பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 கரிம பாஸ்‌ஃபரஸ்‌ சேர்மங்கள்‌

638 கரிபி பாஸ்ஃபரஸ் சேர்மங்கள் வும். ஆக்சிஜன் அணுவை வழி இணைப்பாகவும் கொண்ட சேர்மங்கள் ஆகும். பாஸ்ஃபீனின் சார்புப் பொருள்கள் இவ்வகைச் சேர்மங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஒற்றை, இரட்டை, ட்ரை அல்க்கைல் பாஸ்ஃபீன்களையும் (இவற்றின் அரை வழி ணைப் பொருள்களையும்) கரிம பாஸ்ஃபரஸ் சேர்மங்களின் தாய்ச் சேர்மங்களாகக் கருதுதல் வழக்கம். ஃபாஸ்பீனிலுள்ள ஹைட்ரஜன் அணுக்களை ஒற்றை இணைதிறன் கொண்ட கரிம உறுப்புக்களால் பதிலீடு செய்தால் பலவகைக் கரிம பாஸ்ஃபரஸ் அமைப்புகளை உருவாக்கலாம். பாஸ்ஃபரஸிற்கும் ஏனைய/ தொகுதிகளுக்கும் இடையே ஆக்சிஜன் அணுக்களைப் புகுத்தினால் கரிம பாஸ்ஃபரஸ் அமில வகைகளின் வாய்பாடுகளைப் பெறலாம். பல கரிம பாஸ்ஃபரஸ் மூலக்கூறுகள் ஒளி சுழற்றும் தன்மை உடைய வடிவங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. வினை களின் இயங்குமுறைகளை அறிவதற்கு முப்பரிமாண வேதியத் துப்புத்துலக்கிகளாக(stereochemical protes) வை பயன்படுகின்றன. R.P : மூலக்கூறில் இடம் பெறும் பிணைப்புறா எலெக்ட்ரான் இரட்டையைப் பிரித்து இரு வேறு சக இணைப்புகளில் ஈடுபடுத்தி னால் பாஸ்ஃபோரீன் R,P எனும் நிலைத்தன்மை மிக்க மூலக்கூறு கிடைக்கும் பாஸ்ஃபரஸ் அணுவுடன் இணையக்கூடிய கரிம வகைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும், ஆக்சி ஜன் மட்டுமன்றிப் பிற அணுக்களையும் இத்தொகுதி களில் புகுத்தலாம் என்னும் வாய்ப்பையும் கருத்திற் கொண்டால், உருவாகக்கூடிய மூலக்கூறு அமைப்பு களின் வகைகள் எண்ணற்றவையாகின்றன. பாஸ் ஃப்ரஸை வளையத்தின் ஓர் அணுவாகக் கொண்ட பல்வகைக் கண்ணிச் சேர்மங்கள் மட்டும் தனிவகை யாகின்றன. தயாரிப்பு. ட்ரை அல்க்கைல் பாஸ்ஃபைட்டுகள் லக்கைல் ஹாலைடுகளுடன் வினைபுரிகின்றன. இரு அவ்க்கைல் பாஸ்ஃபனேட்டுகள் விளைகின்றன. ற்கு மைகேலிஸ் அர்புசோவ் வினை எனப் பெயர். P(OR), + R'X R'P(O)(OR), + RX இவ்வினைக்கு அல்க்கைல் ஹாலைடின் வினைத்திறன் முதன்மையானதாகும். எனவே, அரைல் பாஸ்ஃபீன் களைத் தயாரிப்பதற்கு இவ்வழிமுறை ஏற்றதன்று. அரைல் பாஸ்ஃபரஸ் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு அரோமாடிக் ஹைட்ரோகார்பன்களுடன் PCI ஐ வினைப்படுத்தி, PC1, தொகுதியைப் புகுத்தலாம். ஃபிரீடல்-கிராஃப்ட்ஸ் வினையூக்கியாகிய நீரற்ற அலுமினியம் குளோரைடை