666 கருங்காடு
666 கருங்காடு மீட்டர் பெரும் ஆழம் உள்ள இக்கடல் நீரின் கொள்ளளவு 547,000 கன கிலோ மீட்டராகும். க்கடலைச் சுற்றி ரஷ்யா, பல்கேரியா, ருமேனியா, துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன. இக்கடலில் டான்யூப், நெஸ்ட்டர் நெபர், டான் போன்ற ஆறுகள் கலக்கின்றன. பனிக்காலத்தில் ஏற்படும் பனிமூட்டத்தால் இக் கடல் நீர் கருமையாகத் தெரிவதால் இதற்குக் கருங் கடல் என்று பெயரிடப்பட்டது. பண்டைக்காலத்து ரோமானியர்கள் இக்கடலை நட்புடைய கடல் (friendly sea ) என்றனர். கிழக்கு மற்றும் தெற்கில் அமைந்திருக்கும் காகசஸ், பான்டிக் மலைகள் இக் கடலைச் சூழ்ந்துள்ளன. தற்போது இக்கடலின் கிழக்கு முனைக்கருகில் ஆறுகளால் கொண்டு வரப் பட்ட படிவுகள் பரவலாகக் காணப்படுகின்றன. இக்கடலில் ஸ்மேய்ளி, பெரிசா, கெல்சென் அடாசி ஆகிய மூன்று தீவுகள் காணப்படுகின்றன. இக்கடலின் கரைக்கு அப்பால் உள்ள ஒரு திட்டுப் பகுதி இதன் மொத்தப் பரப்பில் கால் பங்கு வரை பரவிக் காணப் படுகிறது. இத்திட்டுப்பகுதி கெர்ச் நீர்ச்சந்தியின் முகப்பிலும், மேற்கிலும் அகன்று உள்ளது. ஆனால் பிற கடல்களால். 10-12 கி.மீ அகலத்தையும், ஏறத்தாழ 330-360 அடி வரை. ஆழத்தையும் கொண்டுள்ளது. சைனாப், சாம்சன் துறைமுகங் களுக்கு இடையில் உள்ள பகுதியில் ஏறத்தாழ 150 கி.மீ. பரப்புடைய நீரடி மலைகள் காணப்படு கின்றன. கோடைக் கருங்கடலின் மேற்பரப்பு நீரின் நீரின் வெப்பநிலை பனிக்காலத்தில் 0.5° - 6°C ஆகவும், காலத்தில் 26-C ஆகவும் உள்ளது. இக்கடலின் உப்புத்தன்மை மேற்பரப்பில் 17% ஆகவும் ஆழப் பகுதியில் ஏறத்தாழ 22.3% ஆகவும் உள்ளது. மார்மராக் கடலிலிருந்து பாஸ்போரஸ் (Bosporus நீர்ச்சந்தி வழியாக நீர்புகும் பகுதியில் உப்புத்தன்மை பல்கேரியா ேேமல் ருசிய கருங்கடல் மார்மாரக் கடல், படம் ஒன்றியம் துருக்கி மிகுதியாக (38%) உள்ளது. இக்கடல் நீரோட்டம் இடஞ்சுழியாகவுள்ளது. பெரும்பாலும் காற்றினால் இயக்கப்படும் இந்நீரோட்டம் வேகம் குறைந்தே உள்ளது. கருங்கடலின் முக்கிய தன்மைகளுள், மேற் பரப்பு நீர்ப்பகுதியில் மட்டும் ஆக்சிஜன் காணப் படுவது இன்றியமையாததாகும். இக்கடலின் ஆழ நீர்ப்பகுதியில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் ஏறத்தாழ 90 மீட்டருக்கு கீழே உயிரினங்கள் காணப்படுவதில்லை. மேலும் ஹைட்ரஜன் சல்ஃபைடு செறிவு மிகுதியாக உள்ளதால் இக்கடலில் வாழும் உயிரிகளின் எண்ணிக்கை பெருமளவில் பாதிக்கப் படுகிறது. ஃபில்லோஃபோரா எனும் நீர்த்தாவரம் ஏறத்தாழ 10,000,000 டன்னுக்கும் மேல் இக் கடலில் காணப்படுகிறது. ஆளிகள், மட்டிகள் மட்டு மல்லாமல் ஏறத்தாழ 180 க்கும் மேலான மீனினங் களும் இக்கடலில் உள்ளன. மேலும் இங்கு காணப் படும் சூடை, கம்சா. சாம்பல் மடவை (grey mullet). சுருங்கடல் சுறா போன்ற மீன்களும் வணிக நோக்கில் பிடிக்கப்படுகின்றன. கருங்கடல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உலகச் சந்தைகளோடு இணைக்கும் காரணத்தால் இது முக்கிய கடல் வழியாகக் கருதப்படுகிறது. இக்கடலின் மொத்த மீன்பிடிப்பில் மூன்றில் இரண்டு பங்கு சோவியத் நாட்டைச் சார்ந்ததாகும். மேலும் இக் கடலுருகே அமைந்திருக்கும் இடங்கள் சிறந்த உல்லாச இடங்களாகவும் இருக்கின்ற கருங்காடு றன. ம.அ.மோகன் இக்காடு மேற்கு ஜெர்மனியில் வடமேற்குப் பகுதி யின் பாடென் வர்டம்பர்க் நிலப்பகுதியில் ஸ்வார்ஸ் வால்ட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கருங் காடு (black forest) 160 கி. மீ. நீளமும் வடக்கில் 23 கி. மீ அகலமும் தெற்கில் 61 கி.மீ. அசுலமும் கொண்டது. இதன் மொத்தப் பரப்பு அளவு 5180 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது மலைகள் அடர்ந்த உயர்ந்த பகுதி ஆகும். ரைன் நதியின் குழிந்த பள்ளத்தாக்கின் மேற்குப் பக்கம் உள்ள வாஸ்ஜெஸ் என்னும் பகுதியின் முற்புற அமைப்பாக உள்ளது. கருங்காட்டில் பெரும்பாலான பகுதிகளில் வட்ட வடிவ உச்சிகளோடு கூடிய மலைகள் உள்ளன. கருங்காட்டின் வடபகுதியில் சிவப்பு மணல், கற்கள் அமைந்த காட்டுப்பகுதிகள் உள்ளன. மலைச்சாரலை அடுத்து ரைன் பள்ளத்தாக்கு தொடங்குகிறது. தெற்கில் உள்ள குறுகலான மலைகளற்ற பகுதியில் சுண்ணாம்புக்கல் அமைந்த