662 கருக்காலம் (கால்நடை)
662 கருக்காலம் (கால்நடை) கருக்காலம் (கால்நடை) பாலூட்டிகளின் கருப்பையில் சினையும் விந்தணுவும் கலந்து கருவுறல் நடந்து கரு வளர்ந்து சிசுவாகவோ. குட்டியாகவோ பிறக்கும் வரை உள்ள காலமே கருக் காலம் (gestation period) எனப்படும். பொதுவாகச் சிறு விலங்குகளைவிடப் பெரிய விலங்குகளின் கருக் காலம் நீண்டுள்ளது. விலங்குகளில் யானையின் கருக்காலமே (635 நாள்) மிக நீண்டதாக அறியப் பட்டுள்ளது. மனித இனத்தின் கருக்காலம் ஏறத்தாழ 280 நாள்கள் ஆகும். பாலூட்டிகளைத்தவிர வேறு சில விலங்கினங் களில் (சில மீன் வகைகள், சுறா. கண்ணாடி விரியன் பாம்பு போன்றவை) கருப்பையிலிருந்து முட்டை வெளிவராமல் உள்ளேயே முதிர்ந்து கரு வளர்ந்து குட்டியாக வெளி வருவதைக் (ovovivi- parous) காணலாம். ஒரு சில பாலூட்டிகளின் பாலின முதிர்ச்சிக் காலம், கலவி இச்சைக் காலம், கிளர்ச்சி யுறுங்காலம், சினையுறுங்காலம், கருவளர்காலம், கருக்காலம் ஆகியவை அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன. (பக்கம் 661) -பா. நாச்சி ஆதித்தன் நூலோதி. Nelsen, O.E. Comparative Embryology Vertebrates. McGraw Hill Book Co. Inc New York கருக்கோள உறுப்பாகு பகுதிகள் உயிரினங்கள் பலவகைப்பட்ட செல்களால் உண்டாக் கப்பட்டுள்ளன. இந்தச் செல்கள் அனைத்தும் கருத் தரிக்கப்பட்ட அண்டத்திலிருந்து பிளவிப்பெருகல் (cleavage) மூலமாகக் கிடைப்பவை. இவ்வாறு பெருகும் அரும்பு செல்களே, உள்ளே குழியுடைய கருக்கோளம் (blastula) ஆகின்றன. கருக்கோளம் பல மாறுதல்களும் வளர்ச்சியும் அடைந்து பல் வேறு உறுப்புகளையும் உண்டாக்குகின்றது. கருவுற்ற அண்டத்தின் உறுப்புகளை உண்டாக்கும் மூலப் பொருள்கள் பிளவிப் பெருகுதலின்போது ஒழுங்காகப் பிரிக்கப்பட்டு வேவ்வேறு கருக்கோளச் செல்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்தகைய கருக்கோள உறுப் பாகு பகுதிகளைப் பெரும்பாலும் இயல்பாகக் காண முடியாது. செல்களுக்கு ஊறு செய்யாத சாயப் பொருள் களைப் (vital stains) பயன்படுத்தியும். சில செல்களை அகற்றியும், கருக்கோளத்தின் பகுதிகளைக் காயப் படுத்தியும், கருக்கோளச் செல்களின் இயக்கங்கள். இடப்பெயர்ச்சி இவற்றை ஆராய்வதன் மூலமும், கருக்கோள உறுப்பாகு பகுதிகளைக் கண்டு கொள்ள முடியும். இத்தகைய ஆராய்ச்சிகள் மூலம் கருக்கோளத் தின் பிற்கால நிலைமைகளை அறுதியிட்டுக் கருக் கோளத்தின் படம் வரைந்து, அதன் பரப்பில் ஒவ் வொரு பகுதியும் பின்னர் ப என்ன திசு அல்லது உறுப்பு உண்டாக அடிப்படையாக உள்ளது என்றும் குறித்துள்ளனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட படம், கருக்கோள உறுப்பாகு பகுதிகளின் நிலை காட்டும் படம் ( fate map or map of presumptive areas) எனப் படுகிறது. கருக்கோள உறுப்பாகு பகுதிகளின் படம் தயாரிக்க இயற்கை முறையும், செயற்கை முறையும் பயன்படுகின்றன. . இயற்கை முறை. சில உயிரினங்களின் அண்டங்கள் யல்பாகவே பல வண்ணங்களைக் கொண்டுள்ளன. வை செல்களின் பிளவிப்பெருகலின் போதும், வளர்ச்சியின்போதும் இடம் பெயர்ந்து செல்வதை எளிதில் காணலாம். கரு. முழு வளர்ச்சி அடையும் போ து அவை எங்கு சென்றடைகின்றன என்றறிந்து கருக்கோளச்செல்களின் பிற்கால நிலையைக் கண்டறி யலாம். இதை அடிப்படையாகக் கொண்டு கருக் கோள உறுப்பாகு பகுதிகளைக் குறிக்க முடியும். தவளை அசிடியன், டென்ட்டேலியம் உயிரினங்களின் அண்டங்கள் இத்தகைய சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. W. போன்ற ஆராய்ச் செயற்கை முறை, கருக்கோள உறுப்பாகு பகுதி களைக் கருக்கோளத்திலுள்ள அரும்புச் செல்களின் மேல், உயிருக்கு ஊறு விளையாவண்ணம் சாயம் ஏற்றி, அவற்றின் இடப்பெயர்ச்சியைக் கண்டுபிடிக் கலாம். 1925இலும், 1929இலும், ஜெர்மானிய ஆராய்ச்சியாளரான வால்ட்டர் வோட் (Walter Vogt) என்பார் வெவ்வேறு சாயப்பொருள் களைப் பயன்படுத்திக் கருக்கோளச் செல்களுக்கு நிறமேற்றினார். ஜேனஸ் பச்சை, நைல் நீலம், பிஸ் மார்க் பழுப்பு, நியூட்ரல் சிலப்பு போன்ற சாயங் களை அகார், செலோஃபேன் இவற்றில் தோய்த்து, கருக்கோளத்துக்கு எவ்வித ஊறும் நேராதவாறு அதன் செல்களுக்கு நிறம் ஏற்றிக் கருக்கோள உறுப் பாகு பகுதிகளைக் கண்டறிந்தார். இவ்வாறு அவர் முதலில் நீர்நில வாழ் இனங்களில் கருக்கோளத்தின் வெவ்வேறு பகுதிகளும் என்னென்ன உறுப்புகளை உருவாக்குகின்றன என்பதைத் தெளிவாக நிறுவி னார். பிற ஆராய்ச்சியாளர்கள் அதன் பின்னர், வோட் டின் முறையின் மூலம் வேறுசில நீர் நிலவாழ் உயிரி களிலும், பிற முதுகுத்தண்டுள்ள (chordates) உயிரி