628 கரிம காலப் பாறைப் படிவுகள்
628 கரிய காலப் பாறைப் படிவுகள் கழிவுப் பொருட்கள். இறப்பு விலங்குகள் மழை தாவரங்கள் வளிமண்டல N2 இறந்த கரிமக் கழிவுகள் எரிதல் உயிரியல் நைட்ரஜன் நிலைப்பாடு நைட்ரேட் நுண்ணியிர்ச் சீதைவு நைட்ரஜன் நீக்கம் நைட்ரைட் அமோனியா நைட்ரஜன் வட்டம் கழிவுகள் சிதைவடையும்போது மீட்சியடைகின்றன. மீட்கப்பட்ட த்தனிமங்கள் உயிர் வட்டத்தின் இடைவிடாத சுழற்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சிகள் ஓர் ஒழுங்கான ஆற்றல் மாற்றமாக உருவெடுப்பதால். அனைத்து வகைக் கழிவுகளி லிருந்தும் தனிமங்கள் மீட்சியடைவது மட்டு மல்லாமல், சூழ்நிலையில் முதன்மைத் தனிமங்களின் அளவும் நிலையாக இருந்து வருகிறது. கரிமக் கழிவுப் பொருள், மீட்சியடையும்போது, மட்கு, பரப்பு ஒட்டுந்திறன் (adosorption) கொண்ட பெரும் மண் துகள்கள் தோன்றுகின்றன. மேலும், கரிமக் கழிவுப் பொருள் மீட்சி தாதுஉப்புக்களைத் தாவரங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கச்செய்தும், நிலப்பரப்பில் சில கனிமங்களின் குறைவைத் நிறுத்தியும் மண்ணை வளமுடையதாக்குகிறது. தடுத்து கே.ஆர்.பாலச்சந்திரகணேசன் கரிம காலப் பாறைப் படிவுகள் புவி தோன்றி 450 கோடி ஆண்டுகளாகின்றன. இக் காலத்தைச் சில கால அளவுகளால் பகுத்துள்ளனர். அவை முறையே தொகுதி (group), அமைப்பு (system), அடுக்கு (series), நிலை (stage), பகுதி {zone) எனப்படும். தொகுதி என்பது பெரும் பிரிவாகவும் பகுதி என்பது மிகக் குறைந்த காலத்தில் உருவான படிவுகளாகவும் அமைந்திருக்கும். 450 கோடி ஆண்டுகளும் நான்கு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன. உயிரிலாக் (azoic) காலம் (450-60 கோடி ஆண்டுகள்) தொல்லுயிர்க் (palaeozoic) காலம் (60-24), இடைநிலைக் (mesozoic) காலம் (24-6.5), அண்மைக் காலம் (6.5-.1) என்பன. இப்பகுப்புகள் அக்காலத்தில் மிக முக்கியமாசுக் கிடைத்த உயிரினம் அல்லது பாறை வகைகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டுள்ளன. எனப்படும் இவ்வாறு பகுக்கப்பட்ட அமைப்புகளுள் ஒன்றே கரிம காலப் கார்பானி படிவுகள் ஃபெரஸ் (carboniferous formation) பாறைப் படிவு களாகும். இப்படிவுகள் தொல்லுயிர்க் காலத்தின் இறுதியான படிவுகளாகும். உலகின் பல பகுதிகளில் இவற்றில் நிலக்கரிப் படிவுகள் மிகுதியாகக் கிடைப்ப தால் இவை கரிம காலப்படிவுகள் எனப் பெயர் பெற்றன. இக்காலப் படிவுகள்ஏறத்தாழ 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. இப்படிவு களின் கால அளவு ஆறுகோடி ஆண்டுகளாகும். இக் காலத்தில் தான் ஊர்வன முதன் முதலாகப் புவியில் தோன்றின. இக்காலத்தில் புவியின் வரலாற்றில் செடி கொடிகளும், மரங்களும், பூவில்லாத் தாவரங்களும் மிகுதியாகக்காணப்பட்டன.