பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 கரிம வினை வழிமுறை

642 கரிம வினை வழிமுறை காட்டாக, நீக்கல் வினைகளில் elimination rea- ctions)E, (ஒற்றை மூலக்கூறு வினை ) E. (இரட்டை மூலக்கூறு) என ருவகை உள்ளன. முதவாம் வகையில். Cl, Br போன்றதொரு தொகுதி வினைப்படு மூலக்கூறிலிருந்து அகன்று விளையும் கார்போனியம் அயனி புரோட்டான் நீக்கம் பெற்று இரட்டைப் பிணைப்பு (C=C) உருவாகிறது. E, வகையில் புரோட்டான் நீக்கமும் ஏனைய தொகுதி நீக்கமும் ஒரே கணத்தில் (synchronous) நிகழ்கின்றன. இவ்விரண்டு இயங்குமுறைகளுக் குமே பொதுவாகக் காரப்பொருளொன்று தேவை. இக்காரம் வினைப்படு சேர்ம மூலக்கூறிலிருந்து முதல் கட்டத்திலேயே புரோட்டானை அகற்றலாம். இத னால் EcB என்னும் மூன்றாம் வகை (இணைக் காரவழி ஒற்றைமூலக்கூறு வினை ) இயங்கு முறை உரு வாகிறது. இவ்விணை காரம் புரோட்டானல்லாத மற்றொரு தொகுதியை நேர் அயனியாக விடுத்து, இரட்டைப் பிணைப்பைப் பெறுகிறது. - H + CH, CH,X CH-CH, X X CH, = CH, + X = + X இந்நீக்க வினையின் வினைவேகச் சமன்பாட்டி லிருந்து E-யையும் E,ck-யையும் வேறுபடுத்திக் காண்பது யவாது. காரத்தில் (BOH) ஐசோ டோப்புப் பகுப்பாய்வு செய்தே E,ct முறையைக் கண்டறிய இயலும். கன ஹைட்ரஜனால் (denterium) பதிலீடு செய்யப்பட்ட C,H, OD போன்ற கரைப் பான் மூலக்கூறிலிருந்து தொடங்கி, வினையூக்கியான காரத்தில் D அணு வினைப்படுபொருளில் செறிந் துள்ளதாவென அணுக்கருவகைப் பகுப்பாய்வு மூலம் அறிதல் வேண்டும். வினைக்கலவையில் D ஏற்றம் கொண்ட வினைப்படு மூலக்கூறுகள் இடம் பெற்றிருப்பின் இயங்குமுறை Echயாசு இருக்க லாம். எனிலும், மெல்ல நிகழும் கட்டத்தில் (slow step) வினையின் வேகம் C-D பிணைப்புக்கும் C-H பிணைப்புக்கும் வேறுபடுவதால் வினையின் வேசுத்தை நுட்பமாக அளந்தும் Ecஐ E, -இலி ருந்து வேறுபடுத்தியும் காணலாம். ஒற்றைப் பிணைப்பை C=C இரட்டைப் பிணைப்பாக மாற்றும் நீக்க வினையை விட இரட்டைப் பிணைப்பை C=C முப்பிணைப்பாக மாற்றும் நீக்க வினை EjcB இயங்கு முறையில் நிகழ்வதற்கு வாய்ப்புக் கூடுதலாகப் பெற்றது. ஏனெனில், sp கார்பன் அணு sps கார்பன் அணுவை விட அமிலத்தன்மை மிக்கது. இயங்குமுறை தெளிவாக அறியப்பட்ட வினை களை முன்மாதிரியாகக் கருதியும் புதிய வினை களுக்கு இயங்குமுறைகளைப் பெறலாம். எடுத்துக் காட்டாக ஓரிணைய ஹாலைடுகளின் நீராற்பகுப்பு இரண்டு கட்ட ஒற்றை மூலக்கூறு வினையாகவும் மூவிணைய மூலக்கூறுகளின் நீராற்பகுப்பு ஒரு கட்ட இரு மூலக்கூறு வினையாகவும் அமைந்துள்ளன. கொள்ளிடத்தடை (steric hindrance) ஏற்படின், வினை நிகழாமல் இருக்கலாமேயன்றி, இயங்கு முறையில் மாற்றமிராது. கருத்தில் கொள்ளத்தக்க பல்வேறு இயங்கு முறை களுள் ஏற்புடைய இயங்கு முறையைத் தேர்ந்தெடுப் பதற்கு அவற்றுள் அணு இடப் பெயர்ச்சி மிகக் குறைவாகவுள்ள இயங்கு முறையே நிகழ வாய்ப் புள்ளது என்னும் அடிப்படை உண்மை உதவுகிறது. சிக்கலான அணுப் பெயர்ச்சிகளையுடைய வினையும் சிறு சிறு மாற்றங்கள் பலவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்ட தொடர் வினையேயாகும். வினையின் விரைவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஆற்றல் மாற்றங்கள் வினையின் இயங்கு முறையைத் தெளிவுபடுத்த உதவுகின்றன. வினையின் மொத்தக் கட்டில்லா ஆற்றல் மாற்றம் (AG) கிளர்வு கொள் ஆற்றலைவிடக் (AG) குறைவாகவே இருக்கும். ஒவ்வொர் எளிய கட்டத்திற்கும் அறியப் பட்ட அல்லது கணக்கிடப்பட்ட ஆற்றலின் கூட்டல் தொகை வினையின் ஆற்றல் மாற்றத்துக்குத் தொடர் புடையதாக (இதைப் பெறக் கூடியதாக) இருத்தல் வேண்டும். குவாண்ட்டம் இயக்கவியலின் அடிப்படையில் அறிமுறைக் கணக்கீடுகள் செய்தும் இயங்கு முறையை அறியலாம். ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதா ஒரு கட்டத்தில் மாற்று வினை ஏதேனும் நிகழக் கூடுமா, ஒரு சேர்மம் அல்லது இடைநிலைச் சேர்மத்தில் முனைப்பு (orientation) எவ்வாறிருத்தல் வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பதற்கு இக்கணக்கீடுகள் பயன்படும். சில வினைகளில் ஆர்பிட்டால் சமச்சீர்மை (orbital symmetry) இயங்கு முறையை வரையறுக் கிறது. டீல்ஸ்-ஆல்டர் கூட்டுவினை இவ்வகையைச் சார்ந்தது. வினையுறு மூலக்கூறுகளுள் ஆர்பிட்டால் சமச்சீர்மைக்கு வாய்ப்பில்லையெனில் வினைநிகழாது. ஒளியால் தூண்டப்படும் வினைகளுக்கு (photochemi- cal reactions) இது நன்கு பொருந்தும். வினைகளின் இயங்கு முறைகளை அறிவதற்கு அவற்றை வகையிடுவதும், ஒவ்வொரு வகையின் உட்பிரிவுகளைப் பற்றி அறிவதும் இன்றியமை யாதவை. இயங்கு முறைகளைக் கொண்டும் வினை களை வகையிடலாம். பின் வரும் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட வினைக்கு ஒரேயொரு வழிமுறை மட்டும் ஏற்ற தெனத் தோன்றினாலும், சில வினைகளுக்குக் கலப்பு வழிமுறைகள் நிகழக்கூடும். எடுத்துக்காட்டாக, ஃப்ரீஸ் டமாற்ற வினையில் மூலக்கூறுகளுக்கு