பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 கரிம வேதியியல்‌

652 கரிசு வேதியியல் பாடு வேதிப்பிணைப்பு முறைகளில் அமைந்துள்ள வேறுபாட்டால் ஏற்பட்டது ஆகும். அணுக்களின் எலெக்ட்ரான்கள் ஏற்கப்படுவதாலும் வழங்கப்படுவ தாலும் நிகழும் பரிமாற்றத்தால் அயனிகள் உருவா கின்றன. அத்தகைய அயனிகளின் பிணைப்பால் உருவானவை கனிமச் சேர்மங்கள் ஆகும். மாறாக, அணுக்களின் எலெக்ட்ரான்கள் பொதுவாக்கப்படும் முறையால் சகபிணைப்பு ஏற்படுவதால் கரிமச் சேர்மங்கள் உருவாகின்றன. கரிமச் சேர்மங்களின் பொது இயல்புகளாகச் சிலவற்றைக் கூறலாம். அவற்றின் உருகுநிலை குறைவாக இருக்கும்; நீரில் பெரும்பாலும் கரைவதில்லை; மின்சாரத்தைக் கடத்துவதில்லை. சக வேதித் துறை அறிவியலார் பல ஆண்டுகளாக நெறிமுறைப்படுத்தியதன் விளைவாக, கரிம மூலக் கூறுகளின் அமைப்புகள் விளக்கப்பட்டுள்ளன. பிணைப்பில் இரண்டு எலெக்ட்ரான்கள் (ஓர் இணை) பங்கேற்றிருந்தால் ஒற்றைப் பிணைப்புச் சேர்மம் உருவாகும். மூலக்கூறு அமைப்பில் ஒற்றைக் கோடு இதைக் குறிக்கும். நான்கு எலெக்ட்ரான்கள்(இரண்டு இணைகள்) சகபிணைப்பில் பங்கேற்றால் இரட்டைப் பிணைப்புச் சேர்மமும், மூன்று இணைகளான எலெக்ட்ரான்கள் பங்கேற்றால் முப்பிணைப்புச் சேர்மம் உருவாகும். இவை ரட்டைக் கோடு களாலும் முக்கோடுகளாலும் குறிக்கப்படும். H H HHH ஆறு H-C-C-H H-C-C=C-H H-C=C-H H H H ஒவ்வொரு முறையும் ஒற்றைக் கோடிட்டுக் காட்டு வதை நீக்கிப் பின்வரும் எளிதான மரபு பின்பற்றப் பட்டது. HH H H-C-C=C-H H¸C-CH=CH, CH,CHCH, H இவை அனைத்தும் புரோப்பீன் என்னும் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்புகளாகும். இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முறையே நடைமுறையில் கையாளப்படுகிறது. பிணைப் கார்பன் அணுக்களிடையே ஒற்றைப் புகள் மட்டுமே கொண்டுள்ள சேர்மம் நிறைவுற்ற சேர்மம் எனப்படும். இரட்டைப் பிணைப்புகளும் மும்மைப் பிணைப்புகளும் கொண்டவை நிறைவுறாச் சேர்மங்கள் (unsaturated compound) எனப்படும். ஒரே வகையான இயல்புகளைக் கொண்ட சேர்மங்கள் உடனொத்த தொடர்புடைய சேர்மங்கள் அல்லது ஒரு குழுச் சேர்மங்கள் (homologous series) எனப் படுகின்றன. எடுத்துக்காட்டாக அல்க்கேன் வகைச் சேர்மங்களைக் குறிப்பிடலாம். ஒரு குழுச் சேர்மத் தொகுப்பிலுள்ள அடுத்தடுத்ததான சேர்ம மூலக் கூறுகள் - CH- என்னும் அணுத்தொகுப்புக் கூறால் வேறுபட்டிருக்கும. மெத்தேன், ஈத்தேன், புரோப்பேன் ஆகியன நிறைவுற்ற ஒருகுழுச் சேர்மங்கள் ஆகும். CH, மெத்தேன் CH,CH3 (C,H,) ஈத்தேன் CHCH,CH (C,H,) புரோப்பேன் இதைப்போன்றே இரட்டைப் பிணைப்பு, மும் மைப்பிணைப்பு அமைந்த ஒரு குழுச் சேர்மங்களாகப் பின் வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை நிறை வுறாச் சேர்மங்கள். இவற்றிற்கிடையேயான வேறு பாட்டுக் கூறு -CH, -ஆகும். CH,=CH, CH,-CH=CH, (C,H,) (C,H₁) எத்தீன் புரோப்பீன் CH,-CH=CH-CH, (CH) பியூட்டீன் சுரிமச் சேர்மங்களின் வகைபாடு. இதுவரை ஏறத் தாழ, பத்து லட்சத்திற்கும் மேலான சுரிமச் சேர் மங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல் கிறது. அவற்றை வகைப்படுத்தி, உரிய பெயரிடவழி முறை ஒன்றை வகுக்க வேண்டியதே தேவை ஏற்படுகிறது. கரிம வேதியியல் ஒரு தனித்துறையாக வளரத் தொடங்கிய காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறைப்படி, ஒரு குறிப்பிட்ட கரிமச் சேர்மம் இயற் கையில் எந்தப் பொருளிலிருந்து தயாரிக்கப் பட்டதோ அந்த அடிப்படைப் பொருளின் பெயர் அடிப்படையில் அச்சேர்மத்திற்குப் பெயரிடப்பட்டது. இத்தகைய பெயர்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன. ஆங்கிலம் மட்டுமன்றிக் கிரேக்கம், இலத் தீன் ஆகிய மொழிச் சொற்களும் எழுத்துக் குறியீடு களும் பெயரிடும் முறையில் பயன்படுத்தப்படு கின்றன. காட்டாக, சிட்ரிக் அமிலம் எலுமிச்சைச் சாற்றி லிருந்து தயாரிக்கப்பட்டதால் அதற்கு அப்பெயர் இடப்பட்டது (சிட்ரிகா = எலுமிச்சை;) ஃபார்மிக் அமிலம் எறும்பின் உடற்கூறில் அமைந்துள்ளது. (ஃபார்மிகா = எறும்பு). இப்பெயரிடு முறையால் சேர்மங்களின் பொது இயல்புகளோ மூலக்கூறு அமைப்புகளோ வெளிப்படையாகத் தெரிய வாய்ப் பில்லை. எனவே புதிய சேர்மங்கள் தயாரிக்கப் பட்டு அறிமுகமாகும்போது அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் புரிந்துகொள்வதற்கும், அமைப்பு களைச் சார்ந்த அவற்றின் இயல்புகளை வரையறுப்