கரிம வேதித் தொகுப்பு முறை 647
of நூலோதி. R.O.C. Norman, Principles Organic Synthesis, Metheun & Co., London, 1968, 1. L. Finar, Organic Chemistry, Vol. 1, Sixth Editon. ELBS, London, 1973. கரிம வேத்த் தொகுப்பு முறை கார்பன் அணுப் பிணைப்பால் உருவாகும் சேர் மங்கள் சுரிமச் சேர்மங்கள் எனப்படுகின்றன. இன்று பல மில்லியன் கரிமச் சேர்மங்கள் தொகுக்கப்பட்டுப் பண்பறியப்பட்டுள்ளன. இவற்றில் வேதியியலார் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கிய கரிமச் சேர்மங்கள் தவிர எண்ணிலடங்காக் கரிமச் சேர்மங்கள் இயற் கையில் உயிர்மங்களால் உருவாக்கப்படுகின்றன. கரிமச் சேர்மங்களின் வரலாற்றைக் காணும்போது. வியக்கத்தக்க சில உண்மைகளை அறிய முடிகிறது. 1880 ஆம் ஆண்டு ஏறத்தாழ 12,000 கரிமச் சேர் மங்கள் கண்டறியப்பட்டன. இவ்வெண்ணிக்கை 1910 இல் 1,50,000 ஆகவும், 1940 இல் 5,00,000 ஆகவும் தற்போது பல மில்லியன்களாகவும் வளர்ச்சி யுற்றுள்ளது. கரிம வேதித்தொகுப்பு. எளிதில் கிடைக்கும் முன் னரே கட்டமைப்பு த்தெரிந்த ஒரு கரிமச் சேர்மத்தை, கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில், தேர்ந்தெடுக் கப்பட்ட பல் வேறு விரும்பும் மூலக்கூறு அமைப்புடைய புதியதொரு சரிமச்சேர்மத்தை உருவாக்கும் முறையே கரிம வேதித் தொகுப்பு முறை (chemial synthesis) எனப்படுகிறது. வேதிவினைகளுக்குட்படுத்தி, இத்தொகுப்பு முறைகளால், ஒரு வேதியியல் வல்லுநர், தாம் உருவாக்கிய ஒரு கருதுகோளை (hypothesis) சரிபார்க்க முயலுகிறார். அவர் தொகுத்த கரிமச் சேர்மம் எதிர்பார்த்த மருத்துவப் பண்பையோ மற்றும் ஏதாவது ஒரு புதிய பண்பையோ பெற்றிருக்கிறதா என்று கண்டறிய முனைகிறார். இம்முயற்சியில் பல்வேறு புதிய வேதி வினைகள் உருவாக நேரலாம். இவ்வினைகளின் வழி முறைகள் (mechanisms) பின்னர் கண்டறியப்பட்டு விளக்கப்படும்.பல்வேறு படியிறக்க வினைகள் (degra- dation reactions) மூலமாகப் பெறப்பட்ட அமைப்பு கள் வேதித் தொகுப்பு முறையால் தயாரிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன. பல்வேறு வேதி வினை களைக் கையாண்டு உட்வேர்டு என்பார் பலசிக்கலான கரிபிச்சேர்மங்களை (complex organic substances) உருவாக்கினார். குயினைன், குலஸ்ட்ரால், குளோ ரோஃபில் போன்ற சேர்மங்களின் தொகுப்பு முறை, உலகில் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. வினைகளின் வழிமுறைகளை விளக்கும் வகையில் பல அறிஞர்கள் விளக்கமளித்தனர். கரிம வேதித் தொகுப்பு முறை லூயிஸ் என்பார் வேதிப் பிணைப்புகளின் வகை களை எலெக்ட்ரான் அடிப்படையில் விளக்க முற் பட்டார். தொடர்ந்து ராபின்சன். இங்கோல்டு, மீர்வீன், ஹேமட், கோனன்ட், லூகாஸ் போன்ற பல அறிவியலார் வேதி வினைகளின் வகை. வினை வேகம் வினைவேகத்தைப் பாதிக்கும் காரணி, வினை வேகத்திற்கும் மூலக்கூறின் கட்டமைப்பிற்கும் உள்ள தொடர்பு போன்ற பல்வேறு கருத்துகளை வெளி யிட்டனர். இக்கருத்துக்கள் வெளிவந்த பின்னர் கரிமச் சேர்மங்களின் தொகுப்பு முறைகள் பலவாக வளர்ச்சி யுற்றன. கரிம வேதித் தொகுப்பு முறைகளில் தோன்றும் வினை இடைப் பொருள்கள் (reaction intermediates) of mor வகைகள், அவற்றில் நிகழும் வினை வழி வகைகள் போன்றவற்றைக் காணலாம். வினை இடைப் பொருள்கள். பல்வேறு கரிம வினை களில் மிகவும் குறை ஆயுள் உள்ள பல (short-lived) வினை இடைப் பொருள்கள் தோன்றி மறைகின்றன. எதி எடுத்துக்காட்டாக, கார்பன் நேரயனி, கார்பன் ரயனி (carbanion), இயங்கு உறுப்புகள் (free-radicals), கார்பீன்கள், நைட்ரீன்கள், நிலையற்ற மூலக்கூறுகள் (unstable molecules) கிளர்வுற்ற மூலக்கூறுகள் (excited molecules) போன்றவை பொதுவாகப் பல வினை களின்போது வினை இடைப்பொருளாகத் தோன்று கின்றன. சார்பன் நேரயனி. நேர் மின்னேற்றம் கொண்ட கார்பன் அணு உடைய கரிமச் சேர்மம் கார்பன் நேரயனி எனப்படுகிறது. இது ஒரு கரிம மூலக்கூறி லுள்ள பிணைப்புச் சமமற்ற முறையில் பிளவுறு வதால் (hetrolytic cleavge) உண்டாகிறது. இத்தகைய கார்பன் நேரயனி sp' இனக்கலப்பு ஆர் ஆர்பிட்டால் களைக் கொண்ட சமதள அமைப்புடையதாகும். கார்பன் எதிர் அயளி, எதிர் மின்னேற்றம் கொண்ட கார்பன் அணு உடைய கரிமச் சேர்மம் கார்பன் எதிர அயனி எனப்படுகிறது. இந்த அயனியும் கரிம மூலக் கூறின் பிணைப்புகள், சமமற்ற முறையில் பிளவுறுவ தால் தோன்றுகிறது. கார்பன் எதிர் அயனி அமீன் தொகுதியை ஒத்த எலெக்ட்ரான் அமைப்புடையது. இது பிரமிடு வடிவம் கொண்டிருக்கும். இயங்கு உறுப்புகள். ஒரு சேர்மத்திலுள்ள சகபிணைப்பு சமப்பிளவுறுவதால் (homolysis) மின்னேற்றமற்ற உறுப்புகள் தோன்றுகின்றன. இவை இயங்கு உறுப்புகள் எனப்படுகின்றன. இவை தனித்த, பங்கிடப்படாத எலெக்ட்ரான் கொண்டவை. ை மிக்க செயல் திறனுடையவை. கார்பீன்களும் நைட்ரீன்களும், ஈரிணையத் திறனு டைய, மின்னேற்றமற்ற கரிமச் சேர்மங்கள் கார்பீன் கள் எனப்படுகின்றன. எ.கா. டைகுளோரோகார்பீன். (Ci,C:) இவை கணப்பொழுது நிலைத்திருக்கும் தன்மை யுடையவை. கார்பீன்கள் ரு வகைப்படும். ஒன்றில்