பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடங்களின்‌ பேணலும்‌ ஆய்வுக்கட்டுப்பாட்டுப்‌ பட்டியலும்‌ 49

கட்டடங்களின் பேணலும், ஆய்வுக் கட்டுப்பாட்டுப் பட்டியலும் 49 கட்டடம் பயனுக்கு வந்த ஆண்டு, மதிப்பீட்டுத் தொகை செலவுத் தொகை, அரசு ஒப்புதல் எண்! தொழில் நுட்ப ஒப்பளிப்பு எண் மற்றும் தொகை, கட்டடம் அமைந்துள்ள இடம். முழு முகவரி. கட்டடப் பரப்பு (ஒவ்வொரு தளமாக), கூடுதலாகப் பின்னர் கட்டியவை/மாறியவை (மதிப்பீட்டுத் தொகை கட்டப்பட்ட ஆண்டு விவரங்கள்) ஆகிய குறிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். கட்டடத்தின் அடித்தளம் எத்தனை தளங்களுக் காசு அமைக்கப்பட்டுள்ளது என்பதற்குரிய மிகவும் உயர் அளவு, இப்போது கட்டப்பட்டுள்ள அளவு. அடித்தளத்தின் வகை/அமைப்பு, மண்ணின் அமைப்பு, மண்ணின் காப்பு, தாங்கு திறன் முதலியவற்றையும், கட்டட வகைக்கான எளிய சுமை தாங்கு (load bear- ing) அமைப்பு, சட்டக அமைப்பு (framed structure), இரண்டும் கலந்த அமைப்பு ஆகியவற்றையும். தளவாரியாக உள்ள அமைப்பு/ அறை விவரங்களுக் குரிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி/ தரைத்தொட்டி! கிணறு விவரங்கள், அழகுத் தொட்டி/ஆய்வுக் குழி யறைகள் (inspection pit chamber) பற்றிய விவரங்கள், மின் மாற்றி/மின் பொருத்தி/மின் விசிறியின் விளக்கு கள் பற்றிய விவரங்கள் ஆகியவற்றையும் கொண்டி- ருக்கவேண்டும். மேலும் வரைபடம்/இட வரைபடம். ஒவ்வொரு தள வரைபடம் குறுக்கு வெட்டுப் படம்/ வரைபட எண் தொடர்பான விவரங்கள் அனைத்தை யும் ஒவ்வொரு பொதுக் கட்டடத்திற்கும் தொகுத்து எப்போதும் நிலையான பதிவேடாக (permanent record) வைக்க வேண்டும். ஆய்வுக் கட்டுப்பாட்டுப் பட்டியலின் பயன். கட்டடப் பராமரிப்புக்குப் பின்வரும் விவரங்கள் அடங்கிய ஆய்விற்குரிய பட்டியலைத் தயாரித்து அதை முறை யாக ஒவ்வொரு முறையும் பராமரிப்பு ஆய்வின் போது பயன்படுத்த வேண்டும். இந்த ஆய்வுக் கட்டுப் பாட்டுப் பட்டியல் ஒழுங்காகப் பயன்படுத்தப்பட்டால் இன்று நிலவும் பெரும்பாலான குறைபாடுகளை நீக்கவும் ஒவ்வொன்றிற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இயலும். மேலும் கட்டடங்களைப் பரா மரிக்கும் பொறியாளர், தொழில் நுட்ப உதவியாளர், வேலை லைத்தள உதவியாளர் ஆகிய அனைவருக்கும் இப்பட்டியல் பெரிதும் உதவியாக இருக்கும். ஆய்வுக் கட்டுப்பாட்டுப் பட்டியல்-படிவம், கட்ட பயன்படுத்தும் டத்தின் பெயர், கட்டடத்தைப் துறையின் பெயர், இவ்வாண்டில் இதற்கு முன் இக் கட்டடத்தைப் பார்வையிட்ட