பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/600

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 கரடி

380 கரடி நடக்கின்றன. நேராக நிற்கும்போது பாதங்களின் அடிப்பக்கத்தை நிலத்தின் மேல் நன்கு ஊன்றிக் கொள்கின்றன. மரங்களில் ஏறிச் சென்று உணவைப் பெறுவதால் கரடிகளின் கால்கள் வலிமையாக உள்ளன. பாதத் திண்டுகளும், வலிமையான நகங்க ளும் மரங்களைப் பற்றிக் கொள்ள உதவுகின்றன. ஆர்க்டிக் துருவத்தில் மரங்களில்லாமையால் துருவக் கரடிகளின் பாதங்கள் நிலத்தின் மேல் நடப்பதற் கேற்ற தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. வழுக்கும் பனி நிலத்தில் பாதங்களை அழுத்த மாக ஊன்றிக் கொள்வற்குத் துருவக் கரடிகளின் அடிப்பாதங்களில் அடர்ந்துள்ள மயிர் மிகவும் உதவி யாக உள்ளது. இமயமலைச் செங்கரடிகள் ஆண்டு முழுதும் மரங்களற்ற உயரமான மலைகளில் வாழ் கின்றன. அரிதாகவே மரங்களில் ஏறுகின்றன. அவற்றின் அடிப் பாதங்களிலுள்ள தரையில் நடப்பதற்கே உதவுகிறது. அடர்ந்த மயிர் இமயமலைக் கருங்கரடியும், பனிக்கரடியும். மலேயா கரடியும் மரங்களில் ஏறுபவை. அவற்றின் அடிப் பாதங்கள் அகலமாகவும், மயிரில்லாமலும் அமைந்திருப்பதால் மரங்களையும், கிளைகளையும் அழுத்தமாகப் பற்றிக் கொள்கின்றன. உட்புறமாக வளைந்துள்ள முன் கால்களின் பாதங்கள் மரங் களைப் பற்றிக் கொள்வதற்கு மேலும் உதவுகின்றன. மயமலைக் கருங்கரடி, பனிக்கரடி, மலேயா கரடி இவற்றின் பாதங்களைப் போலவே கால்களும் வில்லைப் போல் வளைந்துள்ளன. வெவ்வேறு இனங் களைச் சேர்ந்த கரடிகளின் உள் பாதங்களும், பாதத் திண்டுகளும் வெவ்வேறு அமைப்புகளில் காணப்படுகின்றன. ன் கரடி வாழுமிடங்கள். துருவக் கரடிகள் வட துருவத்திலும், கண்ணாடிக் கரடி நிலநடுக்கோட்டில் வடக்குப் பகுதியிலும், சுருங்கரடி சம தட்ப வெப்பப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சம தட்பவெப்பக் காடு களின் தெற்கே இந்தியா, தென் கிழக்கு ஆசிய வெப்பக் காடுகள் உள்ளன. இந்த வெப்பக் காடுகளில் இந்தியப் பனிக் கரடியும், மலேயா கரடியும் வாழ் கின்றன. துருவக் கரடிகள் வட துருவத்தில் பனி மூடிய நிலத்தில் நீர்-நில வாழ்விகளாக உள்ளன. மலையுச்சிகளிலும், வறண்ட நிலப்பகுதிகளிலும் செங்கரடிகள் வாழ்கின்றன. வட அமெரிக்கச் செங் கரடி சாம்பல் நிறத்தில் 455 கிலோ. உடல் யுள்ள பெரிய கரடியாகும். கரடிகளிலே மிகப் பெரியது அலாஸ்காவின் ராட்சதக் கரடியாகும். அதன் உடல் எடை 680 கிலோவாகும். அவாஸ்கா ராட்சதக் கரடியே பெரிய இறைச்சி உண்ணியாகும். ஆனால், மேற்கு இமயமலைக் காடுகளில் வாழ்கின்ற செங்கரடி உருவில் சிறியது. மத்திய ஆசியாவிலும், வட ஆசியாவிலும் வாழும் கருங்கரடிகளை விட பலுசிஸ்தான், மலேயா