பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிமக்‌ கழிவுப்‌ பொருள்‌ மீட்சி 627

கால்சியம், மக்னீசியம் போன்றவற்றின் அயனிகளும் உண்டாகின்றன. கார்பன் வட்டம். உயிரிகளின் இன்றியமையாக் கரிமக் கட்டுமானப் பொருள்களான கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நியுக்ளியிக் அமிலம் போன்றவற்றில் கார்பனே முதன்மையாக உள்ளது. எனினும் கார்டனின் செறிவு வளி மண்டலத்தில் மிகக் குறைவே (0.03%1. கார்பன் டை ஆக்சைடு வடிவில் தாவரங்களால் பெறப்படும் கார்பன், தாவர மாவுப் பொருள்களாகிப் பின்பு விலங்குகளின் மூலமும், அவற்றின் கழிவுகளின் மூலமும் நிலத்தை வந்தடைந்து, அங்குள்ள நுண்ணுயிரிகளால் மீண்டும் வளி மண்டலத்திற்கே அனுப்பப்படும் நிகழ்ச்சியே கார்பன் வட்டம் (carban cycie) எனப்படும். கார்பன், காற்றில் கார்பன் டை ஆக்சைடாக உள்ளது. இதைப் பயன்படுத்துவதில் பசுந்தாவரங் களே முதலிடம் பெறுகின்றன. சூரியனின் ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்பட்டு, தாவரங்களில் மாவுப்பொருள்கள், புரதம், கொழுப்பு போன்ற கரிமக் கூட்டுப்பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. இவையே தாவரத் திசுக்களை உருவாக்குகின்றன. விலங்குகள் தாவரங்களை உண்ணுகின்றன. இதனால் கார்பன் கூட்டுப்பொருள்கள் விலங்குத்திசுவின் ஒரு பகுதியாகின்றன. தாவரங்களை உண் ணும் விலங்கு களை உணவாக்கிக் கொள்ளுவதன் மூலம் ஊன் உண்ணிகள், அவற்றின் கார்பனைப் பெறுகின்றன. உயிரினங்கள் மூச்சுவிடும் போதும் கார்பன் டை -ஆக் சைடு வெளியிடப்பட்டுக் காற்றில் கலக்கும். விலங்கு களின் கழிவுகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் கரிமக் கூட்டுக்கழிவுகள், மேலும் இறந்த தாவர, விலங்கு உடலங்கள் மண்ணுடன் கலக்கும் போதும், அவை நுண்ணுயிரிகளால் படிப்படியாகச் கார்பன் டை சிதைக்கப்படும்போதும். ஆக்சைடு காற்றில் மீண்டும் கலக்கிறது. ஓரளவு புவியில் நிலக்கரியாக, வளிமமாக. பெட்ரோலாக, சுண்ணாம்புப் பாறைகளாகக் காலப்போக்கில் படி கிறது. காற்றுமண்டலத்திற்கும் நீர்நிலைகளுக்கு மிடையே ஒரு மீள்தன்மையுடைய கார்பன் அயனிப் பரிமாற்றம் எப்போதும் நடந்தவண்ணம் கார்பன், உள்ளது. இவ்வாறு சூழ்நிலையிலிருந்து உயிரிகளுக்கும், உயிரிகளிலிருந்து மீண்டும் சூழ்நிலைக்கும் கார்பன் மீட்சியடையும் நிகழ்ச்சிகளின்போது ஏற்படும் கார்ப னின் ஆக்சிஜனேற்றமும், அப்போது உண்டாகும் ஆற்றலும் வெப்பமுமே உயிர் வட்டத்தின் வாழ்வு தொடர்ந்திட அடிப்படையாகவும், காற்றில் கார்பன் அளவை நிலைக்கச் செய்வனவாகவும் உள்ளன. நைட்ரஜன் வட்டம். உயிரிகளின் முக்கிய உடற் போன்ற அமிலம் கூறுகளான புரதம், நியுக்ளிக் வற்றிற்கு நைட்ரஜனும் ஓர் இன்றியமையாத் தேவை