பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்தை 583

கரந்தை 583 தொரு நாளில் பொரிந்து குஞ்சுகள் வெளிவரு கின்றன. ஆண், பெண் இரண்டுமே குஞ்சினைப் பேணு கின்றன. குஞ்சு நான்கு வாரங்களிலேயே கூட்டை விட்டு நகர்கிறது. அடுத்த நான்கு வாரங் களில் பறக்கத் தொடங்கி விடும். வெளிவரும்போதே குஞ்சின் அலகு கரண்டியை ஒத்துக் காணப்படுகிறது. முழு வளர்ச்சியடைந்த பறவைகள் சிறு பூச்சிகளையும் இளவுயிரிகளையும் மெல்லுடலிகளையும் நீர் வாழ் சிறு உயிரிகளையும் உண்டு வாழ்கின்றன. . றகு இவை மலர்ச் செண்டு கரண்டி அலகன்கள் (Ajia ajaia) பிற கரண்டி அலகன்களை ஒத்துக் காணப்பட்டாலும் சற்று மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன. ஐபிஸ். (lbis) பூநாரை போன்று கொண்டை சற்றுச் சிவந்த நிறத்தில் காணப்படுகிறது. உண்ணும் உணவில் கரோட்டின் குறையும்போது நிறம் குறைந்தும் மீண்டும் கரோட்டின் அதிகப்படும் போது நிறம் மிகுந்தும் காணப்படும். பொதுவாக 80 செ.மீ. உயரமும் சிவந்த கொண்டையும் உடையவை. இவை இத்தாலி, ஃபுளோரிடா, தென் அர்ஜென்ட்டைனா, சில்லி பகுதி வரை பரவியுள்ளன. பறவை இயல் வல்லுநர் கருத்துப்படி இவை உச்சி ஆபரணங்கள் (crown jewels) எனப்படுகின்றன. ச.தியாகராசன் கரந்தை இது கொட்டைகரந்தை, விஷ்ணுகரந்தை என்றும் குறிப்பிடப்படும். இதன்தாவரப்பெயர் ஸ்ஃபீராந்தஸ் இண்டிகஸ் (Sphaeranthus indicus) ஆகும். இச்செடி தென்னிந்தியாவில் விளைகிறது. இது கம்போசிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இது அறுவடையான நெல் வயல் போன்ற ஈரமான இடங்களில் மிகுதியாக வளரும் ஒருபருவச் செடியாகும். இதன் உயரம் 30-60 செ.மீ, ஆகும். இது கிளைத்து வளரும் தன்மையது. இச்செடிக்கென்று தனி மணமுண்டு. இதன் இலைகள் 2.5-5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இலைக்காம்பு இல்லாமல் இலையின் அடிப்பகுதி தண்டுடன் சிறிது தொலைவு ஒட்டிக் கொண்டிருக் கும். இலை முட்டை அல்லது நீள்வட்ட வடிவமானது. சிறிய பூக்கள் உருண்டை வடிவமுடைய மஞ்சரிகளில் உண்டாகிச் சிவப்பு அல்லது ஊதா கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். கனி ஒருவிதையுள்ள வெடியாக்கனி (indehiscent fruit) வகையைச் சேர்ந்தது. இதிலுள்ள ஸ்ஃபீந்தஸ் சைலானிகா (sphaeranthus zeylanica) என்னும் சிற்றினத்திற்குச் சிவக்கரந்தை அல்லது நறுங்கரந்தை 0:10. கரந்தை 10 B