பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிம அளவறி பகுப்பாய்வு 603

சேர்த்து, வீழ்படிவாகும் வெள்ளி குளோரைடை வடிகட்டி. உலர்த்தி எடையறிய வேண்டும். ஹாலோஜன், கந்தகம் இரண்டிற்குமே பொதுவான பிறிதொரு முறையில் சேர்மத்தை மிகையான அளவு ஆக்சிஜனில் எரித்து, கந்தகத்தின் ஆக்சைடுகளை நடுநிலையாக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு சுரைசலிலும், ஹாலோஜன்களைச் சோடியம் பைசல் ஃபைட் கரைசலிலும் உறிஞ்சி எடையறியலாம். சில அவை ஒவ் விளையுறு தொகுதிகள். கார்பாக்சில், ஹைட் ராக்சில், நைட்ரோ மற்றும் அமைடு போன்ற வினையுறு தொகுதிகளை அளவறிய வொன்றுக்குமான சிறப்பு வினைகளை நிகழ்த்த வேண்டும். நடுநிலையாக்கல். ஆக்சிஜனேற்ற-ஒடுக் கம், வீழ்படிவாக்கல், குறுக்கவினை, வளிம வெளி யேற்றம் போன்ற வினைகள் இவற்றில் அடங்கும். சில உத்திகளில், வினையுறும் வேதிப் பொருளின் அளவை வினையின் தொடக்கத்திலும், முடிவிலும் அறிந்து வினையுறும் தொகுதியின் சதவீதத்தைக் சுணக்கிடலாம். வினை விளை வினைகளில் பொருள்களுள் ஒன்றை அளவறியலாம். பெரும் பாலான கரிமச் சேர்மங்கள் நீரில் கரைவதில்லை யாதலால், கரிமக் கரைப்பான்களையே இவ்வழி முறைகளில் பயன்படுத்தி, நீரிய ஊடகத்தில் நிகழ்த்த வொண்ணா வினைகளைக்கூட நிகழ்த்தலாம். சில கரிமக் கரைப்பான்கள் வினையுறு தாகுதிகளின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையை உயர்த்த வல்லவை. இதன் விளைவாக வினையுறு தொகுதி யின் வினைத்திறன் வினையுறு கூடுகிறது. சில தொகுதிகளின் சிறப்பு வினைகளில் நீர் மூலக்கூறு விகிதவியலின் படி (stoichicmetry) செலவழியும் அல்லது விளைவாகும். கார்ல்-ஃபிஷர் (Car)-Fisher) வினைப்பொருளைப் பயன்படுத்தி வினைப்படு அல்லது வினைவிளை நீரின் அளவைப் பருமனறி பகுப்பாய்வுக் குட்படுத்தி அறியலாம். பிற முறைகள். பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் புறதா மற்றும் அகச்சிவப்பு ஒளியை உறிஞ்ச வல்லவை. இந்த நிகழ்ச்சியின் தன்மை ஒளி அளவு வரைபடத் ஒளி அதிர்வு எண் (intensity-fréquency) தில் நன்கு தெரியும். இவ்வரைபடம் (அகச்சிவப்பு உறிஞ்சலைப் பொறுத்தவரை) ஒவ்வொரு மூலக் கூறுக்கும் ஒரு கைரேகையைப் போன்றதாதலின். அகச்சிவப்பு ஒளிக்கதிரைக் கரிமப்பொருளின் மீது பாய்ச்சி, அதன் விளைவாகக் கிடைக்கப் பெறும் நிற நிரலைக் கூர்ந்து நோக்கி அதிலுள்ள கோடுகளின் உயரத்தை நுட்பமாக அளந்து சேர்மத்திலுள்ள வினையுறு தொகுதியின் அளவையும். கலலையாக கட்டுப் இருப்பின், உட்கூறுகளின் (constituents) சதவீதத்தை யும் ஒரு சேர்மத்தைக் கணக்கிடலாம். பாடாகச் சிதைவுறுத்தி, விளையும் உறுப்புகளையும் அயனிகளையும் பொருண்மை-நிறநிரல் முறை