பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரடி 579

களை ஒத்துள்ளன. செங்கரடிகளும், துருவக் கரடி களும் குதிகாலை உயர்த்தி நான்கு கால்களாலும் நடக்கின்றன. அவசரமாக ஓடும்போது பாதங் களைநிலத்தில் உராய்ந்த வண்ணம் குதித்து ஓடு கின்றன. கரடிகள் நீரில் நன்றாக நீந்தக் கூடியவை. கரடிகளின் உணவுப் பழக்கம் பருவ காலங்களுக் கேற்ப மாறுகிறது. மலர். காய், கனி மிகுதியாகக் கிடைக்கும் பருவத்தில் அவற்றையே உண்கின்றன. காய், சுனிகள் கிடைக்காத பருவத்தில் பெரும்பா லான கரடிகள் கால்நடைகளைக் கொன்று அவற்றின் இறைச்சியையோ, இறந்த விலங்குகளின் இறைச்சி யையோ உண்கின்றன. ஐரோப்பியச் செங்கரடி 正 மிகுதியாக இறைச்சி உணவையே சார்ந்துள்ளது. கால் நடைகளைக் கொன்று உண்ணும் கருங்கரடி கள், காய், கனிகள் மிகுதியாகக் கிடைக்கும்போது அவற்றையும் உண்டு வாழ்கின்றன. பொதுவாகக் கரடிகளுக்குத் தேவையான உணவு நிலத்திலேயே கிடைக்கிறது. வளைந்த நகங்களால் நிலத்தைத் தோண்டிக் கிழங்குகளையும், மரம், மண் இவற்றில் கூடு கட்டி வாழும் பூச்சிகளையும் உண் கின்றன. உறிஞ்சிச் சாப்பிடுவதற்கேற்றவாறு உதடு கள் ஈறுகளில் ஒட்டாதவாறும் அசையக் கூடிய வாறும், முன் நோக்கி நீட்டக் கூடியவாறும் அமைந் துள்ளன. உதடுகளின் இந்த அமைப்பால் அவை வேகமாகக் காற்றை உள்ளிழுக்கவும், வெளியேற்ற கரடி 579 வும் செய்கின்றன. இப்பண்பு பனிக் கரடியிடம் சிறப் பாகக் காணப்படுவதால் இது, கறையான் புற்றை நகங்களால் தகர்த்து, தூசு, துறும்புகளை ஊதி ஒதுக் கிய பின் கறையான்களை வாய்க்குள் உறிஞ்சி இழுக் கும். மூக்குக்குள் மண் புகுந்துவிடாதவாறு தொங்கு கின்ற மேலுதட்டால் அதை மூடிக் கொள்கிறது. மேல் தாடையில் முன் பற்களில்லாமையால் அந்த இடைவெளி வழியாகக் காற்றை உள்ளிழுக் கிறது. மேலண்ணம் குழிபோல் இருப்பதால், உறிஞ் சும் செயல் மேலும் விரைவு பெறுகிறது. பிற கரடி களின் மேலண்ணம் தட்டையாக இருக்கும். பூச்சி களையும், புழுக்களையும் உண்பதில் கரடிகள் ஆர்வம் காட்டுகின்றன. சுரடிகளின் கை, கால் நன்கு பருத்துள்ளன. குட்டையாக, அகலமாக அமைந்துள்ள பாதங்களில் சமமற்ற ஐந்து விரல்கள் உள்ளன. பாதத் திண்டு களின் மேல் வளைந்த கோடுகள் உள்ளன. முதல் விரலுக்குப் பின்புறம் அமைந்துள்ள இரண்டாம் விரல் நிலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும். நகங்கள் நீளமாகவும், வளைவாகவும் உள்ளிழுக்கப் படாமலும் அமைந்துள்ளன. முன் கால்களின் நகங்கள், பின் கால் நகங்களைவிட இரு மடங்கு பெரியவை. கரடிகள் பாதங்களால் நடப்பவை. துருவக் கரடிகளும், செங்கரடிகளும் முன் கால் விரல் திண்டு களை நிலத்தில் ஊன்றிப் பின் உயர்த்தி காலை