பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 கரிம வினை வழிமுறை

646 கரிய வினை வழிமுறை R R R HO-C ·R' H,O R- R" -H+ R R R R R7 CC-OH R ஆல்கஹால் தயாரிப்பு, வினையூக்கப்பட்ட ஹைட்ரஜ னேற்றம் (படம்-3) ஆகியன ஒருபக்க-சேர்ப்பு வினை களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். அறி ஒரு கரிம வினையின் வினைத்திசையை வதற்கு வினைப்படு சேர்மத்தில் சமச்சீர்மையற்ற கார்பன் அணு இருத்தல் உதவியாக இருக்கும். அணுக்கருக்கவர் பதிலீட்டு வினைகளில் சுருக்கவர் பொருள் (nucleophile) வினைப்படுமூலக்கூறை எத் திசையிலிருந்து நெருங்குகிறதோ அதற்கு எதிர்த் சை நோக்கி விடுபடுதொகுதி (leaving group) அகன்றால், வினைவிளை மூலக்கூறில் ஒளிவழி புரி மாற்றம் (optical inversion) தோன்றும். விடுபடு தொகுதி வினைப்படு மூலக்கூறிலிருந்து அகன்றபின்பு கருக்கவர் வினைபொருள் தாக்கினால், இடவலம்புரி சமநிலையாக்கல் (racemisation) நிகழும் (படம் 4). இதற்குக் காரணம் விடுபடு தொகுதி அகன்ற பின்பு தோன்றும் கார்போனியம் அடனி சமதள (planar). அமைப்புக் கொண்டது இவலயனி இருபுறமும் கருக் கவர் வினைப்பொருளால் தாக்கப்படுவதற்குச் சம வாய்ப்புக் கொண்டது. எனவே இடம்புரி. வலம்புரி இரண்டுவகை வினைவிளை அமைப்புகளுக்கும் சம் வாய்ப்பு உள்ளது. கொள்ளிட விளைவு. ஒரு வினைப்படு மூலக்கூறின் முப்பரிமாண அமைப்பில் இரு தொகுதிகள் ஒன்றோ டொன்று உராயக்கூடிய வாய்ப்புத் தோன்றிடின், அம்மூலக்கூறு நிலையற்றதாகிவிடும். வினை இயங்கு முறையைப் பொறுத்தவரை, இத்தன்மையைவிட வினைப்படுபொருளுக்கும் இடைநிலைத்தன்மை மாறு நிலைக்கும் (transition state) கொள்ளிட அமைப்பில் உள்ள வேறுபாடே முதன்மை பெறுகிறது. எந்த வொரு SN, வினைகளிலும் வினை நிகழும் இடமான கார்பன் அணு இடைநிலையில் 5 தொகுதிகளுடன் இணைந்திருக்க வேண்டும். இந்த நெருக்கத்தால் அமைப்பின் ஆற்றல் கூடுதலாகி நிலைத்தன்மை குறைகிறது. மொத்தத்தில், SN, இயங்கு முறையில் பருமனான தொகுதிகளைக் கொண்ட கார்பன் அணு இருக்கையில் வினை விரைவு குன்றி நிகழ் கிறது. அசெட்டோன் கரைசலில் அயோடைடு அயனி படம் 4 களால் பதிலீடு செய்யப்படும் வினையில் கீழ்க்காணும் சேர்மங்களின் வினைவேகங்களாவன: சேர்மம் CH.Br C,H,SBr Gar- t-BuBr Pr-Br வினைவேகம் 10000 (ஒப்பீடு) 65 0.5 0,039 மாறாக, இயங்கு முறையில் இடைநிலைப்பொருளான கார்போனியம் அயனி சமதள அமைப்புடன் மூன்று தொகுதிகளை மட்டுமே கொண்டதாக இருப்ப தாலும், கார்போனியம் அயனி உருவாதல் வினையின் மொத்த விரைவைத் தீர்மானிக்கக் கூடிய கட்டமாக இருப்பதாலும், பருமனான தொகுதிகளை உள்ள டக்கிய வினைப்படு மூலக்கூறுகள் அயனியாகக்கூடிய தொகுதியை எளிதில் விடுத்து, கார்போனியம் அயனி யாக மாறுகிறது. மொத்தத்தில் SN, இயங்கு முறை யில் கொள்ளளவு கூடுதலாகக் கொண்ட தொகுதி களைக் கொண்ட பற்றுப் பொருள் substrate) விரை வாக வினையுறுகிறது. மூலக்கூறின் தொகுதி நெருக் சுத்தால் வினை விரைவாக்கப்படும் நிகழ்ச்சிக்குக் கொள்ளிட வினைமுடுக்கம் (steric acceleration) எனப் பெயர். இவை அனைத்திலுமே இயங்குமுறைகள் மூலக்கூறுகளின் முப்பரிமாண அமைப்பு பொறுத்தனவாகும். வினையுறு களைப் கரிமச் சேர்மங்களின் கரிம வினை இயங்கு முறைகளைப் பற்றிய அறிவு பின்வரும் துறைகளில் இன்றியமையாத் தேவையா கிறது: தொகுப்பு, கச்சா பெட்ரோலிய எண்ணெயைத் தூய்மையாக்கல், பிளத்தல், பல்லுறுப்பாக்கல், அல்க்கைலேற்றம் முறைகளில் பெட்ரோலின் அளவைக் கூடுத லாக்கல், நெகிழி, ரப்பர் தயாரிப்பதற்கான பல்லுறுப் பாக்கல், வைட்டமின்கள், ஹார்மோன்கள், மருந்து வகை வேதிப் பொருள்கள் ஆகியவற்றைத் தொகுப்பு முறையில் தயாரித்தல் ஆகியன. ஆகிய - மே.ரா. பாலசுப்ரமணியன்