பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிம வேதியியல்‌ 657

CH -CH,--CH-CH,--CH,CH, d O-CH2-CH3 3-எத்தாக்சி- ஹெக்சேன் அமீன்கள். அம்மோனியாவைச் சார்ந்த அல்க் கைல் பெறு பறுதிகள் அமீன்கள் எனப்படுகின்றன. ஒரு நைட்ரஜன் பதிலீடு செய்யப்பட்டு அல்க்கைல் தொகுதி ஒன்று இணைக்கப்பட்டால் அது ஓரிணைய அமீன் எனப்படுகிறது. இதைப் போலவே, இரண்டு ஹைட்ரஜன்கள் இரண்டு அல்க்கைல் தொகுதிகளால் பதிலீடு செய்யப்பட்டிருந்தால் அது ஈரிணைய அமீன்; மூன்று ஹைட்ரஜன்களும் பதிலீடு செய்யப்பட்டிருந் தால் அது மூவிணைய அமீன், H H-N 1 H அம்மோனியா CH3 C,H,-N--H H C,H,--N-H எத்தில் அமீன் (ஓரிணை) C₂H₂ C,H-N--C,H5 எத்தில் மெத்தில் ட்ரை - எத்தில் அமீன் அமீன் (ஈரிணை) தயால்கள். (மூவிணை) தயால் SH" என்ற தொகுதி (thiol) எனப்படுகிறது. அல்க்கைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டு இது சங்கிலிக் கோவையின் முடிவில் இருக்கும். கரியின் அடிப்படையிலான ஹைட்ரோ கார்பன் பெயருடன் தயால் என்ற விகுதி சேர்க்கப் பட்டு இவ்வகைச் சேர்மங்கள் பெயரிடப்படுகின்றன. CH, CH, SH CH, CH, CH, CH, SH எத்தேன் - தயால் பியூட்டேன் - தயால் நடைமுறை வழக்கில் தயால் என்பதற்குப் பதிலாக அல்க்கைல் மெர்க்காப்ட்டன் என்றும் பெயரிடப் படுவதுண்டு. காட்டாக, எத்தில் மெர்க்காப்ட்டன், பியூட்டைல் மெர்க்காப்ட்டன் என மேற்கூறிய சேர் மங்களைக் குறிப்பிடலாம். IUPAC முறையிலும் இவை தயால்கள் என்றே குறிப்பிடப்படுகின்றன. கல்ஃபானிக் அமிலங்கள். * -SO₂H' என்பது அமிலத் தன்மை பொருந்திய தொகுதியாகும். இது இணைந்த சேர்மங்கள் அடிப்படை ஹைட்ரோகார் பன்களின் பெயர்களைச் சார்ந்து குறிப்பிடப்படு ன்றன. காட்டாக, CHg-SO,H என்பது மெதேன் சல்ஃபானிக் அமிலம் ஆகும். கார்போ - வளையச் சேர்மங்கள் கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று ணைக்கப் பட்ட நிலையில் வளைய வடிவமைப்புக் கொண்டவை கரிம வேதியியல் 657 கார்போ வளையச் சேர்மங்கள் (carbocyclic com pounds) எனப்படுகின்றன. அமைப்பு முறை அடிப் படையில் இவை ரண்டு உட்பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அரோமாட்டிக் சேர்மங்கள் அலிவளையச் சேர்மங்கள் என்ற இவையிரண்டும் வதிப் பண்புகளால் வேறுபட்டிருக்கின்றன. வே அரோமாட்டிக் சேர்மங்கள். சேர்மங்களின் மூலக் கூறு அமைப்புகளில் ஒற்றைப் பிணைப்புகளும் இரட் டைப் பிணைப்புகளும் அடுத்தடுத்து இடம் பெற்றி ருக்கும். இச்சேர்மங்கள் தொடக்க காலத்தில் இயற்கையில் கிடைத்த மணப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டன; இச்சேர்மங்களில் பெரும்பா வானவை மணப் பொருந்தியவையாக இருந்தன. அரோமா (aroma) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு மணம் என்னும் பொருள் என்பதால் காரணப் பெய ராக இது அமைந்தது. இவ்வகைச் சேர்மங்களுக்குக் சுற்பூரம். சாம்பிராணி முதலியவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம். தொடக்கத்தில் அறிமுகமான அரோமாட்டிக் சேர்மங்களின் பெயர்கள் அவை தயாரிக்கப்படக் காரணமாக இருந்த மூலப்பொருள்களைச் சார்ந்து நடைமுறை வழக்குப் பெயர்களாக அமைந்தன. எளி மையும் வசதியும் கருதி அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன் மூலக்கூறு வாய்பாடுகள் கரி என்றும் நைட் ரஜன் என்றும் தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல் பொதுப்படை அறுகோண வடிவமைப்புகளாகக் குறிப் பிடப்படுகின்றன. அரோமாட்டிக் சேர்மங்களின் அடிப் படைக்கூறான பென்சீன் ஆறு கரியணுக்களையும் ஹைட்ரஜன்களையும் கொண்டிருக்கிறது. CH என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட பென்சீன் அறுகோண வடிவமைப்பால் குறிப்பிடப்படுகிறது. ஒவ் வொரு கோண முனையும் ஒரு கார்பனையும் ஹைட் ரஜனையும் குறிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பென் சீன் வடிவுகள் பிணைந்தவையாக நாஃப்த்தலீன், ஆந்தரசீன், ஃபீனாந்த்ரீன் மூலக்கூறுகளைக் குறிப் ஆறு பிடலாம். நீள் சங்கிலிச் சேர்மங்களைப் போலவே கார் போ-வளைக் கார்பன்களுக்கு முறைப்படியாக வரிசை எண்கள் தரப்படுகின்றன. நீள்சங்கிலி ஹைட்ரோ கார்பனைப் போலவே, அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன் மூலக்கூறிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன்கள் நீக்கப்பட்டால் உரிய தொகுதிகள் கிடைக்கின்றன. பென்சீனிலிருந்து ஒரு ஹைட்ரஜனை நீக்கிவிட்டால் CgH,– என்ற தொகுதி கிடைக்கும்; அது ஃபினைல் தொகுதி எனப் படும். இதே போன்று நாப்தலீன் விளைவிப்பது நாஃப்தைல் தொகுதியாகும். ஆனால் நாஃப்தலி னிலிருந்து எந்தக் கார்பனைச் சேர்ந்த ஹைட்ரஜன் நீக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சமச்சீரான பென்சீனைப் போலல்லாது நாஃப்தலினில் கார்பன் VOL7