யாகும். நைட்ரஜன் காற்றில் 79% இருந்தாலும், கரிமக் கழிவுப் பொருள் மீட்சி 627 சில தாவரங்கள் இதை நேரடியாகப் பெறமுடிவதில்லை. மண்ணில் உள்ள ரோடோஸ்பைரில்லம் போன்ற தனித்து வாழும் பாக்டீரியாக்களும் பயறுவகைத் தாவரங்களின் வேர்முண்டுகளில் வாழும் ரைசோ பியம் பேசில்லஸ் போன்ற கூட்டுயிர் வாழ்க்கை நடத்தும் பாக்டீரியாக்களும், நாஸ்டாக், அனபீனா வளிமண்டல போன்ற நீலப்பச்சைப் பாசிகளுமே நைட்ரஜனை, நைட்ரேட் கூட்டுப்பொருள்களாக மண்ணில் நிலைக்கவைக்கின்றன. இதை உயிரியல் நைட்ரஜன் நிலைப்பாடு என்பர். இந்த 'நைட்ரேட்டு களையே அவற்றின் அயனி வடிவில் தாவரங்கள் உறிஞ்சி, உடற்புறத்தை உருவாக்கி வளர்கின்றன. விலங்குகள், தாவரங்களை உண்ணும்போது இத்தாவரப்புரதம் விலங்குப்புரதமாக மாற்றமடை கிறது. விலங்குகளின் வளர்சிதைமாற்றத்தின்போது புரதம் உடைக்கப்பட்டு நைட்ரஜன் நிறைந்த கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன. இந்தக் கழிவுகள், மற்றும் தாவர, விலங்குகளின் இறந்த உடலங்கள் ஆகியவை நிலத்தை வந்தடைகின்றன. இவை மண்ணிற்கு வரும்போது அங்குள்ள மண்வாழ் நுண்ணுயிரிகள் இந்தக் கரிம நைட்ரஜன் கூட்டுப்பொருள்களை அம்மோனியாவாக மாற்று கின்றன. குறிப்பாக அம்மோனியாவாக்கும் பாக்டீரி யாக்கள் இதைச் செயல்படுத்துகின்றன. மண்ணில் உண்டாகும் இந்த அமோனியாவே பல உயிர் வேதிச் சேர்க்கைகளுக்குத் தொடக்கமாகும். உடைய உண்டா அம்மோனியா, நீரில் கரையும் அம்மோனியக் கூட்டுப்பொருளாக மாறுகிறது. இதிலிருந்து அமோ னிய அயனியும் நைட்ரேட் அயனியும் கின்றன. இந்த அம்மோனிய அயனிகள் நேரடியாகத் தாவரங்களால் நைட்ரஜன் தேவைக்காக உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. ஆனால் அம்மோனியாவின் பெரும்பகுதி பிற வேதிச்சேர்க்கைப் பாக்டீரியங்களால் சிதைக்கப்படுகிறது. அதாவது, நைட்ரோசோயோ னாஸ் போன்ற நைட்ரஜனேற்றம் செய்யும் பாக்டீரி யாக்கள் அம்மோனியாவை நைட்ரைட் ஆக ஆக்ஸி ஜனேற்றம் அடையச்செய்கின்றன. இந்த நைட் ரைட்டை நைட்ரோபேட்டர் போன்ற பாக்டீரி யாக்கள் நைட்ரேட்டாக மாற்றுகின்றன. இவ்வித நைட்ரேட்டுகளே தாவரங்களால் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. சில நைட்ரஜன் நீக்கும் பாக்டீரியாக்கள் மண்ணில் உள்ள நைட்ரஜன் கூட்டுப்பொருள்களைத் தாக்கி அவற்றிலிருந்து நைட்ரஜனை வெளிப்படுத்தி வளிம மண்டலத்தை அடையுமாறு செய்கின்றன. நைட்ரஜன் போன்ற கரிமக் கழிவுப் பொருள் மீட்சியின் இன்றியமை யாமை. உயிரிகளின் பலநூறு வேதிச்சேர்க்கைகளில் தொடர்புடைய கார்பன் மீட்சியடைவதுடன், இன்றியமையாத் தனிமங்கள் உயிர்-நில - வேதிச் சுழற்சியின் (biogeochemical cycle) பிற முக்கிய தனிமங்களான சல்ஃபர், பாஸ்ஃபரஸ், கால்சியம் போன்றவையும் நுண்ணு யிரிகளால் கரிமக்