கரிப்பூட்டை நோய் 599
யங்கள் வித்துக் கூடுகளாக மாறும். நோயுண்ட கதிர்களில் தானிய மணிகள் சுருக்கமாக அமைந் திருக்கும். இந்நோயும் விதைகளின் மூலமாகவே பரவுகிறது. மணிக்கரிப்பூட்டை நோய்க்குக் கூறப் பட்டுள்ள முறைகள் இந்நோயையும் கட்டுப்படுத்தும். தலைக்கரிப்பூட்டை (heat smut) ஸ்பேசிலோதிக்கா ரெய்லியானா (sphacelotheca reiliana) என்னும் இந் பூசணம் இந் நோயைத் தோற்றுவிக்கிறது. நோயின் அறிகுறியும் கதிரிலேயே தோன்றும். நோயால் தாக்கமுற்ற பயிரில் தானியங்கள் அடங் கிய கதிர் தோன்றுவதில்லை, கதிர் முழுதும் ஒரு பெரிய வித்துக்கூடாக மாறியிருக்கும். வித்துக்கூடு ஒரு மெல்விய உறையால் சூழப்பட்டிருக்கும். அவ் வுறை கிழிந்தால் கரிப்பொடி போன்ற பூசண வித்து களும், உள்ளே அமைந்துள்ள நார்க் கொத்தும் வெளிப்படும்.பூசண வித்துகள் நிலத்தில் உதிர்ந்து மறு பருவத்தில் பயிரிடப்படும் சோளப் பயிரைத் தாக்கித் தலைக்கரிப்பூட்டை நோயை உண்டாக்கு கின்றன. இந்நோய் மண்ணுடன் இணைந்த நோயா கும். கட்டுப்பாடு. நோயால் பாதிக்கப்பட்ட பயிரை அப்புறப்படுத்திவிட வேண்டும். பூசணவித்துக்கள் நிலத்தில் விழுவதைத் தவிர்ப்பதால் பருவத்திற்கு இந்நோய் மண்ணிலிருந்து பரவாமல் தடுக்கப்படு கிறது. நீளக் கரிப்பூட்டை (long smut). இந்நோய் டாலிப் போஸ் போரியம் எஃரென்பெர்கி( Telyposborium ehr n bergil) என்னும் பூசணத்தால் உண்டாகிறது. இந் நோயால் கதிரிலுள்ள சில மணிகள் வித்துக்கூடுகளாக மாறுகின்றன. இவ்வித்துக்கூடுகள் மிகவும் நீளமாக இருக்கும்.அவை வெண்மை நிறமாகத் தென்படும். மணிக்கரிப்பூட்டை, உதிரிக் கரிப்பூட்டை ஆகிய இரு நோய்களால் ஏற்படும் வித்துக் கூடுகளைவிட இந் நோயால் ஏற்படும் வித்துக் கூடுகள் மூன்று அல்லது நான்கு மடங்கு நீளமாக இருக்கும். மண்ணில் பரவுதல். லித்துக் கூடுகள் விழுந்து கலந்திருக்கும். அவை முளைத்துப் பெசிடியோ வித்து கள் தோன்றுகின்றன. இவ்லித்துகள் காற்று மூலம் பரவுகின்றன. அவை கதிரின் பூக்களைத் தாக்கித் தானியங்கள் தோன்றுவதற்கு மாறாக வித்துக்கூடு களைத் தோற்றுவிக்கும். இந்நோய் காற்று மூலம் பரவுகிறது. கட்டுப்பாடு. நோயுண்ட கதிர்களைத் தொகுத்து எரித்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் பூசண வித்துகள் காற்று மூலம் பரவுதலைத் தவிர்க்கலாம். கம்பின் கரிப்பூட்டை நோய். இந்நோய் டாலிப் போஸ்போரியம் பெனிசிலேரியே (Tolyposporium pancillariae) என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கதிரில் ஒருசில தானியங்கள் வித்துக் கூடுகளாக மாறுகின்றன. வித்துக்கூடுகள் மணிகளை