பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கட்டடங்களின்‌ பேணலும்‌ ஆய்வுக்கட்டுப்பாட்டுப்‌ பட்டியலும்‌

48 கட்டடங்களின் பேணலும், ஆய்வுக் கட்டுப்பாட்டுப் பட்டியலும் நினைவு மண்டபங்கள், புகழ் மிக்கார் சிலைகள் என அரசுத் துறையின் பராமரிப்பிலுள்ள பொதுக் கட்ட டங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். பராமரிப்புப் பணியாளர் இன்மையும், பணக் குறை வும். அண்மைக் காலத்தில் இத்தகைய கட்டடங் களின் எண்ணிக்கையும் பயனும் பன்மடங்கு மிகுதி யாகியுள்ளனவே தவிர இவற்றைப் பேணத் தேவை யான கூடுதல் பணியாளர்களும், கூடுதல் தொகை யும் போதிய அளவில் கொடுக்கப் படுவதில்லை; ஒப்புதலளிக்கப்படுவதில்லை. இத்தகைய கட்டடங் களில் ஒரு சிறு பழுதிருப்பினும் அல்லது ஏதாவது தற்காலிக வசதிக் குறைவு நேர்ந்தாலும் அரசுத் துறையும், அதன் பொறியாளர்களும், பிற ஊ ஊழியர் களும் குறை கூறப்படுகின்றனர். இத்தகைய பொது அரசுத் துறைக் கட்டடங்களைப் பேண் வேண்டிய அளவுக்குப் பிற பயன்படுத்தும் துறையைச் சார்ந்த வர்களை நிறைவு படுத்தும் வகையில் வேலைகளைச் செய்யப் போதிய தொகை ஒதுக்கவேண்டும். மேலும் கூடுதல் கட்டடங்களின் எண்ணிக்கை, பரப்பு, அமை விடம் இவற்றைப் பொறுத்துக் கூடுதல் பணியாளர் களையும் அமைக்க வேண்டும். கூவ கட்டடப் பராமரிப்பில் கவனிக்க வேண்டிய இன்றி யமையாவழிமுறைகள். கட்டடத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் தூய்மையானதாக இருக்க வேண்டும். குறிப்பாக அடித்தளத்திற்கு 3மீதொலைவு வரைஎந்த மரமும் இருக்கக்கூடாது. ஏனெனில் மரங்களின் வேர் கள் பரவி அடித்தளச் சுவரைத் தாக்கக்கூடும். ரில் விரிசல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு; இவ்வாறே கட்டடத்தின் சுவரிடுக்குகளிலும், மொட்டை மாடியி லும் எவ்விதச் செடி கொடிகளும் முளைக்காவண்ணம் கவனிக்க வேண்டும். இவ்வாறு முளைப்பனவற்றை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்; மேற்கூரையிலோ, இடையிடுக்குகளிலோ மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வேண்டிய எண்ணிக்கையும் அளவும் உடைய மழை வடி குழாம் களைப் பொருத்தி அவை அடைத்துக் கொள்ளாமல் கவனிக்க வேண்டும். மேற்கூரையில், சுவர் ஓரங்களில் மழை நீர் தேங்கி நின்றால் சுவரில் ஓதம் (ஈரம்) பதிந்து வண்ணப்பூச்சும், சுவரின் அழகும் வலிமையும் குலையும்; சுவரின் காரைப் பூச்சுகள் பழுதுபடா வண்ணம் பார்க்க வேண்டும். பழுதுபட்ட பகுதி களுக்குப் புதிதாகக் காரைப்பூச்சுப் பூச வேண் டும்; வலிவூட்டுங்கம்பிகள் - வலிவூட்டப்பட்ட கற் காரைப் பலகம். விட்டம் போன்றவை களிலிருந்து வெளியில் தெரியாமல் வேண்டிய அளவு பூச்சுப் பூச வேண்டும். காற்று, மழை, இவற்றின் மாற்றங்களில் இவ்வெஃகு வலிவூட்டிகள் துருபிடிக் காமலும் அரித்திடாமலும் பார்க்க வேண்டும். துருப்பிடித்தவற்றிற்கு உரிய காப்புப் பூச்சுப் பூசி கட்டடங் அதற்கு மேல் சுண்ணக் கலவையால் போதிய கனத்திற்கு மூடவேண்டும். மேலும், மேற் சுவரின் அடித்தளங்களில் விரிசல் கள் தோன்றும்போது அவற்றிற்குரிய அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து அவற்றை நிறைவு செய்ய உரிய தொழில் நுட்பத்தையும் எளிதில் கிடைக்கும் செலவு குறைந்த பொருளையும் பயன் படுத்த வேண்டும். விரிசல்கள் அடித்தள மண்ணின் காரணமாக மிகவும் குறைந்த தாங்குதிறனும். படியும் தன்மையும் கொண்டிருந்தால் அடித்தள மண்ணை வலிமைப்படுத்த, புதிய முறைகளையும் பயன்படுத்திச் சீர் செய்ய வேண்டும். எண் பொதுவாகவே கட்டடங்களின் பயன்படு காலத்தை மிகுதிப்படுத்த கட்டடத்தின் உட்பகுதி களையும், மேற்பரப்பையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வள்ளைப்பூச்சு, வண்ணப்பூச்சு வண்ண ணய்ப் பூச்சு ஆகியவற்றைப் பூச வேண்டும். சுட்டடத்தில் மரத்தால் எல்கால் ஞெகிழிப் பொருளால் வேறு உலோகத்தால் ஆன பொருள்கள் பழுதடைந்திருந்தால் உரிய காரணமறிந்து மீண்டும் நேராவண்ணம் வழிமுறைகளையும் கண்டு புதிய பொருளைப் பயன்படுத்த வேண்டும் அல்லது பழைய பொருளைப் பழுது பார்த்துப் புதுப்பிக்க வேண்டும். அலை கழிப்பறைகள், கழிப்பறைக் குழாய்கள், மின் பொருத்துகள், மின் கயிறுகள், குடிநீர் வழங்கு குழாய்கள் இவற்றின் இணைப்பு பழுதடையா வண்ணம் பாதுகாக்க வேண்டும். பழுதடைந்தவற் றை உடனுக்குடன் புதுப்பிக்கவும் வேண்டும். . கூரைவிதானம். புழங்கு தளம், தண்ணீர்த் தொட்டி, தரைநீர்த் தொட்டிகள், பிற நீர் கொள்ளும் குழாய்கள் பொருத்திகள் இவற்றையும் பழுதடையாத வண்ணம் பார்க்க வேண்டும். கதவு கள், சன்னல், மேலதர்கள் (ventilators) முதலியவை விரிசல் விடாமலும், சுருங்காமலும், பழுதடையாம லும் இருக்க ஆவன செய்ய வேண்டும். வரைபடங்களும் தொகுபுள்ளி விவரங்களும். அரசு மற்றும் பொதுத் துறையின் பொறுப்பில் உள்ள கட்டடங்களை உள்ளடக்கிய ஒரு பதிவேடு (Register of Public Buildings) உள்ளது. ஒவ்வொரு பொதுக் கட்டடத்திற்கும் கீழ்க்காணும் புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் தொகுத்துக் கட்டடத்திற்கு ஒன் றாகத் தனித்தனிப் பதிவேடுகள் வைக்க வேண்டும். கட்டடத்தின் பெயர், கட்டடத்தைப் பயன் படுத்தும் துறையின் பெயர், கட்டடத் துறை யினரின் காப்பாளர்/பொறுப்பாளர் பதவிப் பெயர்,