588 கரிச் சுழற்சி
538 கரிச் சுழற்சி வரை இடும். அடைகாப்பதிலும் குஞ்சுகளைப் பேணுவதிலும் ஆணும், பெண்ணும் பங்கு கொள் கின்றன. குயில் ஆகியன இதன் கூட்டில் கள்ளத் தனமாகத் தங்கள் முட்டைகளை ட்டுச் செல்வதும் உண்டு. சாம்பல் கரிச்சாள். இதன் கறுப்பு நிறம் மங்கலாகச் சிவந்த மயிர் போன்ற கலவை கொண்டது. இதன் விழிப்படலம் கரிக் குருவியின் விழிப்படலத்தைவிட இரத்தச் சிவப்பு வாய்ந்ததாக இருக்கும். வட இந்தியாவில் இமயமலை சார்ந்த பகுதிகளில் இனப் பெருக்கம் செய்யும் இது குளிர் காலத்தில் தென் னிந்தியாவிற்கு வலசை வருகிறது. கரும்பச்சைக் கரிச்சான். தோற்றத்தில் கரிக்குரு வியை ஒத்த இது அதைவிடச் சற்றுச் சிறியது. வால் இறகும் கரிச்சானைப் போலமிகுதியாகப் பிளவுபட்டி ராது. தமிழ் நாட்டில் நீலகரி, கொடைக்கானல் சேர்வராயன் முதலியமலைப் பகுதிகளைச் சார்ந்த காடுகளிலும் காஃபி, தேயிலைத் தோட்டங்களிலும் குளிர் காலத்தில் கரும்பச்சைக் கரிச்சான் குரு வியைக் காணலாம். இமயமலையின் கிழக்குப் பகுதி களில் இனப்பெருக்கம் செய்யும் இக்குருவியின் பழக்க வழக்கங்கள் கரிக்குருவியின் பழக்க வழக்கங்களையே பெரிதும் ஒத்திருக்கின்றன. வெள்ளை வயிற்றானின் உடலின் மேற்பகுதி பளபளக்கும் கருநீல நிறமும் கீழ்ப்பகுதி கரும்பழுப்பு நிறமும் கொண்டதாகும். இதன் வயிறும் வாலடியும் வெண்மையாக இருப்பதால் இப்பெயர் பெற்றது. காடுகளின் ஓரங்களிலும் மலைப்பகுதி சார்ந்த குடி யிருப்புகளிலும் இவற்றைக் காணலாம். மரங்களின் உயர்ந்து வளர்ந்த கிளைகளில் இருந்தவாறே தாவிப் பறந்து பூச்சிகளைப் பிடித்தபின் மீண்டும் அதே மரக் கிளையில் சென்று அமர்ந்து அந்த இரையைத் தின்னும். முள் முருங்கை, இலவம் ஆகிய காட்டு மரங்கள் மலரும் பருவத்தில் மலர்களிடையே அலகைச் செலுத்தித் தேன் குடிக்கும் பழக்கம் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. பிற பழக்க வழக்கங்கள் கரிக்குருவிகளைப் போலவே இருக்கும். கம்பிவால் கரிச்சான். மைனா அளவினதான தன் வால் கம்பி போல நீண்டு தொங்கும். ஏறத்தாழ 35 செ.மீ. நீளமுள்ள இறகு முனையோடு கூடிய இரு கம்பி அமைப்புக் காணப்படும். இதன் முன் நெற்றியில் பின்நோக்கி வளைந்த அடர்ந்த கொண் டையும் உண்டு. தென்னிந்தியாவில் மலையடிவாரங் களைச் சார்ந்த தேக்கு, மூங்கில் காடுகளிலும் சோலைகள் எனப்படும் மலை முகடுகளைச் சார்ந்த பள்ளத்தாக்குகளிலும் இதைக் காணலாம். இப்பறவை பெரும்பாலும் தனித்தே திரிகிறது. கறையான் புற்றுகளிலிருந்து ஈசல்கள் வெளிப்படும் மழைநாள்ள ளில் ஐந்தாறு பறவைகள் கூடி ஈசல்களைத் துரத்திப் பிடித்து உண்ணும், மரங்கொத்தி, காட்டு ஆந்தை. வால்காக்கை முதலியவை குழுவாகச் சேர்ந்து மரக் கிளைகளிடையே தாவிப் பறந்து இரை தேடும் குழு வோடு இதுவும் சேர்ந்து கொள்வதுண்டு. இதன் வால் எருதின் வாலைப்போன்று நீண்டு தொங்குவ தால் இதை எருத்துவாலன் என்றும் கூறுவர். 4 கரிக்குருவியைப் போலவே பொழுது விடிவதற்கு நெடுநேரம் முன்னதாகவே கிட், கிட், கிட், எனக் குரலெடுத்துக் காட்டின் அமைதியைக் குலைத்தபடிக் கத்தத் தொடங்கும். இது பொழுது புலரும் வரை கத்தும். இறக்கைகளை அடித்துக்கொண்டு இது தாவிப் பறக்கும்போது நீண்ட கம்பி வால்களின் அசைவால் உண்டாகும் பொம்மென்று ஒலி சற்றுத் தொலைவு கேட்கும். இதன் பிற பழக்கவழக்கங்கள் கரிக்குருவியை ஒத்தவையேயாகும். கரிச் சுழற்சி க. ரத்னம் நிலத்திற்கு இடப்படும் குப்பை, கூளம், பசுந்தாள் உரம், பயிர்களின் அடித்தாள்கள், வேர்கள், நிலத்தில் தோன்றி அதிலேயே மடியும் களைகள். நுண்ணுயிர் களின் சடலங்கள் அனைத்திலும் கரிமம் காணப்படு கிறது. மண்ணில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான ஆற்றல், கார்பன், ஆக்சிஜன் மாற்றமடைவதால் கிடைக்கிறது. இதன் கார்பன் டை ஆக்சை வளிமண்டலம் மண்ணின் செயல் CO₂, HCO தண்ணீர் வடிகால் தாவரம் பசுந்தாள் கால்நடைகள் . உரங்கள் உரங்கள் நில நுண்ணுயிர்கள் எரியல்பாடு கார்பன் டை ஆக்சிைம் மூலம் இழப்பு (கார்பன்டை ஆக்கசடு, கால்சியம், மெநனீசியம், ஸாட்டாசியம், கார்படுண்ட, சுபகார்பனேட்டுகள்)