பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 கரிசலாங்கண்ணி (தாவரவியல்‌)

592 கரிசலாங்கண்ணி (தாவரவியல்) பூக்களின் அல்லி இதழ்கள் மெலிந்து, வெண்மையாக நாவடிவில் இருக்கும். இருபால் பூக்களின் அல்லி இதழ்கள் குழாய் வடிவமானவை. இதில் 4 -5 மடல் கள் இருக்கும். மகரந்தத் தாள்கள் ஐந்தும் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். மகரந்தப்பை ஒரு மி.மீ. நீளத்துடன் இரு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டி ருக்கும். மகரந்தப்பை மழுங்கி இருக்கும். கனி வெடியா உலர்கனி (cypsela) ஆகும். 10 11 1. கிளை 2. ள மஞ்சரி 3. மஞ்சரிப் பூக்கள் 4. கதிர், சிறு பூக்கள் 5. வட்டத் தட்டுப் பூக்கள் 6, 7. மகரந்தப்பைகள் 8. சூல்தண்டு 9, 10. கனி 11. விதை கரிசலாங்கண்ணி உட்கூட்டுப் பொருள்கள். நூறு கிராம் இலையில் புரதம் 4.4 கிராம், கொழுப்பு 0.8 கிராம், மாவுப் பொருள்கள் 9.2 கிராம், கால்சியம் 306 மி.கி. பாஸ்ஃபரஸ் 264 மி.கி., இரும்பு 8.9 மி.கி.77 கிலோ கலோரி ஆற்றல் உள்ளது. இச்செடியில் (உலர்ந் ந்துர் 0.0786 நிக்கோட்டின் உள்ளது. மருத்துவப் பண்புகள். இச்செடியின் மூலம் வலி வையும், உடல் நலத்தையும் பெறலாம். இலையைக் கீரையாகச் சமைத்துண்ண மலம் இளகும், சூடு தணியும். கரிசலாங்கண்ணி இலைகளைத் தூய்மை செய்து, சாறு பிழிந்து சம அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பிலிட்டுக் காய்ச்சித் தைலமாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துவர மயிர் கருமையாக நன்கு வளரும்; தலைவலியும் கண்ணெரிச்சலும் போகும்; உடல் குளிர்ச்சி பெறும். இத்தைலத்தை உடலில் தேய்த்துக் குளித்துவர உடல் அழகு மிகும். இத்தை லம் தொண்டைக் கம்மல், குமட்டல், வீக்கம் இவற் றைப் போக்கும். இலைகளைத் தூய்மைப்படுத்தி வாயிலிட்டு மென்று பற்களைத் தேய்க்கப் பல் நோய் கள் நீங்கும், பற்களும் தூய்மையாகி வெள்ளை நிறம் பெறும்,உறுதிபெறும், வாயின் கெடுநாற்றம், வாய்ப் புண்கள் நலமாகும். இச்செடிக்கு வயிற்றுப் புழுக் களைக் கொல்லும் தன்மை உண்டு. கண் இதயம், தோல், கண், மண்ணீரல் ஆகியவை சார்ந்த நோய்களுக்கும் உதவும். இது வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது. காசநோய், இரத்தச்சோகை, அரிப்பு, மாலைக்கண் போன்ற நோய்களை நீக்க உதவும், படர் தாமரை போன்ற நோய்களுக்கு இது சிறந்த மூலிகையாகும். இதன் சாற்றைப் பூசிச் சொறி, சிரங்கு நோய்களைப் போக்க லாம். இலைகளை அரைத்துத் தடவ இரத்த ஒழுக்கு நிற்கும். கால்நடைகளுக்கு உண்டாகும் புண்கள் மீது இதன் இலைச்சாற்றைத் தடவ அவை விரைவில் நலமாகும். கால்நடைகளின் குதத்தில் தோன்றும் கட்டிகளை ஆற்றுவதற்கு இது சிறந்த மருந்து இமையைக் கருமையாக்கும், கண்களுக்குக் குளிர்ச்சி யைத் தரும். இதற்கு முதிர்ந்த கரிசலாங்கண்ணி. லைகளை நீரில் கழுவிச் சாறுபிழிந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். இவ் விலைச் சாற்றில் மெல்லிய தூய்மையான புது வெள்ளைத் துணியைத் தோய்த்துக் காற்றில் உலர்த்தி, உலர்ந்தபின் இதே துணியை மீண்டும் கிண்ணத்தின் சாற்றில் தோய்த்து எடுத்து உலர்த்த வேண்டும். இவ்வாறு ஐந்தாறு முறை தோய்த்து லர்த்திய துணியை நல்லெண்ணெய் விளக்கில் கரியாக்கி ஆமணக்கெண்ணெயில் குழைத்துத் தயார்செய்தமையைக் கண்ணில் இட்டுக்கொண்டால் பெண்களின் அழகு மிகும். கண்மயிர் மிகக் கருமை எய்தும். எரிச்சலும் புண்ணும் உண்டாகா. கண் அழற்சியும் நீங்கும். சம் சோகை கரிசலாங்கண்ணி இலைச்சாற்றை மோரில் பங்கு கலந்து அருந்த, பாண்டு (dropsy). நோய் தீரும். சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும், உடல் வெப்பம் தணியும். இலைச்சாற்றுடன் தேனைக் கலந்து தரக் குழந்தைகளின் சளி நீங்கும். அரை லிட்டர் கரிசலாங்கண்ணி லைச்சாற்றுடன் கால்