக் குறை யாமல் வளரும் இம்மரங்கள் 45-50 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகின்றன. வெண்ணிறப் பூக்களையும் சிவந்த கனிகளையுமுடையவை. தயாரிப்பு. பண்ணைகளில் 3-4 ஆண்டு வளர்ச்சி யடைந்த மரங்களிலிருந்து ஆண்டுக்குப் பலமுறை இலைகளையும் குச்சிகளையும் அறுவடை செய் கின்றனர். இவற்றை நன்கு அரைத்து, நீண்ட நேரம் நீராவி முலம் வடிகட்டி, பக்குவப் படுத்தாத கர்ப்பூர மாகி எடுத்து, அதை மீண்டும் தூய்மைப்படுத்தி விற்பனைக்கு அனுப்புகின்றனர். நீராவி வடிகட்டு தலின் மூலம் கிடைப்பது தூய இயற்கைக் கர்ப்பூர மாகும். ஆரால் தற்போது 75%க்குச் செயற்கைக் கர்ப்பூரமே (synthetic camphor) கிடைக்கிறது. டர்பன்ட்டைன் பகுதியான பைனீனிலிருந்து ( C, H,) கர்ப்பூரம் தயாரிக்கப்படுகிறது. பைனீனைக் கேம் ஃபீனாக மாற்றி அசெட்டிக் அமிலம், நைட்ரோ பென்சீன் ஆகியவற்றின் வேதிமுறைப்படி கேம்ஃபீன் கற்பூரமாக மாற்றப்படுகிறது. பயன்கள். பல நூற்றாண்டுகளாகக் கர்ப்பூரம், நோய் நீக்கும் இயல்புடையது எனக் கருதப்பட்டது. நரம்புவலி, முடக்குவாதம், பல்வலி ஆகியவற்றிற்கு வலிநீக்கும் மருந்தாக வெளிப்பூச்சாகப் பயன்படுத்தப் பட்டது. இதயத்திற்கும் இரத்தச் சுழற்சிக்கும். கிளர்வூட்டும் (stimulant) உள்மருந்தாகவும் கொடுக்கக் பட்டது. ஆனால் அது நச்சுத்தன்மையுடையது எனப் கண்டுபிடிக்கப்பட்டுத் தற்போது இதன் மருத்துவப் பயன் குறைக்கப்பட்டுள்ளது. ஆயினும், குழந்தை களுக்குச் சளி, கழுத்து வலி போன்றவற்றிற்குக் கர்ப்பூரத்தைப் பைகளில் அடைத்துக் கழுத்தைச் சுற்றிலும் கழுத்துப் பட்டைக்குள்ளும் வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் சில டங்களில் உள்ளது. மருத்துவப் பயனைத் தவிர செல்லுலாயிடு, செல்லுலோஸ் தொடர்புடைய பொருள்கள், அந்துப் பூச்சியை அழிக்கும் மருந்து, மரத்தின்மீது பூசப்படும் மெருகு எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிப்பதிலும் கர்ப்பூரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், நாகரிக வளர்ச்சியால் செல்லுலாயிடு செல்லுலோஸ் பொருள் களுக்கு மாற்றாக நெகிழி (plastic), பாதுகாப்பான ஒளிப்பட ஏடு (safety photographic filmes), நாஃப் தலீன், p - டைகுளோரோபென்சீன் போன்ற புதிய கண்டுபிடிப்புக்களால் கர்ப்பூரத்தின் பயன் குறைந் துள்ளது. பண்புகள். து தூய வெண்மை அல்லது நிற மற்ற திண்மமாகும். 178°C இல் உருகும் தன்மையும் 209°C இல் கொதி நிலை அடையும் தன்மையும் கொண்டது; நீரில் சுரையாதது; ஆனால் ஈதர், ஆல்க ஹால், குளோரோஃபார்ம், கார்பன் டைசல்ஃபைடு ஆகிய கரிமக்கரைப்பான்களில் கரையும் தன்மை யுடையது. சாதாரண வெப்பநிலையில் பதங்கமாகும் தன்மை கொண்டது. ஆகவே இதைக் காற்றுப் படும்படித் திறந்து வைத்திருந்தால் காற்றில் கலந்து விடும். இயற்கையில் கிடைக்கும் கர்ப்பூரம் முனைவுடை ஒளியின் (polarised light) தளத்தை வலப்புறம் நோக்கிச் சுழற்றுகிறது. செயற்கை முறையில் தயாரிக் கப்படும் கர்ப்பூரம் ஒளி சுழற்றும் தன்மையற்ற இட வலம்புரி நடுநிலைச் சேர்மம் (Tacemic modification ம். COOH COOH நைட்ரிக் சோடியம் +4=0=0 COOM COOH COOH கேம்ஃபோரிக் அமிலம் கேம்ஃப்ரோனிக் அமிலம் அமிலம் கர்ப்பூரம் ஆல்கஹால் OH போர்னியால்