கரிமக் .கழிவுப் பொருள் 625
இயக்கங்களில் பங்கேற்றும். மாறியும் வருகின்றது. இவை வேதி அடிப்படையில் கனிம, கரிமப் பொருள் களாக உள்ளன. எண்ணிக்கையில் பலவானாலும், இவற்றில் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகம், பாஸ்ஃபரஸ், கால்சியம் ஆகியவையும் மேலும் சில பொருள்களுமே புவியில் மாறாத சுழற்சி யில் ஈடுபட்டுள்ளன. சில சுழற்சிகள் சிறியவை; மற் றவை சிக்கலானவை. இவற்றில் கார்பன், நைட்ரஜன் ஆகியவற்றில் சுழற்சிகள் மிக மிக முக்கியமானவை. ஏ னெனில் இச்சுழற்சிகளே உயிரிகளின் முதன்மைக் கரிமப்பொருள்களை மீண்டும் மீண்டும் மீட்சியடையு மாறு செய்கின்றன. யாகக் கரிமக் கழிவுகள். உயிரிகள் தம் வாழ்வியல் செயலுக்குத் தேவையான பல வேதிப்பொருள்களை மண், நீர்,காற்று என்னும் சூழ்நிலைக் காரணிகளி லிருந்தே பெறுகின்றன. உயிரிகளின் மொத்த எடை ஹைட்ரஜன், யில் 95% கார்பன், நைட்ரஜன். ஆக்சிஜன் என்னும் நான்கு தனிமங்களும் முதன்மை காணப்படுகின்றன. எஞ்சியுள்ள 5% இல் ஏறக்குறைய 30 தனிமங்கள் உள்ளன. தாவரங் களால் எடுத்துக்கொள்ளப்படும் இவ்வேதிப்பொருள் கள். விலங்குகளின் மூலமாகவும், பின்னர் மண்ணின் நுண்ணுயிரிகள் மூலமாகவும், மீண்டும் சூழ்நிலைக்கே திரும்பி வருகின்றன. அதாவது. பசுந்தாவரங்கள் ச்சேர்க்கையினால் கார்போஹைட்ரேட் என்னும் சிக்கலான சரிமக் கூட்டுப் பொருளை உண்டாக்கு கின்றன. இதிலிருந்து தாவரங்கள் தமது ஏனைய கரிமக் கூட்டுப்பொருள்களையும் புரதம், நியுக்ளியிக் அமிலம், கொழுப்பு முதலியவற்றையும் உருவாக்கு கின்றன. இத்தகைய கரிமக்கூட்டுப் பொருள்களின் ளிச் லைகளாக விளங்கும் தாவரங்களை விலங்குகள் உணவிற்காகச் சார்ந்து வாழ்கின்றன. விலங்குகள் தாவரங்களை உண்ணும் போதும், தாவரங்களை உண்ட விலங்குகளை. சில ஊன் உண்ணிகள் தின் னும்போதும் தாவரப் புரதம் விலங்குப் புரதமாகவும் உடலின் பிற கரிமக் கூட்டுப்பொருள்களாகவும் மாறுகிறது. . விலங்குகளின் கழிவுகளும் (nitrogenous wastes) தாவரங்களில் உதிரும் இலைகளும், மடியும் கிளை களும், வேர்களும், இறந்துவிடும் விலங்குகளும், மற்றும் சாக்கடைக் கழிவுகளும். தொழிற்புரட்சியின் விளை வாக நாடெங்கும் விரவியிருக்கும் தாள்,கரும்பு, நார், தோல், உரம் போன்ற தொழிற்சாலைகளி லிருந்து வெளியேறும் கழிவுகளும் இறுதியாக மண்ணை வந்தடைகின்றன. இக்கரிமக் கூட்டுக் கழிவுகளைப் படிப்படியாகச் சிதைப்பதிலும், அவற்றி லுள்ள சிக்கலான கூட்டுப்பொருள்களை எளியனவாக மாற்றிக் கார்பன். நைட்ரஜன் போன்ற தனிமங்களை மீட்சி அடையச் செய்வதிலும், நுண்ணுயிரிகள் பயனுடைய பங்காற்றுகின்றன. VOL 7 கரிமக் கழிவுப் பொருள் மீட்சி 