கட்டக வடிவமைப்பு 41
தில் அது 1400° C இல் மிகு வலிமையுடன் காணப் பட்டது. கட்டக வடிவமைப்பு இரா. சரசவாணி நீண்ட நாள் சுமைகளைப் பாதுகாக்கவும், தாங்கக்கூடியதாகவும் உள்ள கட்டகப் பொருள்கள் கட்டக உறுப்பின் வகை. அளவும் அமைப்பு முதலியவற்றைத் தேர்ந்தெடுப்பதே கட்டக வடி வமைப்பு (structural design) ஆகும். பொதுவாகக் கட்டடங்கள், பாலங்கள் போன்ற நிலையான பொருள்கள், நகரும் பொருள்களான கப்பல், வானூர்திச் சட்டக அமைப்பு (aircraft frame) போன்ற அமைப்புடையவற்றையும் கட்டக வடிவமைப்புக் குறிக்கிறது. கட்டக வடிவமைப்பு திட்டத்தேவைகள், பொருள்கள். கட்டகத்திட்டம், கட்டக ஆய்வு வடிவமைப்பு ஆகிய தெளி வான ஐந்து நிலைகளைக் கொண்டது. சிறப்பான கட்டகங்கள் அல்லது பொருள்களில் ஆறாம் நிலையாக ஆய்வு செய்யப் படுகிறது. பல வடிவமைப்புகள் செய்வதால், மதிப்பு, வலிமை, நீடித்து உழைக்கும் திறன் முதலியவை மிகுதியாக ஒன்றிக் காணப்படுகின்றன. இதிலிருந்து எந்த வடிவமைப்புச் சிறந்தது என்று கட்டகப் பொறிஞர். உரிமையாளர், பயன்படுத்துவோர் தேர்ந்தெடுக்க முடியும். . திட்டத்தேவைகள். வடிவமைப்பைத் தொடங்கு முன்னர் சுட்டகப்பொறிஞர் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்திறனுக்குரிய கோட்பாட்டை (criteria) உறுதிப் படுத்த வேண்டும். அவ்வடிவமைப்புக்குத் தாங்கக் கூடிய விசை அல்லது சுமை கொடுக்கப்பட வேண்டும். சிறப்புக் கட்டகங்களில் இச்சுமை நேரடியாகக் கொடுக்கப்படுகிறது. பொதுக் கட்டடங்களில் மாவட்டம், மாநிலம் முதலியவற்றில் பயன்படும் கட்டட வரைமுறைகள் (building code) இயங்கு சுமைகளுக்கான (live load) வடிவமைப்புத் தேவை களை அளிக்கின்றன. வடிவமைப்புத் திட்டத்தில் றுதிச்சுமைகளும் (dead load) கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு கட்டகம் நீண்ட நாள் உழைக்கும் தன்மை உடையதாக இருக்கவேண்டுமானால், தொய்வுகள் வரம்பிற்குள் வைக்கப்படவேண்டும். உறுப்பின் அளவு வரம்பு (number size limitation) கட்டக வடிவமைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. கட்டக வடிவமைப்பில், உட்கூரை உயரம், தளங் களுக்கு இடையே உள்ள உயரம், சுவரின் தடிமன், கட்டக வடிவமைப்பு 41 பல் தூண் அளவு, அதன் இடைவெளி முதலியவை சட்டகத்திட்டங்களின் (framc-scheme) உழைக்கும் திறனைப் பாதிக்கலாம். . பொருள்களைத் தேர்வு செய்தல். மிகு வலிமை, விறைப்புத்தன்மை, வலிமை- எடைத்தன்மை முதலியவை மிகுதியாக உள்ள கரி இழை, போரான் இழை, கட்டமைப்புப் பொருள்களில் தொழில் நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விலைமிகுதி, கடின கட்டமைப்புத் தொழில்நுட்பம் முதலியவை தேவைப் படுவதால் இப்பொருள்கள் சிறப்புப் பயன்பாடுகளி லும், குறிப்பிட்ட வரம்பிற்குள்ளும் பயன்படுகின்றன. வலிவூட்டப்பட்ட கண்ணாடிக் கட்டமைப்புப்பொருள் கள், சான்றாக இழைக்கண்ணாடி (fibre glass ) மிகுதி யாகப் பயன்படுகின்றன. ஆனால் இது குறைந்த சுமை பயன்பாடுகளுக்கே பயன்படுகிறது. எஃகு, அலுமினி யம், வலிவூட்டப்பட்ட கற்காரை, மரம், செங்கல் முதலியவை வடிவமைப்பில் பயன்படும் முக்கியப் பொருள்களாகும். மீட்சிக் எஃகு. இது இழு வலிமை. அமுக்கு விசை முதலியவற்றில் உயர் வலிமையும். வலிமைக்கும் எடைக்கும் உள்ள விகிதம் மிகுதியும். உயர் குணகமும், தீக்காப்பு, அரிப்புக் காப்பும் பெற்றுள்ளதால் பெரும்பான்மையாகப் பயன்படு கிறது. பற்ற வைப்பு, உயர் வலிமை மரையாணித் தொழில்நுட்பம் முதலிய முறைகளால் எஃகை கட்டக வடிவமைப்பில் எளிதாக அமைக்க முடிகிறது [படம். 1]. 35 படம் 1 அலுமினியம். இது எஃகை விடக் குறைந்த விறைப்புத்தன்மையும், வலிமையும் கொண்டுள்ளது. மேலும் குறைந்த எடை, சிறந்த அரிப்புக் காப்புத் தன்மை பெற்றுள்ளது. குறைந்த எடைத்தன்மை யால், கப்பல் கட்டுமானம். வானூர்தி, ஏவூர்தி முதலியவற்றில் மிகுதியாகப் பயன்படுகிறது. கற்காரை. பொதுவாக அமுக்கவிசை உறுப்பு களுக்கும், வளையும் உறுப்புகளுக்கும் எஃகு கம்பி