658 கரிம வேதியியல்
658 கரிம வேதியியல் பென்சீன் நாப்தலீன் இந்த வரிசையில் வேறுபாடு அமைந்திருக்கிறது. அடிப்படையில் முதல் இடத்து ஹைட்ரஜன் நீக்கப் பட்டிருந்தால் 1 - நாப்த்தைல் என்றும், இரண்டாம் இடத்திலான ஹைட்ரஜன் நீக்கப்பட்டிருந்தால் 2- நாப்த்தைல் என்றும் தொகுதிகள் பெயர் பெறுகின்ற றன. கிரேக்க எழுத்து வரிசை முறைப் படியும் இவை பெயரிடப்படுவதுண்டு. மேலே கூறப் பட்டவை முறையே 8 - நாப்த்தைல், தீ-நாப்த்தைல் எனவும் சுட்டப்படும். இவை வெவ்வேறான செயற் பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அரோமாட்டிக் சேர்மங்களில் வினைத்தொகுதி கள் இணைக்கப்பட்டிருக்குமானால் அத்தொகுதிகள் சார்ந்த ஹைட்ரோகார்பன்களாகப் பெயரிடப்படும். காட்டாக குளோரோபென்சீன், நைட்ரோநாப்தலீன் என்பன குளோரின் இணைந்த பென்சீன், நைட்ரோ- தொகுதி இணைந்த நாப்த்தலீன் ஆகியவற்றைக் குறிக்கும். ஹைட்ராக்சில் தொகுதி இணைந்தவை ஃபீனால்,நாஃப்தால் எனக் குறிப்பிடப்படுகின்றன. அலிவளையச் சேர்மங்கள் நீள் சங்கிலிச் சேர்மங்களைப்போல் அலிஃ பாட்டிக் இயல்பு கொண்ட இச்சேர்மங்கள் அரோ மாட்டிக் சேர்மங்களைப் போல் வளைய வடிவ அமைப்புக் கொண்டிருக்கின்றன. ஒற்றை வளையம், ருவளையம், மூவளையம் மட்டுமல்லாமல் பல் வளைய அமைப்புக் கொண்ட சேர்மங்கள் இப்பிரி வில் அடங்கும். வளைய ஹெக்சேன் என்ற அலி வளையச் சேர்மத்தில் ஆறு கார்பன்கள் ஒற்றைப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. டெர்ப்பீன், ஸ்ட்டீராய்டு போன்ற அலிவளையச் சேர்மங்கள் சிக்கலான அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இம்மூலக்கூறுகளில் ஆங்காங்கே ஓரிரண்டு இரட்டைப் பிணைப்புகள் அமைய நேர்ந்தாலும் அவற்றுக்கு அரோமாட்டிக் இயல்பு இருப்பதில்லை. அலிவளையச் சேர்மங்களின் எடுத்துக்காட்டுகளாக வளையஹெக் சேன்,-பைனின் ஆகியவற்றைக் கூறலாம்.அடுத்துவரும் வடிவமைப்புகளில் ஒவ்வொரு கோண முனையும் ஒரு கார்பன் அணு இரண்டு ஹைட்ரஜன்கள் என்ற தொகுப்பைக் (-(H,-) குறிக்கும். அலிவளையச் சேர்மங்களுக்குப் பெயரிடுவதில் இடர்ப்பாடு நேர்கிறது. ஒற்றை வளைய மூலக் கூறுகள் அல்க்கேன பெயர்களின் அடிப்படை ஆந்த்ரசீன் பினாந்தரீன் CH3 சைக்ளோஹெக்சேன் CH₂ க-பைனீன் யில் வளைய என்ற முன்னொட்டு இணைக்கப்பட்டுப். பெயரிடப்படுகின்றன. இந்த அடிப்படையில் ஹெக் சேன் என்ற ஆறு கார்பன் கொண்ட அல்க்கேனின் பெயருடன் வளைய என்பது இணைக்கப்பட்டு வளையஹெக்சன் என ஆறு கார்பன் வளையச் சேர்மம் பெயரிடப்பட்டிருக்கிறது. சில சேர்மங்களின் பெயர்கள் அவை கிடைக்கப்பெறும் மூலப்பெயர் களை ஒட்டி அமைகின்றன. -CH,- என்ற மெத்தி லீன் தொகுதிகளின் இணைப்பாக அலிவளையச் சேர் மங்கள் இருப்பதால் அவற்றுக்குப் பாலிமெத்தி லீன்கள் என்ற பெயரும் உண்டு. வேற்றணு வளையச் சேர்மங்கள் கார்போ வளையச் சேர்மங்களில் இணைதிறன் கட்டுப்பாடு மீறப்படாத வகையில் பிற தனிமங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. காட்டாக, பென்சீன் மூலக்கூறில் - CH = என்ற பகுதியை —N= என்பதாக நைட்ரஜன் பதிலீடு செய்யலாம். வளைய பென்ட் டேனில் -CH,- என்பதற்குப் பதிலாக -S- -0 அல்லது அல்லது -NH- இடம் பெறலாம். . இவ்வாறான வேற்றணு வளையச் சேர்மங்கள் நடைமுறை வழக்குப் பெயர்களாலேயே குறிப்பிடப் படுகின்றன. அச்சேர்மங்கள் எவற்றிலிருந்து பெறப் படுகின்றன என்ற அடிப்படையில் அவற்றுக்கான பெயர்கள் சூட்டப்படுகின் றன. அவற்றின் மூலக் கூறுகளுக்குப் பெயரிடுவதிலும் வடிவமைப்புத் தருவ திலும் சீரான முறை கையாளப்படுகிறது. இம்முறை யில் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்களின் பெயர்கள் எடுத்தாளப்படுகின்றன. ஆக்சிஜன் அணு வளைய இணைப்பில் இருந்தால் ஆக்சா-என்ற முன் னொட்டுப் பெயர் இருக்கும்; சல்ஃபர் இருந்தால் தயா என்ற முன்னொட்டும் நைட்ரஜன் இருந்தால் அசோ- என்ற முன்னொட்டும் இருக்கும்.