630 கரிமச் சேர்மங்களின் பெரியடும் முறை
30 கரிமச் சேர்மங்களின் பெரியடும் முறை பாறையும் இக்காலத்தவை. பெர்மோ கார்பானி பெரஸ் காலத்தைச் சேர்ந்த படிவுகள் காஷ்மீரில் பஞ்சல் அடுக்கு எனப்படும். இக்காலத்தில் புவியின் தென் பகுதியில் தோன்றிய 'பாறைப் படிவுகள் கோண்டுவானாப் படிவுகள் எனப்படும். கோண்டு வானாப் படிவுகள் கள் உள்ள தால்பர் படிவுகள் கார்பானிஃபெரஸ் காலத்தைச் சேர்ந்தவை. மேல் ம தொல்லுயிர்க் காலத்தின் இறுதி நிலை கரிம காலம் ஆகும். இக்காலத்தின முடிவில் புவியின் பல பகுதிகளில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டன கடல்கள் நிலமாயின; நிலப்பகுதி கடலாயிற்று. புதிய மலைகள் தோன்றின. புதிய நிலப் பகுதிகள் ஏற்பட்டன. இம்மாற்றம் ஹெர்சீனியன் மாற்றம் அல்லது வேரிஸ்கன் எனப்படும். புதிதாக உருவான நிலப் பகுதி கோண்டுவானாப் பகுதி எனப்படும். இப்பகுதி இந்தியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, மடகாஸ்கர் பகுதிகளை ஒன்று சேர்த்த ஒரே நிலப்பகுதியாக மேல் கார் பானிஃபெரஸ் காலத்தில் காணப்பட்டது. இராம.ராமநாதன் கரிமச் சேர்மங்களின் பெயரிடும் முறை ள வகைப் வேதிச் சேர்மங்களின் பெயர்களும் அவற்றிற்குப் பெய ரிடும் முறைகளும் வேதியியலில் முக்கியமானவை. பெயரிடும் முறைகள் வேதிச் சேர்மங்களை படுத்துவதற்கும் பல்வேறு வகைச் சேர்மங்களின் அமைப்புகளுக்கிடையே உள்ள தொடர்பை அறிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. இம்முறைகள் வேதிச் சேர்மங்களின் அமைப்பைத் தெளிவாக விளக்குவன வாகவும் மூலக்கூறுகளின் பெயர்களுக்கும் அவற்றின் அமைப்புக்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்கு வனவாகவும் அமைய வேண்டும். இப்பெயரிடும் முறை, அமைப்புப் பெயரிடும் முறை எனப்படுகிறது. தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழமை யான பெயரிடும் முறைகள் தற்காலத்திலும் பயன் பட்டாலும், கரிமச் சேர்மங்களின் தொகுப்பும். எண் ணிக்கையும் பெருகப் பெருக, அவற்றிற்குப் பெயரிடு தலும் இன்றியமையாததாகிறது. 1892இல் ஜெனிவா வில் அகில உலக அறிவியல் வல்லுநர்கள் கழகம் ஜெனிவா பெயரிடும் முறையை நிறுவியது. இம்முறை, சிறப்பாக ஒன்றோடொன்று இணைந்த கார்பன் அணுக்களை மட்டும் கொண்ட எவ்வித வேற்றணு வின் மூலமும் பிணைக்கப்படாமல், கார்பன் அணு கள் மட்டுமே பொருந்துவதாக அமைந்துள்ளது. இம்முறையினால் சிக்கலான பல வினையுறு தாகுதி களையுடைய (functional groups) கரிமத் தனிமச் சேர்மங்கள் மற்றும் பல்வேறு வளையச் சேர்மங்கள் ஆகியவற்றின் பெயர்களைப் பெயரிட முடியவில்லை. ஜெனிவா பெயரிடும் முறையுடன் மிகவும் தொடர்புடைய மற்றொரு முறை ஜெர்மன் நாட்டு வேதியியலார் பெயில்ஸ்டைன் என்பாரால் உண்டாக் கப்பட்ட அனைத்து வேதிச் சேர்மங்களைப் பற்றிய குறிப்பு ஆகும். 1930 இல் அனைத்துலகத் தனி மற்றும் ஆக்க வேதியியல் கழகம் (IUPAC) நிறுவப்பட்டது. இக் கழகத்தால் புதிய பெயரிடும் முறை உருவாக்கப் பட்டது. இது 1950ஆம் ஆண்டில் தொடங்கி இன் றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. 1957 இல் பாரி ஸில் நடந்த ஒரு மாநாட்டில் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் வளைய அமைப்புகளின் பெயரிடும் முறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதைச் சுருக்கமாக விதிகள் எனக் குறிப்பர். 1962 இல் கார்பன் அல்லாத பிற தனிமங்களான ஹாலோ ஜன்கள், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம், செலீ னியம், டெலூரியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சேர்மங்களையும் பெயரிடும் முறை வகுக்கப்பட்டது. IUPAC 1957 வேதியியலில் விரிவாக்கப்பட்ட சில சிறப்புச் சேர்மங்களான ஸ்டீராயிடுகள், ஹைட்ரோகார் பன்கள், அமினோ அமிலங்கள், பெப்டைடுகள், நியூக்ளியிக் அமிலங்கள் ஆகியவற்றைப் பற்றி உரு வான ஆய்வுமுடிவுகள் கரிம வேதியியலில் பல அணு வகைகளைச் சேர்ந்த சேர்மங்களின் பெயர்களைக் குறிப்பாக கூறும் தனிப்பட்ட முறைகளைத் தோற்று வித்தன. அடிப்படைப் பெயரிடும் முறை, ஒரு சேர்மத்தின் அடிப்படைப் பெயர் ஒரு மூலக்கூறின் சில எளிய கருவின் பெயரின் அடிப்படையில் அமைந்துள்ளது. எகா: மெத்தேன், எத்திலீன், அசெட்டிலீன், கார் பனால், அசெட்டால்டிஹைடு. இத்தகைய கருவின் பெயருடன் உறுப்புகளின் பெயர்களைச் சேர்த்துச் சேர்மங்களின் பெயர்கள் உண்டாக்கப்படுகின்றன. எ.கா. மெத்தில் மெத்தேன், டைமெத்தில் மெத்தேன் ட்ரைமெத்தில் மீத்தேன். ஐசோபுரோப்பைல் அசெட் டிலீன், எத்தில் கார்பினால், ட்ரைமெத்தில் அசெட் டிக் அமிலம் என்பன. ஜெனிவா பெயரிடும் முறை. இது ஓர் எளிய முறையாகும். சேர்மத்தின் பெயர் முக்கிய சங்கிலித் தொடரைக் குறிக்கும் ஒரு சொல்லையும், வினை யுறு தொகுதிகள் போன்றவற்றைக் குறிக்கும் சொலலையும் முதலாவதாக அல்லது இறுதியாக ணைக்கும் ஒரு கூட்டுச் சொல்லாக அமையும். பெயரிலுள்ள ஒவ்வொரு தனிமமும் கூட்டுச் சொல் லில் குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஜெனி வாப் பெயர்கள், சேர்மத்தின் முக்கிய அமைப்பு, பதிலீட்டுத் தொகுதிகளின் தன்மை மற்றும் அவற் றின் எண்ணிக்கை, பிற நிபந்தனைகள் சமமாக இருக்கும்போது மிக அதிகப்படியான எளிய அமைப்பு களின் தத்துவம் ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படு கின்றன.