பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/684

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 கருக்கோளம்‌

664 கருக்கோளம் வரை அதன் முழுப்பகுதியும் பிளவிப் பெருகலின் போது இரண்ட டாக, நான்காக ஆம்ஃபியாக்சஸ் போன்றவற்றில் செல் பிரிதல் அடைவதுண்டு; இத்தகைய முட்டைகளில் சுருவுணவு (மஞ்சட் கரு) மிகக் குறைவாகவும் முட்டையின் அனைத்துப் பகுதி களில் ஒரே சீராகவும் பரவியிருக்கும். தவளை போன்றவற்றின் முட்டைகளில் கருஉணவு கூடுதலாகவும், முட்டையின் உணவுத்துருவத்தில் செறிவாகவும் இருப்பதால், விலங்குத் துருவத்தில் செல்பிரிதல் விரைவாகவும், நேர் எதிர்த்துருவத்தில் செல்பிரிதல் மெதுவாகவும் நடைபெறும். இதனால், விலங்கு துருவத்தில் மிகு எண்ணிக்கையிலும், சிறு உருவிலும் கருக்கோளச் செல்கள் காணப்படும். அளவு உணவுத் துருவத்தில் உள்ளவை பெரிய செல் களாக இருக்கும்; இவற்றை முறையே சிறிய கருக் கோளச் செல்கள் (micromere), பெரிய கருக்கோளச் செல்கள் (macromeres) என்பர். கோழி முட்டை போன்ற மிக அதிகமான கருவுணவு உள்ள முட்டை களில் ஒரு சிறு தட்டுப் போன்ற அமைப்பில் முட்டை யின் மேற்பகுதியில் கருவும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் சைட்டோப்பிளாசமும் இருக்கும். பிளவிப் பெருகல் இந்தச் சிறிய வட்ட வடிவக் கருத்தட்டில் (blastodisc) மட்டுமே நிகழும். இதன்மூலம் டாகும் செல்கள் (blastomere) இத்தட்டிலேயே காணப்படும். கருவுணவு முழுதும் கருத்தட்டின் கீழ் முட்டையின் பெரும்பகுதி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். கருத்தட்டுக்கும், உணவுப் பகுதிக் கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியே கருக் கோளக் குழி ஆகும். உண் மேலும், பாலூட்டிகளின் கருக்கோளம் மாறு பட்ட அமைப்புடையதாகும். கருவுற்ற முட்டை பிளவிப் பெருகல் மூலம் 16 செல்களாக ஆனபிறகு அவற்றுள் சில ஒரு செல் வரிசையாகச் சுவர்போல அமையும்; எஞ்சிய கருக்கோளச் செல்கள் விலங்கு துருவத்தில் ஒரு கூட்டமாக அமைந்து மேலிருந்து ஒரு கொத்தாகத் தொங்கும். இவற்றை முறையே ட்ரோஃபோபிளாஸ்ட் செல்கள் எனவும். கும் செல்கள் அல்லது உள் செல்களின் தொகுதி (inner call mass) எனவும் குறிப்பிடலாம்; கருப் பிதுக்கம் (embryonic knob) என்றும் இதைக் கூறுவர். ட்ரோஃபோபிளாஸ்ட்டால் சூழப்பட்ட உண்டாக் வெட்ட வெளியான குழியில் உணவு எதுவும் இருப்பதில்லை; துவே கருக்கோளக் குழி ஆகும். பாலூட்டியின் கருக்கோளத்தைப் பிளாஸ்ட்டோசிஸ்ட் என்பர். அது முதுகெலும்பற்றவையின் கருவளர்ச்சியில் லெவ் வேறு வகையான (சில வேற்றுமைகளை உடைய) கருக்கோளங்கள் காணப்படும்,முது கெலும்புள்ள வற்றில் கருக்கோளங்களிடையே ஒன்றுக்கொன்று தொடர்புடைய அமைப்பைக் காண முடியும். கருக்கோளத்தின் இன்றியமையாமை. கருவுற்ற முட்டையில். உறுப்பாகும் பொருள்கள் (organ forming substances) அனைத்தும் உள்ளன. பிளவிப் பெருகலின் மூலம் கருக்கோளம் உண்டாகும்போது உறுப்பாகு பொருள்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரிந்து கருக்கோளச் செல்களில் அமைகின்றன. எனவே, கருக்கோளத்தின் செல் அமைப்பில் வேறு பாடுகள் உள்ளன. இத்தகைய செல்களின் தொகுதி கள் ஆங்காங்கே உறுப்பாகு பகுதிகளாகக் (presump- tive organ forming areas) கருக்கோளத்தில் உள் ளன. இவை புறத்தோலை உண்டாக்கும் புறப்படை (epidermal ectoderm) நரம்பு மண்டலத்தையும் அதன் பகுதியான நரம்புக்குழாயையும் (neural tube), பின்னர் மூளை, தண்டுவடம் ஆகியவற்றையும் தோற்றுவிக் கும் நரம்புப் புறப்படை (neural ectoderm) முதுகு நாணை உண்டாக்கும் பகுதி (notochordal area> நடு அடுக்கை உண்டாக்கும் இரு பகுதிகள் (mesoder mal areas) எனப் பகுக்கப்பட்டுள்ளன. வை முதுகு நாண் பகுதிக்கு இரு புறமும் உள்ளன. ஆம்ஃபியாக் சஸில் பிறைச்சந்திர வடிவில் ஒரே பகுதியாக இருக்கும். அக அடுக்கை (endoderm) உண்டாக்கும் பகுதி, உணவுத் துருவத்தில் அமைந்திருக்கும். இப்பெரும் பகுதிகள் தவிர வேறு சில உறுப்பாகு பகுதிகளும் கருக்கோளத்தில் உண்டு. ஆண்-பெண் னச்செல்களை (gametes) உருவாக்க மூல இனச் செல்கள் (primitive germ celis) அக அடுக்கு, நடு அடுக்கு, உறுப்பாகு செல்இவற்றுடன் ஒருங்கிணைந்து காணப்படும். முதுகு நாணுக்கு முன் உள்ள தட்டு (prechordal plate). முன் குடற் (foregut) பகுதியின் கூரையையும், தலையின் நடு அடுக்கையும் (mesoderm of the head) தோற்றுவிக்கிறது: இப்பகுதி கருக் கோளத்தின் பகுதிக்கு அருகில் இருக்கும். முதுகு நாண் நெல்சன் என்னும் கருவியல் அறிஞர், குறிப் பிட்ட இனத்திற்கே உரிய பெரும் உறுப்பாகு பொருள்களை மிகுவித்து அவற்றைப் பகுதிகளாக (areas) நிலை நிறுத்தி வரவிருக்கிற கருவளர்ச்சி நிலையில் (இரு அடுக்குக் கோளமாதலின்போது) அவற்றை நகர்த்த ஏதுவாகக் சுருக்கோளத்தில் அவற் றைக் குறிப்பிட்ட அமைப்பில் (pattern) ஒழுங்கு படுத்தி வைத்தலே கருக்கோளமாதல் (blastulation ) என்று குறிப்பிடுகிறார். மேலும் கருக்கோளத்தின் இன்றியமையாமை என்பது அடுக்குச் செல்களால் ஆன குறிப்பிட்ட வடிவத்தில் இல்லை. கருக்கோளச்சுவரில் சரியாக வரையறுக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, எதிர்காலத்தில் உருவாக,விருக்கும் உறுப்புகளைத் தோற்றுவிக்கும் பகுதிகளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்.