இவ்வினையில் பயன் படுத்துவர். விளையும் அரைல் பாஸ்ஃபரஸ் டைகுளோ ரைடு மேலும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்ப ஈ னுடன் வினையுற்று டைஅரைல் பாஸ்ஃபீனஸ் குளோ ரைடுகளைத் தரும். கரிம உலோகச் சேர்மங்களுடன் பாஸ்ஃபரஸ் ஹாலைடுகளை வினைப்படுத்தி ட்ரை அல்க்கைல் மற்றும் ட்ரைகணல் பாஸ்ஃபீன்களைப் பெறலாம் என்றாலும், ஒரேயொரு P-C பிணைப்பை உள்ளடக்கிய சேர்மங்களைத் தயாரிக்க இம்முறை பின்பற்றப்படுவதில்லை. P-H பிணைப்புகளைக். கொண்ட கரிம பாஸ்ஃபரஸ் சார்புப் பொருள்களைக் கிளர்வுற்ற அல்க்கீன் அல்லது அசெட்டிலீன் பிணைப் புக்குள் புகுத்தி ஒற்றை P-C பிணைப்பைத் தோற்று விக்கலாம். P-H தொகுதி கார்போனைல் தொகுதி களுடன் வினைப்பட்டு d ஹைட்ராக்சி தொடர்புப் பொருள்களைத் தயாரிக்கலாம். வினைகள். சுரிமப் பாஸ்ஃபரஸ் சேர்மங்கள் பயன் மிக்க தொகுப்பு முறை வினைப்பொருள்களாகப் பயன்படுகின்றன. R, P = (R', + RC = 0 + R, C = CR, + R, PO விட்டிக் வினை எனும் இவ்வினை தொகுப்பு முறை யில் சிறப்பிடம் பெறுகிறது. வான பாஸ்ஃபோனியம் உப்பைக் கரிம அல்லது சுனிமக் காரத்துடன் வினைப்படுத்தி அல்க்கைலிபீன் பாஸ்ஃ போரேனைத் தயாரிக்கலாம். இவ்வினை உள்ளிட்ட பல கரிம பாஸ்ஃபரஸ் சேர்ம வினைகளுக்கு வெப்ப இயக்கவியல் வழி உந்து விசையாக இருப்பது வலி P = 0 இரட்டைப் பிணைப்பின் தோற்ற மாகும். வலிமைமிக்க பல்லுறுப்புச் சங்கிலியான பாலிஅசெட்டிலீன். வைட்டமின் -A முதற்கட்ட மான காரோடினாய்டுகள்.உயிர் வேதிப் பொருள்க ஸ்டீராய்டுகள் ஆகியவற்றின் தயாரிப்புகள் விட்டிக் வினை மூலம் எளிதாகின்றன. ளான பயன்கள். கரிம பாஸ்ஃபரஸ் சேர்மங்கள் பல்லுறுப் பாக்சு வினையூக்கிகள், மசகுச் சேர்ப்புப் பொருள் கள், தீ தாங்கவல்ல வேதிப்பொருள்கள், பயிர் வளர்ச்சித் திருத்திகள், பூச்சிக்கொல்லிகள். நெகிழி களுக்கு நெகிழ்வூட்டவல்ல பொருள்கள் (plasticisers), போன்ற தயாரிப்புகளில் பயனாகின்றன. கரிமத் தொகுப்புகளில் ஹெக்சாமெத்தில் பாஸ்ஃபரோமைடு (hexamethyl phosphoramide) எனும் பொருள் மின் மினைவுற்ற புரோட்டான் கொடாத கரைப்பானாசுப் பயன்படுகிறது. புற்று நோய் மருத்துவத்தில் வளைய பாஸ்ஃபமைடு ஈடுபடுத்தப்படுகிறது. புராட்டாசோ வாவிலும், கடல்வாழ் உயிரினங்களிலும் P-C பிணைப் புள்ள சேர்மங்கள் இடம் பெறுகின்றன, மாறாக மெத்தில் பாஸ்ஃபோனிக் அமிலச் சார்புப் பொருள்கள் பாலூட்டிகளுக்கு நச்சுப் பொருள்களாக அமைந்து விட்டதால் இரண்டாம் உலகப்போரில் கரிய