625 கரிமக் கழிவுகளின் வேதிச்சேர்க்கை. கரிமக் கழிவு கள் வேதி அடிப்படையில் மிகவும் சிக்கலான கரிமக் கூட்டுக்கலவைகளாக உள்ளன. சிக்கலான கார்போ ஹைட்ரேட்டுகள். எளிய சர்க்கரைப் பொருள்கள், செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ், பெக்ட்டின், ரெசின்கள், பிசின்கள், ஆல்கலாய்டுகள், ஆல்டீஹைடு கள் கீட்டோன்கள். கரிம அமிலங்கள், ஃபீனல் கூட்டுப்பொருள்கள், டானின், ஹைட்ரோகார்பன்கள் நிறமிகள் போன்றவற்றின் வடிவில் கரிமப்பொருள்கள் மண்ணை வந்தடைகின்றன. இத்தகு கழிவுகள் சிதைவடையாத நிலையிலும், அரைகுறையாகச் சிதைவடைந்த நிலையிலும் இருக்கக்கூடும். மண்வாழ் நுண்ணுயிரிகள். ஒரு மிதவெப்ப நிலத்தி லிருந்து எடுக்கப்பட்ட ஒரு தேக்கரண்டி மண்ணில் மட்டும், 500 கோடி பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிரிகளும், பத்து லட்சம் புரோட்டோசோ வான்கள் என்னும் உயிரிகளும் ஒரு செல் இவற்றைத் இவற்றின் உயிரிசு 2 லட்சம் பாசிகளும் இருக்கக்கூடும். தவிர ஓரளவு பெரிய உயிரிகளான மண்புழு. கறையான். சிறுபூச்சிகள். எறும்பு, ஆகியனவும் மண்ணில் வாழும் புழுக்கள் ளாகும். ந்த நுண்ணுயிரிகள் மண்ணைத் தம் வாழ்விடமாகக் கொண்டு ஒவ்வொரு நிலத்திலும் முனைப்புடன் செயல்புரிகின்றன. தம் வாழ்விற்குத் தேவையான ஆற்றலைப் பெறவே இவ்வுயிரினங்கள் கழிவுகளைச் சிதைக்கின்றன. கரிமக் கழிவுகளின் சிதைவு. கரிமக்கழிவுகளில் உள்ள பொருள்களில் சர்க்கரை, எளிய புரதம், புரதக் கூட்டுப்பொருள்கள், ஹெமிசெல்லுலோஸ் போன்றவை விரைவில் சிதைவடையும். இவற்றை அஸ்பர்ஜில்லஸ், ஃபுயுசாரியம், ரைசோபஸ் போன்ற பூஞ்சைகளும், பேசில்லஸ், குரோமோ பாக்டீரியம். குளோஸ்டீரிடியம், மைக்ரோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோ மைசிஸ் போன்ற பாக்டீரியாக்களும் சிதைக்கின்றன. கழிவில் உள்ள கொழுப்பு, லிக்னின், ஹெமிசெல்லு லோஸ் போன்ற வேறு சில கூட்டுப்பொருள்கள் மெதுவாகச் சிதைகின்றன. இவற்றை ஆல்டர்நேரியா. அஸ்பர்ஜில்லஸ், கீட்டோமியம், ட்ரைக்கோடெர்மா வெர்ட்டீஸிலியம் போன்ற பல்வேறு வகைப் பூஞ்சை களும் பேசில்லஸ், குளாஸ்டீரியம், கிரிப்டோஃபேசுா சூடோமோனாஸ், விப்ரியோ, ஃபிளேவோபாக்டீரியம், ஸ்ட்ரெப்டோமைசிஸ் போன்ற பாக்டீரியாக்களும் சிதைக்கின்றன. சிதைவு நிலைகள். விரைவாக நடந்தாலும் மெதுவாக நடந்தாலும் சிதை வெனப்படுவது அடிப் படையில் ஓர் எரிதல் அல்லது ஆக்சிஜனேற்ற நிகழ்ச்சியே ஆகும். கரிமக் கூட்டுப் பொருள் களின் உலர்எடையில் பாதிக்குமேல் கார்பனும், ஹைட்ரஜனும் உள்ளமையால், கரிமப் பொருள்களின் சிதைவெனப்படுவது இவற்றின் ஆக்சிஜனேற்றம்