பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 கரிம அளவறி பகுப்பாய்வு

602 கரிய அளவறி பகுப்பாய்வு கார்பனின் சதவீதத்தை மட்டும் கண்டறிவ தற்கு ஈர நிலை எரிதல் (wet combustion) எனும் முறை பயன்படுகிறது. ஆய்வுக்குள்ளாகும் பொருளைச் சல்ஃப்யூரிக் அமில - பொட்டாசியம் (அல்லது வெள்ளி) டைக்ரோமேட் கலவையால் ஆக்சிஜனேற்றம் செய்து, பெறப்படும் CO,ஐச் சோடியம் ஹைட்ராக்சைடில் உறிஞ்சியோ, நேரடி யாக வளிமத்தின் பருமனை அளந்தோ மதிப்பீடு செய்யலாம். வினைத்தொடர் நிறச்சாரல் பிரிகை (reaction chromatography) எனும் உத்தியினால் 20 கார்பன், ஹைட்ரஜன் ஆகியவற்றின் சதவீதத்தை நுட்பமாக (அவை மிக நுண்ணிய அளவிலேயே இடம் பெற்றிருப்பினும்) அறியலாம். இம்முறையில் கரிமச் சேர்மத்தை ஒரு குறிப்பிட்ட எடையில் எரித்து வெளியாகும் CO, வளிமத்தையும், நீர் ஆவி யையும் தக்கதொரு நிறச்சாரல் பிரிகைக் குழலில் (chromatographic column) செலுத்த வேண்டும். பிரிகைப் படத்தில் பதிவாகியுள்ள வரைகோட்டின் உயரம் அல்லது (இடைப்பட்ட) பரப்பளவு ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்றை அளந்து, அதனின்றும் சதவீதங்களைக் கணக்கிடலாம். ஆக்சிஜன். ஆக்சிஜனை நேரடியாக மதிப்பிடும் முறையில் கரிமப் பொருளை நைட்ரஜன் வளி ஓட்டத்தில் சூடுபடுத்தி நீர், கார்பனின் ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன்களாக மாற்றி, இவ்வளிமக் கலவையைக் கிராஃபைட் தண்டு வழியாக 1150 C வெப்பநிலையில் செலுத்தி அனைத்து ஆக்சிஜனையும் கார்பன் மோனாக்சைடாக மாற்ற வேண்டும். இவ்வாறு உருவாகும் கார்பன் மோனாக்சைடை 1,0. கொண்டு CO, ஆக ஆக்சிஜனேற்றம் செய்தல் வேண்டும். இதனால் விளையும் அயோடின் அல்லது கார்பன் டைஆக்சைடை அளவிட்டு ஆக்சிஜனின் சதவீதத்தைக் கணக்கிடலாம். னைப் 1,0, + 5CO - I, + 5C0, பொதுவாக இச்செயல்முறை கடினமானதாகையால் ஆக்சிஜ மறைமுகமான வேறுபாட்டு முறையைக் கொண்டே அளந்தறிவது வழக்கமாகும். சேர்மத்தில் இடம் பெறும் மற்ற தனிமங்களின் மொத்த சதவீத அளவைக் கூட்டி. இக்கூடுதல் தொகையை நூறிலிருந்து கழித்து ஆக்சிஜனின் சதவீதம் பெறப்படுகிறது. நைட்ரஜன், நைட்ரஜனை அளவறி பகுப்பாய் வினால் மதிப்பிடுவதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை (1) டூமாஸ் (Dumas) முறை: தெரிந்த எடை கொண்ட கரிமப் பொருளைத் தாமிர ஆக்சைடுடன் கலந்து CO, வளிம ஓட்டத்தில் சூடு படுத்தி,தமை நிலையில் வெளியாகும் நைட்ரஜனைச் கரைசலின் மீது சேகரித்து வளிமத்தின் பருமனை அளவிட வேண்டும். இவ்வழிமுறையில் கரிமப் பொருளிலுள்ள மொத்த நைட்ரஜன் சதவீதம் அளந்தறியப்படுகிறது. (2) கெல்டால் முறையில் (Kjeldahl method) கரிமப் பொருள் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் ஒரு வினையூக்கி உடனிருக்கச் சூடு படுத்தப்படுகிறது. இதனால் சேர்மத்திலுள்ள நைட் ரஜன் யாவும் அமோனியம் சல்ஃபேட்டாக மாற்றப் படும். இதை மிகையான அளவு சோடியம் ஹைட் ராக்சைடுடன் சூடுபடுத்தி, அம்மோனியா வளிமத்தை வெளியேற்ற வேண்டும். இந்த அம்மோனியாவைத் தெரிந்த மிகையளவு நீர்த்த நியம போரிக் அமிலத்தில் உறிஞ்சி, நடுநிலையாக்கப் பெறாத போரிக் அமிலத் தைச் சோடியம் ஹைட்ராக்சைடுடன் நடுநிலையாக்கி நைட்ரஜனை அளந்தறியலாம். சேர்மத்தில் நைட்ரஜனின் சதவீதம்: (V₂-V₁)XN₁ 14 Vj : கலக்கப்பட்ட 1000 போரிக் சமானப் பருமனளவு 100 xV X W அமிலத்தின் காரச் V. : எஞ்சியுள்ள போரிக் அமிலத்தின் காரச் சமானப் பருமனளவு 3 Vg :வினைக்குட்படுத்தப்பட்ட அம்மோனியம் சல்பேட் கரைசலின் பருமனளவு சல்ஃ.

சல்ஃபேட் கரைசலின் V. : சேர்மத்திலிருந்து சிதைவுறுத்திப் பெறப்பட்ட அம்மோனியம் மொத்தப் பருமன் W : சேர்மத்தின் எடை செய் இம்முறையில் வினையூக்கியைத் தேர்வு வதில் மிகுந்த கவனம் தேவை. நைட்ரஜனைக் கொண்ட வெவ்வேறு கரிம மூலக்கூறுகளுக்கு வெவ் வேறு வினையூக்கிகள் தேவைப்படுகின்றன. யூரிக் பிற தனிமங்கள், கந்தகம், ஹாலோஜன், பாஸ்ஃ பரஸ் போன்ற பிற தனிமங்களுக்கு முறையே சல்ஃப் அமிலமாகவும், ஹாலைடு உப்புகளாகவும், பாஸ்ஃபாரிக் அமிலமாகவும் மாற்றி அளவறிதல் எளிய வழிமுறையாகும். கேரியஸ் முறையில் கரிமப் பொருளைப் புகைபடிந்த நைட்ரிக் அமிலத் துடன் மூடிய குழாயில் சூடுபடுத்த வேண்டும். சேர் மத்திலுள்ள சுந்தகம் யாவும் சல்ஃப்யூரிக் அமிலமாகி விடும். இதனுடன் மிகையளவு பேரியம் குளோரைடு கரைசலைச் சேர்த்து, பேரியம் சல்ஃபேட்டாக வீழ் படியவைத்து, வீழ்படிவை வடிகட்டி உலர்த்தி எடை யிடலாம். S + 6 HNO H,SO, + 6NO, + 2H,O BaCl, + H,SO, → BaSO, + 2 HCI ஹாலோஜன்களை இந்த முறையில் அளவறி வதற்கு. நைட்ரிக் அமிலத்துடன் காய்ச்சிய பின்பு வெள்ளி நைட்ரேட் கரைசலை மிகையளவில்