594 கரித்தல்
594 கரித்தல் துத்தநாகம், பெருமளவு நேர்மின்முனை எதிர்மின் முனைப்பகுதிகள் இல்லாமையால், மெதுவாக ஹைட் ரோகுளோரிக் அமிலத்தில் சுரித்தல் அடையும். ஆனால் சாதாரண துத்தநாகம் விரைவில் ஹைட் ரோக்குளோரிக் அமிலத்தில் வினையுறும். தூய்மை யான உலோகத்தின் உறுதி குறைவானதாகும். ஆனால் அதன் விலை மிகுதி. எனவே தூய்மையான உலோகம் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. படம் 1.கரித்தல் நிகழத் படையை தேவையான அடிப் விளக்குகிறது. இக்கரித்தல் கலனில் corrosion cell) அரிக்கப்படும் உலோகத்தின் அளவு, இக்கலனில் ஓடும் மொத்த மின்னோட்ட அளவுக்கு நேர்விகிதத்தில் அமையும். மேலே குறிப்பிட்டுள்ள சுரித்தல் கலனின் அமைப்பைத் தகர்க்கவல்ல காரணி யைப் பயன்படுத்திக் கரித்தலைக் குறைக்கலாம் அல்லது தடுக்கலாம். உலோக மேற்பரப்பில் பூசப் படும் பூச்சு, உலோகத்திற்கும், அதன் சூழ்நிலைக்கும் இடையே ஒரு தடுப்பாக அமைந்து கரித்தலை மிகுதி யாகக் குறைக்கும். வினைத்திறனைப் பொறுத்து உலோகங்கள் வேறுபடுவதால் இவற்றின் கரித்தல் தன்மையும் வேறுபடுகிறது. உலோகங்களின் வினைத்திறன் அளவை அறிய மின்வேதி வரிசை (electrochemica series) உதவுகிறது. இதில் வினைத்திறன் இறங்கு வரிசையில் அமையுமாறு உலோகங்கள் அடுக்கப் பட்டுள்ளன. இருப்பினும் உலோகங்கள் உலோகக் கலவைகளின் சுரித்தலுக்கு இவ்வரிசை. அளவு . ல கோலாக அமைவதில்லை. எ.கா. இவ்வரிசையில் இடத்தைப் பொறுத்துக் குரோமியத்தை இரும்போடு சேர்க்கும்போது, இரும்பின் வினைத்திறன் மிகுதியாக உயர்ந்து விரைவில் அரிக்கப்படவேண்டும். குரோமியம் இரும்பின் உலோகக் கலவையான கறைபடா எஃகு, கரித்தலை எதிர்க்கும். இக்கலவையில் உள்ள குரோ மியம், கரித்தல் சூழ்நிலையில் குரோமியம் ஆக்சை டாக மாறிக் கறைபடா எஃகைச் செயலற்றதாக்கி விடுகிறது. அதாவது வினைத்திறன் உடைய உலோகங் களின் மேற்பரப்பில் தோன்றும் படலங்களால் உலோகம் செயலற்ற நிலையை (passivity) அடை கிறது. வினைத்திறன் மிக்க அலுமினியத்தில் தோன்றும் அலுமினியம் ஆக்சைடு படலம், கரித்தல் எதிர்ப்புத்திறனை இவ்வுலோகத்திற்கு அளிக்கிறது. இதுபோன்று, காரீயத்தின் மேற்பரப்பில் தோன்றும் காரீய சல்ஃபேட் என்னும் தடுப்புப் படலம், கந்தக. அமிலத்தில் இவ்வுலோகத்தைக் காக்கிறது. கரித்தல் அடைந்த உலோகத்தின் தோற்ற அடிப்படையில், கரித்தலைப் பின்வருமாறு பிரிக்க லாம். அவை துத்தநாகப்பூச்சுக் கரித்தல் (galvanic corrosion), சீரானகரித்தல் (uniform corrosion). செறிவுக் கலன் கரித்தல் (concentration cell corrosion). குழிப்புக் கரித்தல் (pitting corrosion), சிறுமணி இடை வகை (inter granular corrosion), தகைவுக் கரித்தல் (stress corrosion), துத்தநாக நீக்கம் (dezincification). அரித்தல் - கரித்தல் (erosion-corrosion), துத்தநாகப் பூச்சுக்கரித்தல் எனப்படும். கரித்தல் சூழலில் இரு வெவ்வேறு உலோகங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருக்கும்போது அல்லது இரண்டு உலோகங் நேர்மின்முனை. ற்றுச்சூழ்நிலை மின்னோட்டத்திசை உவேரகம் எதிர்மின்முனை படம் 1. மின்பகு பொருள்கள் முன்னிலையில் கரித்தல் நிகழ்வதற்கான அடிப்படைத் தேவைகள்