கரியூட்டி 659
கரியூட்டி 659 சேர்மம் நடைமுறை வழக்குப் சீர்முறைப்பெயர் C,H,N பெயர் கியூனோலின் (IUPAC) 1- அசோ-நாப்த் தலீன் |CH,N... ஐசோ- கியூனோலின் 2 -அசோ-நாப்த் தலீன் ஒரே மூலக்கூறில் ஒன்றுக்கு மேற்பட்ட வேற்றணுக் கள் இருக்குமானால் முன்னுரிமை ஆக்சிஜனுக்கும், அதற்கடுத்த இடம் கந்தகத்துக்கும் மூன்றாம் இடம் நைட்ரஜனுக்கும் என்ற வரிசையில் அமையும். வேற்றணுக்கள் என்ற வகையில் O, S, N ஆகியனவே பெரிதும் இடம் பெறுகின்றன. நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களை அடிப்படையாகக் கொண்டு இம்மூலக் கூறுகளின் பெயர்கள் அமையும். இந்த முறையைச் சார்ந்து, இரட்டைப்பிணைப்பு ஒற்றைப்பிணைப்பாக மாறுமானால் அதற்குக் காரணமான ஹைட்ரஜன் களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு டைஹைட்ரோ, டெட்ராஹைட்ரோ என்றமுன்னொட்டுப் பெயர்கள் ணையும். வேற்றணுக்களுக்கு வரிசை எண்ணிடுவதில் சீர்மையைக் கையாள முடியவில்லை. ஒற்றை வளையச் சேர்மத்தில் ஒரே ஒரு வேற்றணு அமைந் திருக்குமானால் அதன் இருப்பிட எண் 1 எனக் குறிப்பிடப்பட்டு, பின்னர் கார்பனின் இருப்பிட எண்கள் வரிசைப்படுத்தப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வேற்றணுக்கள் அமைந்திருந்தால் முன்னர்க் கூறப் பட்டது போன்று ஆக்சிஜன், கந்தகம், நைட்ரஜன் என்ற வரிசையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேற்றணு வளையங்கள் அமையுமானால் இந்தச் சீர்மை லைகிறது. அந் நிலையில் சேர்மங்களுக்கு ஏற்ப ஹைட்ரோகார்பன் களின் வடிவமைப்பின் பின்னணியில் ஒப்பீட்டு முறை பின்பற்றப்பட்டு வரிசை எண்கள் இடப்படுகின்றன. 1960 1828-ஆம் ஆண்டில் தான் கரிம வேதியியல் அறி முகமானது. ஆனால் 1880ஆம் ஆண்டிற்குள்ளாகவே பன்னிரண்டாயிரம் கரிமச் சேர்மங்கள் தயாரிக்கப் பட்டு விட்டன. 1910 இல் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரமாக உயர்ந்தது. 1940 இல் அது ஐந்து இலட்சமாக உயர்ந்து, இல் ஏழு இலட்சம் என மிகுவேக வளர்ச்சி பெற்றது. ஆராய்ச்சி முறைகள் செழித்திருக்கும் இந்நாளில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ முப்பதாயிரம் புதிய கரிமச் சேர்மங்கள் செயற்கை முறையில் உருவாக்கப் படுகின்றன. கரியூட்டி ருத்ர. துளசிதாஸ் எரி அடுப்பிற்கு நிலக்கரி வகைகள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அத்தகைய திண்ம எரிபொருள்களை எரி அடுப்பிற்கு நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தகுந்த நகர் கடத்திகள் (conveyors) உள்ளன. உலையின் கட்டுமானத்திற்கு அருகில் கொண்டு வந்த பிறகு எரிபொருளை வகைப் படுத்தித் தேர்ந்தெடுத்து எரி அடுப்பிற்கு உள்ளீடு செய்வதற்கான எந்திர அமைப்பே கரியூட்டி (stoker) ஆகும். எரிபொருளை இரும்புச்சட்டி மூலம் எடுத்து எரி அடுப்பில் போடலாம். எவ்வித இடையூறும் இல்லாமல் எரிபொருளைத் தொடர்ந்து செலுத்துவ தற்கு ஒரு தானியங்கு எந்திர அமைப்பே சிறந்தது. இவ்வமைப்புகள் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு N மேற்புறச் செலுத்தம் கீழிருந்து மேல் நோக்கிய செலுத்தம் படம் 1