பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கட்டகப் பொருள்கள்‌

40 கட்டகப் பொருள்கள் . கட்டகக் கற்கள். சுண்ணாம்புக்கல், மணல் கல், கருங்கல், பளிங்குக்கல் எனப் பலவகைப்பட்ட கட்ட கக் கற்கள் பயன்படுகின்றன. எஃகும். கற்காரையும் தோன்றுவதற்கு முன் கற்களே மிக முக்கியமான கட்டகப் பொருளாக இருந்தன. ஆனால் அவற்றின் அழகு, நீடிப்பு, தேவை போன்ற காரணங்களால் இப் போது அவை அழகுபடுத்துவதற்காகவே பயன்படுத் தப்படுகின்றன. கற்காரை. கற்காரை என்பது ஒரு கலவையே. சிமெண்ட், சரளை, நீர் ஆகியவை குறித்த விழுக் காட்டில் அல்லது குறித்த அளவில் சேருவதால் தோன்றும் குழைவுத் தன்மை எந்த வடிவத்திலும் அமையலாம். நீரால் கற்காரை கெட்டிப்படும். மரம். கட்டகப் பொருள்களில் மரம் சிறப்பிடம் பெறுகின்றது. அடிப்படைக் காரணமாகிய புரை கட்டமைப்பு (cellular structure) கொண்டுள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. மரத்தின் ஆற்றல் அதனுடைய புரைச் சுவரின் தடிமானத்தைப் பொறுத்தது. மரத்தின் இழுவிசை, அமுக்க விசையை விட மிகுதியாக உள்ளது. இதனுடைய வலிமைக்கும். கடினத்திற்கும் உள்ள விகிதம், எஃகு கற் காரையின் விகிதத்தை விட மிகுதியாகும். இரண்டு அல்லது மேற்பட்ட அடுக்குகளை ஒட்டுவதால் ஒட்டுப்பலகை கிடைக்கலாம். இந்த ஒட்டுப்பலகை கள் இந்த நூற்றாண்டின் தொழில் நுட்பத்துறை யில் மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன. ஒட்டுப்பலகைகளால் செய்யும் பெரிய உறுப்புகள் ஆற்றல் வாய்ந்தனவாசு அமைகின்றன. மரம், விட்டம், தூண், வளைவு போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. கட்டுமான உலோகங்கள். கட்டுமான எஃகு, எஃகுவார்ப்பு. அலுமினியம், மெக்னீஷியத்தனிமங்கள், வார்ப்பு இரும்பு (wrought iron) தேனிரும்பு போன்றவை கட்டுமான உலோகங்களில் சிறப்பிடம் பெறுகின்றன. பெரும் பாலங்களுக்கடியில் எஃகு வார்ப்புகள் பயன்படுகின்றன. கார்பன் எஃகிலிருந்து சுமை தாங்கும் தகடுகளும், துருவேறா எஃகிலிருந்து (stainless steel) உருளைகளும் தயாரிக்கப்படு கின்றன. அலுமினிய உலோகம் வலிமை மிகுந்தும். எடை குறைந்தும், அரிப்புத் தன்மை எதிர்ப்பாற்றல் பெற்றும் விளங்குகிறது. அலுமினிய உலோகத்தின் மீட்சி மட்டு (modu lus of elasticity) எஃகிற்கு உள்ளத்தைவிட மூன்றில் ஒரு பங்காக உள்ளதால் அலுமினிய அமுக்க உறுப்பு களின் வடிவமைப்பில் நெளிவு என்னும் பண்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பாலங்களில் ஆழத்திற் கும் இடைவெளிக்கும் (span) உள்ள விகிதத்தை ஒதுக்கத்தைக் குறைப்பதற்காக மிகுதிப்படுத்த வேண்டும். இதனால் மேலும் பொருளாதார முறை யில் பொருள் சிக்கனமாகப் பயன்படுகிறது. எஃகின் எடையில் உலோகத்தின் எடை 35% உள்ளதால் மிகு கண் இடைவெளி (span) வடிவமைப்பிலும், பாலங்களிலும் உலோகத்தின் எடையில் சேமிப்பு ஏற்படுகின்றது. மக்னீசியம் உலோகக் கலவைத் தகடுகள் பிதுக் கல் (extrusion), உருட்டல் (rolling). அடித்து வடித் தல் ( forgings) முதலிய முறைகளில் உருவாகி கின்றன. இவை விமானங்கள், இழுவைகள் (trucks) எடுத்துச் செல்லக் கூடிய சாரங்கள் (portable scaf- Rolding) போன்றவற்றில் பயன்படுகின்றன. தூண்கள், தூண் அடித்தளங்கள், சுமை தாங்கும் தகடுகள், மாடிப்படிகள். கம்பிவலை போன்ற வற்றிற்கு வார்ப்பு இரும்பு பயன்படுகிறது. தகடாக்கக் கூடிய இரும்பு, கட்டுமானப் பணியில் பெரிதும் பயன் படுகின்றது. தூய இரும்பு அல்லது தேனிரும்பு அரிப் புத் தன்மையை திர்க்கும் ஆற்றல் பெற்றதால் மிகுதியாகப் பயன்படுகின்றது. பாலங்களைப் பாது காக்கும் வலிமை மிகு தகடு, சாலைகளில் உள்ள திண்மத் தளம், அணை போன்றவற்றிற்கும் பயன்படுகின்றது. மி கலப்பினப் பொருள்கள். கலப்பினப் பொருள் என்பது தெளிந்த இயல்புடைய இரு பொருள்கள் இணைவதால் ஏற்படுகிறது. இந்தக் கூட்டமைந்த பொருள்களால் பொறியியல் துறையில் புதுவகைப் பொருள்கள் பயன்படுகின்றன. முன்னரே கப்பல் துறை, விமானத்துறை, விண்வெளி போன்ற துறை களுக்கு அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. மிகப் பழமை வாய்ந்த கலப்பினப் பொருள்கள் நுண்ணிய இழைகளாலும், நூலிழைகளாலும் செய்யப் பட்டவை. இவை மிகுந்த வலிமையும், கடினத் தன்மையும் பெற்றுப் பிற பொருள்களிலிருந்து வேறு பட்டுள்ளன. சுமை தாங்கும் இயல்பில் இவை மரத் தைப் போன்றுள்ளன. கிராஃபைட், போரான், டங்ஸ் டன் போன்றவற்றின் நுண்ணிய இழைகளிலிருந்து பிறகூட்டமைந்த பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. வலிவூட்டப்பட்ட இழைக்கண்ணாடி ஞெகிழிகள் {fibreglass reinforced plastic) பாலங்கள் போன்ற அமைப்பில் குறைந்த விறைப்பைக் கொண்டிருக்கும். எடைக்கும் விறைப்பிற்கும் உள்ள விகிதம் கிராஃ பைட், போரான் போன்ற நூலிழைகளிலிருந்து கிடைக்கும் கூட்டமைந்த பொருளைவிட மிகுதியாக இருக்கும். ஆனால் அனைத்துக் கூட்டுப்பொருள்களும் பொதுவாகச் சுமைதாங்கக் கூடியவையல்ல. உடையும் தன்மையுள்ள நூலிழைகளின் வலிமை அதன் மேல் சுமை ஏற்றுவதால் அறியப்படும். புது முறைகளால் இப்போது கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. புது முறையில், நியோபியம் கார்பைடை நியோபியம் நியூக்ளியசில் வளர்த்து, ஆய்வு செய்த