கரிப்பூட்டை தோய் 599 விடப் பெரியவையாகவும் பசுமையாகவும் இருக்கும். வித்துக்கூடு மெல்லிய உறையால் சூழப்பட்டிருக்கும். உறை கிழியும்போது உள்ளேயுள்ள கரிய பொடி போன்ற பூசணலித்துகள் வெளிப்படுகின்றன. பரவுதல். மண்ணுடன் இணைந்த பூசண வித்து கள் நாளடைவில் முனைத்துப் பெசுடியோ வித்து களை வெளிப்படுத்துகின்றன. வை காற்றின் மூலம் கதிர்களைத் தாக்கி நோயை ஏற்படுத்து பரவிக் கின்றன. கட்டுப்பாடு. நோயுண்ட கதிர்களைப் பிடுங்கி எரித்து விடுதல் வேண்டும். இதனால் வித்துக்கூட்டில் தோன்றும் வித்துகள் அழிக்கப்படுவதால் நோய் மீண்டும் தோன்றாமல் தவிர்க்கப்படுகிறது. கோதுமையில் உதிரிக்கரிப்பூட்டை நோய். உஸ்டி. லாகோ ட்ரிடிசி (ustilago tritic) என்னும் பூசணத் தால் இந்நோய் உண்டாகிறது.. நோயுண்ட பயிரில் கதிர், மணிகளுக்கு மாறாக வித்துக்கூடுகளைத் தாங்கி நிற்கும். கதிரிலுள்ள மணிகள் யாவும் வித்துக் கூடுகளாக மாறியிருக்கும். வித்துக்கூடுகளிலுள்ள மெல்லிய உறை கிழிந்து கரிய பொடி போன்ற பூசண வித்துகள் சிதறும். நோயுண்ட கதிர் மணியற்றுக் குச்சியாகக் காணப்படும். பரவுதல். நிலத்தில் உதிர்ந்த வித்துகள் முளைத் துப் பெசிடியோ வித்துகள் தோன்றுகின்றன. அவை காற்றின் மூலம் பரவிக் கதிரிலுள்ள பூக்களைத் தாக் கும்; பூவின் சூலகமுடி மேல் படிந்து முளைத்துச் சூல்பையை அடையும். சூல்பை விதையாகும்போது பூசணமும் அவ்விதையுள் இணைந்திருக்கும். அவ் விதைகளைப் பயிரிடும்போது நோய் பரவும். கட்டுப்பாடு. விதைகளைக் குளிர்ந்த நீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அவற்றை 54°C வெப்பநீரில் 10 நிமிடங்கள் அமிழ்த்தி எடுக்க வேண்டும். குளிர்ந்த நீரில் விதையை நனைத்து வைப்பதால் விதையிலுள்ள பூசண இழை வளரத் தூண்டப்பட்டுப் பின் வெப்பநீரில் அமிழ்த்தி எடுப்ப தால் பூசண இழை அழிக்கப்படுகிறது. கரும்பில் கரிப்பூட்டை நோய் உஸ்டிலாகோ சைட்டாமினே (ustilage scitamined) என்னும் பூசணத்தால் இந்நோய் தோன்றுகிறது. நோயுற்ற செடிகள் வளர்ச்சி குன்றி மிகுதியான தூறுகளைக் கொண்டிருக்கும். இவ்வாறு ஏற்படும் தூறுகள் சிறுத்தும் தோகைகள் குறுகியும் நீளமான கணுவிடைப் பகுதியைப் பெற்றும் இருக்கும். நோயுற்ற கரும்பின் நுனியில் சாட்டை போன்ற கருமை நிற உறுப்பைக் காணலாம். இவ்வறிகுறியே இந்நோயை எளிதில் கண்டறிய உதவுகிறது. பயிரின் இளம்பருவத்தில் இச்சாட்டை அறிகுறி தோன்றி னால் அப்பயிர் இறுதியில் காய்ந்து விடும். இச்சாட் டையின் நீளம் 1.5-2 செ. மீட்டர் வரையிருக்கும். சாட்டை முதலில் வெண்மையான தோலால்