காடுகளில் வாழ்கின்ற கருங் எடை கரடிகள் உருவில் சிறியவை. இந்தியப் பனிக் கரடி களைவிட இலங்கையில் வாழ்கின்ற பனிக்கரடிகள் உருவில் சிறியவை. குளிர் காலத் தூக்கம். கடுமையான குளிர் காலத்தி லிருந்து தப்புவதற்காகவும். அப்போது நிலவும் உணவுப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காகவும், கரடிகள் வழக்கமான வாழ்க்கை முறைகளைக் குறைத்துக் கொண்டு, குகைகளிலும், குழிகளிலும் தங்கிக் குளிர்காலத் தூக்கத்தை மேற்கொள்கின்றன. உடலியக்கச் செயல்கள் நிறுத்தப்படும். இதயத்தின் செயலாற்றலும் குறைந்து போகிறது. . குளிர்காலத் தூக்கத்திற்குக் காரணம். குளிரைத் தாங்க முடியாமலே கரடிகள் குளிர்காலத் தூக்கத்தை மேற்கொள்கின்றன என்னும் கருத்து ஆய்விற்குரியது. குளிர் காலத்தில் உணவுப் பற்றாக் குறையே மிகுதி யாக நிலவுகிறது. மிகுதியாகிக்கொண்டே போகின்ற குளிர், உணவைத் தேடி அலைவதற்கான மகிழ்ச்சியைக் குறைக்கிறது. எனவே, அவை அவை குளிர் காலத் தூக்கத்தை மேற்கொள்கின்றன என்பதே சரியான காரணமாகும். குளிர் காலம் மாறியவுடனே அவை விழித்தெழுகின்றன. த சமுதாய கரடிகளின் வாழ்க்கை. கரடிகள் சந்தித்துக் கொள்ளும்போது உறுமுகின்றன. உணவைக் கண்டவுடன் பெருமூச்சு விடுவது போன்றும், சிணுங்குதல் போன்றும், ஊளையிடுதல் போன்றும் ஒலிகளை எழுப்புகின்றன. காயமடை ந்த கரடிகள் அஞ்சத் தக்கவாறு அலறுகின்றன. உடலுறவு வேட்கையை வெளிப்படுத்த பனிக்கரடிகள் இனிய ஒலி எழுப்புகின்றன. அவை உடலுறவு கொள்ளும்போது உரத்து ஒலியெழுப்புகின்றன. தாய்க்கரடி ஏதோ ஒரு குறிப்பின் மூலம் தன் குட்டி களை அழைக்கிறது. பெரும்பாலும் தனித்தே வாழ்கின்றன. கரடிகள், புணர்ச்சிப் பருவத்தில் இணையாகச் சேர்ந்தலை கின்றன. கோடைக் காலத்தில் உடலுறவு கொண்டு. குளிர் காலத்தில் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. குளிர் காலத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போதே பெண் கரடிகள் குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. அவற்றின் பேறு காலம் 7-8 மாதங்களாகும். இரண்டு அல்லது மூன்று குட்டிகளைப் பெறுகின்றன. கரடிக் குட்டிகள் சிறியவையாகவும். மயிரில்லாம் லும், கண்களை மூடிய நிலையிலும் காணப்படு கின்றன. மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குப் பின்னரே அவை கண்களைத் திறந்து பார்க்கின்றன. உடலுறவு வேட்கையைத் தணித்துக் கொள்ளும் ஆண் கரடி, பெண் கரடியைப் புறக்கணித்துவிட்டு, மீண்டும் தனித்து வாழும் வாழ்க்கையை மேற்கொள் கிறது. குட்டிகள் நன்கு வளர்ச்சி பெற்றுத் தனித்து இயங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளா கின்றன. அதுவரை தாய்க் கரடியே குட்டிகளை