வாயி லாக அளந்து பகுப்பாய்வு நிகழ்த்தலாம். பெட்ரோ கரிம அளவறி பகுப்பாய்வு 603 லியப் பொருள்களின் இயல்பை அறிவதற்கு இம் முறை ஏற்றதாகும். ஒரு சேர்மத்தையோ, வினையுறு தொகுதி யையோ அளவறி பகுப்பாய்வுக்குட்படுத்தும்போது, பிற சேர்மங்களிலிருந்தோ வினையுறு தொகுதிகளி லிருந்தோ குறுக்கீடு (interference) நேராமல் காப்பது தேவை. இதைக் கருத்தில் கொண்டு கரிம அளவறி பகுப்பாய்வில் வாலை வடித்தல், அயனிப்பரிமாற்றம். நிறநிரல் முறை, சாறு இறக்கல், விரவல் ஆகிய இயற்பியல் முறைகளைச் சேர்மத்தைத் தூய்மை யாக்கும் செயலில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. வினையுறு தொகுதிகளுக்கு இடைப்பட்ட இடை யீட்டை த் தவிர்க்க அளவறியப்படும் வினைத் தொகுதியைத் தவிரப் பிறவற்றைத் தக்க வினை மூலம் தற்காலிகமாகச் செயலற்றதாக்கிவிட வேண்டும். பொருண்மை நிரலியல், வளிம நிறச்சாரல் பிரிகை ஆகிய நுண்திறன் வாய்ந்த முறைகளினால் ஒரே நேரத் தில் ஒரு கலவையைப் பிரித்து, உட்கூறுகளைப் பகுத் தறிந்து அளவறிதலும் செய்யலாம். ஓரளவு ஆய்வுப் பொருளைக் கையாள்வதாலும், பகுப்பாய்வுக்கு முன்பாகச் செறிவூட்டம் செய்வதாலும் மில்லியனில் ஒரு பங்கு (ppm) நூறுகோடியில் ஒரு பங்கு (ppb) என்னும் நுண்ணிய அளவில் இடம் பெறும் உட் கூறுகளை நுணுக்கமாக அளக்கலாம். ஒரு குறிப்பிட்ட அயனியால் மட்டும் பாதிக்கப் படவல்ல மின்முனைகளைப் பயன்படுத்தி அளவறிதல் நிகழ்த்தலாம். சான்றாக, யூரியேஸ் எனும் நொதி யால் வினையூக்கப்படும் யூரியா-நீராற்பகுப்பு வினை யில் விளையும் அம்மோனியம் அயனியால் மின்ன ழுத்த மாற்றம் காணக் கூடிய மின்முனைகளைப் பயன்படுத்தி இவ்வினையில் பங்கேற்கும் பொருள் களின் செறிவை அறியலாம். குறிப்பிட்ட வினையுறு தொகுதிகளுக்கான அளவறி பகுப்பாய்வு முறைகள் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளன. கூறு இவையல்லாமல் மூலக்கூறு எடைகளைக் கண் டறியும் முறைகளிலும் சேர்மத்தின் வகையீட்டுக்குத் தகுந்தவாறு வழிமுறைகள் வேறுபடுகின்றன. எடுத் துக்காட்டாக, ஒரு கரிம வகை அமிலத்தின் மூலக் எடையைக் கண்டுபிடிப்பதற்கு வெள்ளி உப்பு முறை பயன்படுகிறது. குறிப்பிட்ட எடையில் எடுத் துக் கொள்ளப்பட்ட அமிலத்தை முழுமையாக வெள்ளி உப்பாக மாற்றி, அவ்வெள்ளி உப்பை வெப்பச் சிதைவுக்குட்படுத்தி, விளைவாகும் உலோக வெள்ளியை எடையிட்டு, அமிலத்தின் உப்பு மூலத் திறனைப் பயன்படுத்தி அமிலத்தின் மூலக்கூறு எடை யைக் கணக்கிடலாம். ஒரு கரிம வகைக் காரத்திற்கு (அமீனுக்கு) மூலக்கூறு எடை மதிப்பிட, குளோரோ பிளாட்டினிக் அமிலத்துடன் வினையுறுத்தி கிடைக்