பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிம பாஸ்‌ஃபரஸ்‌ சேர்மங்கள்‌ 639

பாஸ்ஃபரஸ் சேர்மங்கள் நரம்பு இயக்கத் தாக்கு வளிமங்களாகப் (nerve gases) பயன்பட்டன. சரின், ட்ரிலான், சோமன், டாபுன் எனப்பட்டப் பெயர்களைக் கொண்ட நரம்புத்தாக்கு வளிமங்கள் யாவுமே சூரிய பாஸ்ஃபரஸ் சேர்மங்களாகும். சலவைத்தூளாகவும். கடின நீரை மென்னீராக்கும் பொருளாகவும் பயன்படும் சோடியம் ட்ரைபாலி பாஸ்ஃபேட்டின் எஸ்ட்டர், பயிர் மற்றும் விலங்கின வளர்சிதை மாற்றத்தில் மைய இடம் பெற்றுள்ளது. அடினோசின் ட்ரைபாஸ்ஃடேட் எனும் பொருள் மாற்றத்தின் போதும், ஒளிச்சேர்க்கை யின்போதும் நீராற்சிதைவுற்று அடினோசின் டைபாஸ்ஃபேட்டாக மாறுகிறது. அறை வெப்பநிலை யில் ஒரு நிலை நீரியக் கரைசலில் இவ்வினையின் விரைவு மிகக்குறைவு எனினும். நொதிகள் இவ் வினையை ஆயிரம் மடங்கு விரைவாக்குகின்றன. மே. ரா. பாலசுப்பிரமணியன் வளர்சிதை கரிம மண்கள் மண்ணில் காணப்படும் கரிமப்பொருளின் அளவு கொண்டு மண்ணை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை தாது மண், கரிம மண் ஆகும். தாது மண்ணில் கரிமப் பொருள்கள் 15-20% வரை காணப்படும். கரிம மண்களில் கரிமப் பொருள்கள் 20-95% வரை காணப்படும். 80% கரிமத்தன்மை பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். தாவரங்கள் பெருமளவில் வளருமிடத்திலும், சதுப்பு நிலத்திலும் நீர் தேங்கியுள்ள நிலங்களிலும் கரிய மண்கள் ஏற்படும். இத்தகைய நிலங்களில் தாவரங்கள் இறந்தபின் நீரில் அமிழ்ந்து விடுவதால் சிதைகின்றன. பாக்டீரியாக்கள், பூசணம், நீர் வாழ் நுண்ணுயிர்கள் மூலம் கரிமச் சேர்க்கைப் பொருள்கள் சிதைவுற நிலத்தில் மட்கு தோற்றுவிக்கப்படுகிறது. இச்செயலின் தொடர்ச்சியால் கரிமப் பொருள்கள் அனைத்தும் பழுப்பு அல்லது கறுப்பு நிற மாற்ற மடையும். அதாவது நுண்ணுயிர்கள் கரிமச் சேர்க் கைப்பொருள்களைச் சிதைத்துத் தோற்றுவிக்கும் பொருளுக்கு நிலமட்கு என்று பெயர். இது ஒரு சிக்கலான சேர்மம். இதற்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லை. தாவரங்களையும், நீரில் உள்ள தாதுப் பொருள்களையும் கொண்டு இம்மண்ணின் தன்மை அமையும். . T கரிம மண்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆனால் சில நாடுகளில் மட்டும் அது ஆக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படு கிறது. ஜெர்மனியில் 2,000,000 ஹெக்டேரிலும் ஸ்வீடன். அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய கரிம மண்கள் 639 டங்களில் முறையே 4,800,000. 1,200,000, 4,800,000, 10,000,000 ஹெக்டேரிலும் இம்மண் காணப்படுகிறது. கரிமச் சேர்க்கைப் பொருள்கள் மட்சிய நிலைக் கேற்ப இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஓரளவு மட்கிய கரிம மண்ணுக்குப் பீட் என்று பெயர் குறிப்பிடத்தக்க அல்லது நன்கு மட்கிய சூரிய மண்ணுக்கு நிலமட்கு என்று பெயர். பாக பீட் மண்ணில் எவ்வகைத் தாவரங்கள் உள்ளன என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால் நிலமட்கு மண்ணில், தாவரங்களின் பகுதிகள் முழுது மட்க எந்த வகைத் தாவரம் காரணமாகும் என்று கண்டுபிடிக்க இயலாமல் போகிறது.பீட் மண் பெரிய பருவெட்டு அல்லது சிறிய பருவெட்டுக் கொண்டிருக்கும். ஆனால் மட்கு மண் சிறிய துளிதம் மட்டுமே கொண்டிருக்கும். இதனால் காற்றின் மூலம். அரிப்புச் செயலின் விளைவாக டமாற்றம் ஏற்படும். பீட் மண்ணின் வகை. பீட் மண்ணை அது தோன்றிய மூலப்பொருளைக் கொண்டு படுவியற் படுகை பீட், இழையோடிய பீட், மரத்தன்மை கொண்ட பீட் என மூன்று வகையாகப்பிரிக்கலாம். பீட் மண்ணின் பயன். இம்மண் அதன் தன்மைக் கேற்றவாறு பல வகைகளில் பயன்படுகிறது. ஐரோப் பாவில் இது கரிமப் பொருளாகப் பயன்படுகிறது. இம் மண்ணின் தாதுப்பொருள்கள் மண்ணோடு சேர்க்கப் படுவதால் செம்மண்ணின் இயல்புடைய தன்மை நீரை உறிஞ்சும் தன்மை ஆகியவை மேம்படுகின்றன. இம்மண் பூந்தோட்டங்களிலும், நாற்றங்காலிலும் மிகு அளவு பயன்படுகிறது. பசுமை இல்லம், புல் மைதானம் தரை, குழிப்பந்தாட்டம், விளையாடும் ஆகியவற்றில் இம்மண் பயன்படுகிறது. இது எரி வழிகளில் பொருளாகவும், பயிர் செய்யவும் பயன்படுகிறது. நிலமட்கு. இது கருநிறம் படைத்தது. இதன் பரப்பளவு கூழ்களி நிலைப் பொருளின் பரப்பைவிட மிகுதி. இதன் ஆற்றலும் கூழ்களி நிலைப் பொருளை விட மிகுதி. நேரயனிகளைப் பரிமாறும் ஆற்றல் சூழ் களிகளுக்கு 100 கிராமிற்கு 5-150 மி. எடை வரை சமமாக இருக்கும். ஆனால் நிலமட்கிற்கோ 150-300 மி. வரை இருக்கும். நுட்ப வாற்றலும், குழைவியல்பும் களியைவிட நிலமட்கிற்கு மிகவும் குறைவு. க்காரணத்தால் நிலமட்கைக் கெட்டிக்களிமண் நிலத்திற்கு இடும்போது கடினத்தன்மை பெரிதும் குறையும். இணை அதன் மண்ணில் நிலமட்கை இடுவதால் பல நன்மைகள் ஏற்படும். மண் கருநிறமடைகிறது. மேலும் குளிர் நிலப்பகுதியில் நிலம் விரைவில் சூடேறும் நிலமட்கு மிகுந்துள்ள மண்ணில் நுண்ணுருண்டைகள் பெரு