பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 கரிப்பூட்டை நோய்‌

598 கரிப்பூட்டை நோய் வெவ்வேறு வெப்ப நிலையில் கிடைக்கும் உலோக ஆக்சைடுகள் உலோகம் 200°C 300°C 400°C 300°C 600°C 700°C இரும்பு a Fe, O 25 aFe, Og Fe 0, Fc,04 FeO FeO aFe, 03 aFe,0, கோபால்ட். Co₂O Co₂O, Coo Coo Coo + + Co.O Co.O நிக்கல் குரோமியம் Nio Nio Nio Nio NiO Cr₂O3 Cr,O. Cr₂O Cr,O, cr,0; எக்ஸ் கதிர் விலகல் முறை (x ray diffraction) மற்றும் எலெக்ட்ரான் விலகல் முறைகளைப் (electron diffraction) பயன்படுத்திக் கரித்தல் விளை பொருள் களின் படிசு அமைப்புகளை அறியலாம். இரும்பு, நிக்கல் குரோமியம் ஆகிய உலோகங்கள் 200-700°C வரையுள்ள வெப்பநிலையில் ஆக்சிஜனேற்றம் அடைவதால் கிடைக்கும் ஆக்சை சைடுகள் அட்ட வணையில் குறிக்கப்பட்டுள்ளன. இரும்பு இவ்வெப்ப வரம்பில் ஒன்றுக்கு மேற் பட்ட ஆக்சைடுகளை உண்டாக்குகிறது. இரும்பைச் சூடேற்றும்போது அல்லது குளிரச் செய்யும்போது ஆக்சைடுகளின் இயைபில் மாற்றம் ஏற்படுவது அதன் குறைந்த பாதுகாப்புத் திறனுக்கு ஒரு காரண மாகிறது. ஆனால் பாதுகாப்பு ஆக்சைடு படலத்தைப் பெற்றுள்ள நிக்கல், குரோமியம், ஒரே ஆக்சைடை இவ்வெப்ப வரம்பில் தருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. கரிப்பூட்டை நோய் என்.அய்யாசாமி இந்நோய் பல்வேறு பூசணங்களால், சோளம்,கம்பு, கரும்பு, கோதுமை ஆகிய பயிர்களில் தோன்றுகிறது. சோளக் கரிப்பூட்டை நோய்கள் சோளப்பயிரில் பின்வரும் நான்கு வகைக் கரிப் பூட்டை நோய்கள் தோன்றுகின்றன. மணிக்கரிப்பூட்டை (Grain smut), இந்நோய் ஸ்பேசிலோதிக்கா சொர்கை (Sphacelotheca Sorghi) என்னும் பூசணத்தால் தோன்றுகிறது. நோயின் அறிகுறி கதிரில் தென்படும். இந்நோய் விதையுடன் இணைந்த பூசணத்தின் மூலம் பயிரை முளையிலேயே தாக்கிப் பயிருடன் வளர்ந்து கதிரைத் தாக்கும் திறன்பெற்றது. இருப்பினும் கதிர்ப்பருவம் வரை அறிகுறி தென்படுவதில்லை. நோயுற்ற கதிரில் தானிய மணிக்கு மாறாகப் பெரிய வித்துக்கூடுகள் (sori) சாம்பல் நிறத்தில் தோன்றும். இவற்றில் கருமை நிறப் பொடிகள் பொடிகள் நிறம்பியிருக்கும். இப் பொடிகள் யாவும் பூசண வித்துக்களே. கதிரில் சில தானியங்கள் அல்லது பெரும்பாலானவை இவ்வித வித்துக் கூடுகளாக மாறும். சோளப் பயிரில் தோன்றும் பிற கரிப்பூட்டை நோய்களைவிட இக் கரிப்பூட்டை நோயால் ஏற்படும் வித்துக்கூடு குட்டை இருப்பதால் ந்நோயைக் குட்டைச் சுரிப் பூட்டை (short smut) என்றும் குறிப்பிடலாம். யாக பரவுதல். கதிரடிக்கும்போது வித்துக்கூடுகள் உடைந்து அவற்றிலிருந்து வெளிப்படும் வித்துகள் தானியங்களில் படிகின்றன. அவ்விதைகளை மீண்டும் பயிரிடப் பயன்படுத்தும்போது இந்நோய் தோன்று கிறது. எனவே இந்நோய் விதையுடன் இணைந்த நோயாகும். சுட்டுப்பாடு. கரிப்பூட்டை நோய்க் கதிரிலிருந்து எடுத்த விதைகளைப் பயிரிடப் பயன்படுத்தலைத் தவிர்த்தல் வேண்டும். நோய்த்தாக்கமுற்ற சுதிர் களைத் தனியே எடுத்து எரித்துவிட வேண்டும். விதையுடன் ஒரு கிலோவுக்கு அக்ரசான் அல்லது செரசான் 2 கிராம், கந்தகத்தூள் 4 கிராம் ஆகிய ஏதாவதொன்றுடன் கலந்து விதைக்க வேண்டும். உதிரிக்கரிப்பூட்டை (Loose smu). இந்நோயை ஸ்பேசிலோதிக்கா குரூயேன்டா (sphacelotheca cruenta) என்னும் பூசணம் தோற்றுவிக்கிறது. இந்நோயால் தாக்கமுற்ற பயிர் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். அத்தகைய பயிர் பிற பயிர்களை விட முன்னதாகக் கதிர்விடும். கதிர்களில் உள்ள தானி