பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 கரிம வேதியியல்‌

654 கரிம வேதியியல் கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிடு முறைகள் நீள் சங்கிலிச் சேர்மங்கள், கார்போ வனையச் சேர்மங்கள், வேற்றணு வளையச் சேர்மங்கள் ஆகிய வற்றிற்குப் பெயரிடப் பின்வரும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன. வை IUPAC முறைப்படி ஆங்கிலச் சொல்லோசையுடன் அமையும்; தேவைக் கேற்ப. பிறமொழி சார்ந்த முன்னொட்டுகளும் பின் னொட்டுகளும் ணைவதுண்டு. நீள் சங்கிலி ஹைட்ரோகார்பன்கள் (வளையமிலா ஹைட்ரோகார்பன்கள் ஒற்றை, இரட்டை, மும்மைப் பிணைப்புகள் இருப்பதைக் காட்டும் வகையில் நீள் சங்கிலி ஹைட்ரோகார்பன்கள் பெயரிடப்படுகின்றன. ஒற்றைப் பிணைப்பு மட்டுமே கொண்டவற்றின் பொதுப்பெயர் அல்க்கேன்கள் அல்லது பாரஃபின்கள்: இரட்டைப் பிணைப்புக் கொண்டவை அல்க்கீன்கள் அல்லது ஒலிஃபீன்கள்: மும்மைப் பிணைப்புள்ளவை அல்க்கைன்கள் அல்லது அசெட்டிலீன்கள் ஆகும். ஒரே சங்லித் தொடராக எத்தனைக் கார்பன்கள் இணைக்கப்பட்டுள்ளனவோ அவற்றைச் சார்ந்து அல்க்கேன்கள் பெயரிடப்படுகின்றன. இவ்வரிசைப் பெயர்கள் யாவும் -ஏன்' (- āne) என்னும் விகுதி யுடன் முடிவுறும். 1, 2, 3, 4 எண்ணிக்கையிலான கார்பன் அணு கொண்ட நீள் சங்கிலியான அல்க் கேன்கள் மெத்தேன், ஈத்தேன், புரோப்பேன். பியூட்டேன் என நடைமுறை வழக்குப் பெயர்களில் குறிக்கப்படுகின்றன. அவற்றிற்கு மேற்பட்டு 5. 6.7... என்னும் எண்ணிக்கையிலான கார்பன் அணுக்களைக் கொண்ட அல்க்கேன்கள் பென்ட்டேன், ஹெக்சேன், ஹெப்ட்டேன்... என - ஏன்' விகுதி கொண்டும், கார் பன் அணு எண்ணிக்கையைக் கிரேக்க மொழியில் 5 (பென்ட்டா,ஹெக்சா, ஹெப்ட்டா...) வாகவும் அமையும். சுட்டுவன -ஐல்' அல்க்கேன் மூலக்கூறிலிருந்து ஒரு ஹைட்ரஜன் நீக்கப்பட்ட நிலையில் அல்க்கைல் தொகுதி உருவாகி றது. பொதுவர்க ஏன்' என்னும் விகுதியுடன் முடி வதான அல்க்கேன் அந்த விகுதியை விடுத்து, (-yl) என்னும் புது விகுதியை இணைத்துக் கொண்டு அல்க்கைல் தொகுதி என்னும் பெயர் பெறுகிறது. மெத்தில் தொகுதி (-CH,) என்பது மெத்தேன் மூலக் கூறில் ஒரு ஹைட்ரஜன் இழக்கப்பட்ட நிலையில் உருவாவதாகும். அவ்வாறே ஈத்தேன் என்பதிலிருந்து ஈத்தைல் தொகுதி உருவாகிறது. கார்பன் அணு க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நீள் சங்கிலி கிளைப்படுவதும் உண்டு. அத் தகைய சேர்மங்களுக்குப் பெயரிடுவதும் முறைப்படுத் தப்பட்டுள்ளது. நெடிய நீள் சங்கிலித் தொடர் அடிப்படை அல்க்கேனாகக் கருதப்பட்டு கார்பன் அணுக்களின் வரிசை இடங்கள் எண்ணப்படுகின்றன. சங்கிலியின் ஒரு கடைக் கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை எண்கள் இடப்படும். எவையேனும் ஹைட்ரஜன்கள் பதிலீடு செய்யப்பட்டிருந்தால் எந்த எந்த எண்ணிக்கை கொண்ட கார்பன் அணுவில் பதி லீட்டுத் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. என்று சுட்டிக் காட்டப்படும். அவ்வாறு எண்களிடும்போது எண்களின் கூட்டுத்தொகை குறைவாக இருக்குமாறு வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். இணைக்கப் பட்டிருக்கும் தொகுதிகள் ஆங்கில எழுத்து வரிசைப் படி அமையவேண்டும். 1 2 3 4 5 6 7 CH-CH-CH-CH-CH-CH-CH, 2 2 I CH3 6 5 4 3 2 3-மெத்தில்- ஹெப்ப்டேன் CH-CH-CH-CH-CH-CH, C,H, CH₁₂ 4-எத்தில்-2- மெத்தில்-ஹெக்சேன் அல்க்கீன்கள். இவை இரட்டைப் பிணைப்புக் கொண்டவையாகும். கார்பன் அணுக்களின் எண் ணிக்கை அளவில் அடிப்படைச் சேர்மமாக அல்க் கேன் எனக் கொண்டு '-ஏன்' விகுதியை நீக்கி அந்த இடத்தில் -ஈன் (-ene) விகுதியை இணைத்துக் கொண்டால் அதுவே அல்க்கீன் சேர்மத்தின் பெய ராகும். நீள் சங்கிலித் தொடரில் இரட்டைப் பிணைப்பு அமைந்துள்ள டம் உரிய எண் கொண்டு குறிக்கப்படும். அவ்வாறு ஒரு கடைக்கோடியிலிருந்து தொடங்கி குறிக்கப்படும் எண் சிறிய அளவில் இருக்க வேண்டும். 5 3 2 I CH, CH-CH-CH-CH, CH,- 2 1 H (H 2- பென்ட்டீன் 3 4 CH,=C-CH=CH, CH₂ 2-மெத்தில்-1,3- பியூட்டா -டை-ஈன் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் இருந்தால் டைஈன் எனவும் அல்க்கீன்கள் பெயர் பெறும். கிரேக்க மரபான மானோ, டை -, ட்ரை-, டெட்ரா. என்னும் முன்னொட்டுகளே அடுக்கு எண்களைச் சுட்டுவனவாக IUPAC முறையில் குறிக்கப்படுகின்றன. அல்க்கீன்கள் நிறைவுறாச் சேர்மங்கள் ஆகும். அல்க்கைன்கள். கார்பன் அணுக்களுக்கிடையே மும்மைப் பிணைப்புக் கொண்ட சேர்மங்கள் அல்க் கைன்கள் எனப்படுகின்றன. இவ்வரிசையில் முதல்