பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 கரிம வேதியியல்‌

656 கரிம வேதியியல் 5 4 3 2 1 CH -CH CH,- CH,- CHO 4. மெத்தில் பென்டே [ CH, . னோல் கீட்டோன்களுக்குப் பெயரிடுவதில் மூன்று வழி முறைகள் பின்பற்றப்படுகின்றன சில கீட்டோன்களே அறிமுகமாகியிருந்த தொடக்க கால முறைப்படி மிகு எண்ணிக்கை இல்லாத கார்பன் அணு கொண்ட கீட்டோன்களுக்கு அவற்றைச் சார்ந்த அமிலங்களின் பெயர்களின் அடிப்படையில் பெயர்கள் சூட்டப் பட்டன; அவை இன்றும் நடைமுறையில் கையாளப் படுகின்றன. அமிலப் பெயரின் இக்' விகுதி நீக்கப் பட்டு -'ஓன்' விகுதி சேர்க்கப்படுகிறது. அசெட்டிக் அமிலத்தை வெப்பச் சிதைவுக்குட்படுத்தினால், இரண்டு மூலக்கூறுகள் வினைப்பட்டு CH, - COCH என்னும் கீட்டோனைத் தரும். எனவே இதற்கு அசெட்டோன் என்னும் ஒன்' என்னும் விகுதியுடன் அமைகிறது. இவ்வகைக் கீட்டோன் களில் கார்போனைல் தொகுதியின் கார்பன் அணு வுடன் ஒரே வகை அல்க்கைல் தொகுதிகள் இரண்டு இணைக்கப்பட்டிருக்கும். பெயர் . அவ்வாறு இணைக்கப்படாமல் வெவ்வேறான அல்க்னகல் தொகுதிகள் கார்போனைல் கார்பன் அணு வுடன் இணைக்கப்பட்டிருந்தால், அல்க்கைல் தொகுதி களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுக் கீட்டோன் என்னும் விகுதி பெயருடன் அமையும். CH.CO–CH,CH எத்தில் - மெத்தில் - கீட்டோன் JUPAC முறைப்படி அடிப்படை ஹைட்ரோ கார்பன்களைச் சார்ந்தே கீட்டோன்களுக்குப் பெயர் கள் இடப்படுகின்றன. கார்போனைல் தொகுதியின் கார்பன் அணு எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது எண்ணிட்டுச் சுட்டப்படுகிறது. அடிப்படை ஹைட்ரோகார்பனின் பெயரில் 'ஏன்' விகுதிக்குப் பதிலாக "ஓன்' ( - one) விகுதி இணைக்கப்பட்டு கார்போனைல் கார்பன் இருக்குமிடத்தை எண் ணிட்டுச் சுட்டுவதே தற்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுமுறையாகும். 0 CH,-CH,-C-CH,-CH,-CH, 3-ஹெக்சேனோன் கார்பாக்சில் தொகுதிச் சேர்மங்கள். கார்பாக்சில் தொகுதியை வினைத்தொகுதியாகக் கொண்டிருக்கும் சேர்மங்கள் கரிம அமிலங்களாகச் செயற்படுகின்றன. தொடக்ககாலத்தில் இயற்கைப் பொருள்களிலிருந்து இந்த அமிலங்கள் தயாரிக்கப்பட்டமையால் அந்த அடிப்படையில் அவற்றுக்குப் பெயர்கள் இடப் பட்டன. காட்டாக, சிட்ரிக் அமிலம் என்பதைக் கூறலாம். அதற்கு அடுத்த நிலையாக, அனைத்துக் கரிம அமிலங்களும் அசெட்டிக் அமிலத்தின் பெறுதி களாகவே கருதப்பட்டுப் பெயர்களிடப்பட்டன. CH,-CH -CH-COOH டை எத்தில்-அசெட்டிக் அமிலம் CH-CH, கார்பன் சங்கிலிக் கோவை நெடிதானதும், கிளை யிட்ட கார்பன் அணுக்கள் கிரேக்க அகர வரிசைப்படி குறிப்பிடப்பட்டன. 8 包 CH-CH-CH-COOH CH, CH, க, நீ - டைமெத்தில்- பியூட்டிரிக் அமிலம் கார்பாக்சில் தொகுதியான COOH' என்பதிலுள்ள கார்பன் கணக்கிடப்படாமல், அதற்கு அடுத்ததான கார்பன் அணுவிலிருந்து கிரேக்க அகர வரிசை தொடங்குகிறது. சங்கிலிக் கோவை மிகவும் நெடி தானால் இந்த வழிமுறையும் சிக்கலாகும். எனவே IUPAC முறைதான் அமிலங்களுக்குப் பெயரிடுவதற்கு எளிதில் வழி செய்துள்ளது. அடிப் படை ஹைட்ரோகார்பனின் பெயரிலுள்ள '-ஏன்' விகுதி நீக்கப்பட்டு அந்த இடத்தில் '-ஓயிக்' (-oic) என்ற விகுதி சேர்க்கப்பட்டுக் கரிம அமிலங்கள் பெயரிடப்படுகின்றன. இம்முறையில் கார்பாக்சில் தொகுதியிலுள்ள கார்பனும் வரிசை எண்ணப்பட்டு அதுவே முதல் எண்ணாகவும் அமைகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கார்பாக்சில் தொகுதிகள் ஓர் அமில எண்ணாகவும் அமையும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்பாக்சில் தொகுதிகள் ஓர் அமில மூலக்கூறில் இருந்தால் டை-ட்ரை ஆகிய முன்னொட்டுகள் சேர்க்கப்படுகின்றன. CH -CH,-CH,- CH-CH,-COOH OH 3-ஹைட்ராக்சி-ஹெக்ச னோயிக் அமிலம் - ஈதர்கள். இவ்வகைச் சேர்மத்தின் ஆக்சிஜன் அணுவின் இரு பிணைப்புகளுடனும் இரண்டு அல்க் கைல் தொகுதிகள் இணைந்தவையாகக் குறிப்பிடப் படுகின்றன. காட்டாக, CH, - CH, - 0 - CH 0 CH3 என்பது எத்தில் மெத்தில் ஈதர் எனப்படுகிறது. ஆனால் IUPAC முறையில் இவை அல்க்காக்சி பெறுதிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அல்க்கைல் தொகுதியும் ஆக்சிஜனும் ணைந்தது அல்க்காக்சி தொகுதியாகும்.