நாள், இவ்வாண்டு இக்கட்டடத்தில் செய்யப்பட்ட பராமரிப்பு வேலை பற்றிய முழு விவரங்கள், தற்போது பார்வையிட்ட நாள் இவை படிவத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஆய்வில் பார்வையிட்ட இனங்கள் மட்டும் தனியாகக் குறிப்பிடப்பட்டு இவற்றின் இன்றைய அ. க.7- 4 நிலையும் குறிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தளத் திலும், கீழ்த்தளம், சுவர், கூரை (ceiling). காரைப் பூச்சு, சுண்ணம்/வண்ணப்பூச்சு, கதவு, மேலதர், சன்னல், எஃகு எழிலமைப்பு, வண்ண எண்ணெய்ப் பூச்சு, கொக்கி, மூடு இவற்றில் உள்ள விரிசல், நீர்க் கசிவுத் தன்மை ஆகிய அனைத்து விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண் டும். கட்டை அடித்தளம், அடித்தள மேல் கட்டுமானம்; தரைமட்ட விட்டம்/ஈரத் தடுப்பு அமைப்பு: தரைத் தளம்/புழங்கு தரைத்தளம்; சுவர்கள் சன்னல் கீழ் மட்டப்பலகம்/மேல்மட்ட விட்டம்; தள/கூரைப் பலகம்; தட்பவெப்ப நிலைக் காப்பு வரிசை/மேலோடு: கைப்பிடிச்சுவர் சுமை ஏற்காத நிரப்புச் சுவர்கள்; கழிவறைகள்/ குளியலறைகள்; வெயில் மறைப்புகள்/ முன் பின் விரிவுக் கூரைப்பலகம்; கதவுகள், சன்னல் கள், பிற எழிலமைப்புகள் முதலியவை கட்டடம் பற்றியவையாகும். கிணறு/நகராட்சி நீர்ப்பிடிப்புக் குழாய்கள்; நீர் வழங்கு குழாய்கள், இணைப்புகள் - துணை அமைப்பு கள்: தண்ணீர்த் தொட்டி/மேல் நிலை-தரைநிலைத் தொட்டிகள்; நீரேற்று அறை/நீரேற்றுங் குழாய் அமைப்புகள்; குளியல் அறைகழிவறைத் தொட்டி கள் - குழாய்கள்; கை கழுவும் தொட்டிகள் என்பவை நீர் வழங்கல் பற்றியவையாகும். கழிவறைக் குப்பிகள் - குழாய்கள் - இணைப்புகள்: வண்ணத் தொட்டிகள்-வெளியேற்று வழியமைப்பு கள்; ஆய்வுக் குழியறைகள்; அங்கணங்கள்-கால்வாய் கள், காற்று வெளியேற்றிகள்-மூடு பலகங்கள் ஆகிய யவை பொதுவாகத் தூய்மைத் தளவாடம் பற்றி யவையாகும். மின் மாற்றிகள் - மின் கம்பிகள் மின்னிணைப்புப் பெட்டிகள் - மின் துண்டிப்பு அமைப்புகள்: மின் விளக்குகள் (பலவகைப்பட்டவை); மின் விசிறிகள்; மின் தூக்கிகள், தட்ப வெப்ப நிலைப்படுத்திகள்; தொடர் அமைப்புகள்; தீத்தடுப்புக் கருவிகள் முதலி யன மின்வழங்கும் தளவாடம் பற்றியவை. சுற்றுப்புறச் சூழிடம்; அணுகு பாதைகள் - பிற பாதைகள்-பாதை ஓரந்தாங்கிகள்: ஈரத்தளங்கள் கழிவு நீர் மழை நீர்க் கால்வாய்கள் சுற்றுச்சுவர் வேலைக் கம்பியமைப்புகள் - நுழை வாயில்கள்; தள பொருள் அறைகள் - தளங்கள்: மழைநீர் போக்கும் குழாய்கள்-வழிகள்: சிறு கொட்டகைகள் முதலியவை கட்டடச் சூழல் அமைப்புப் பற்றியவை யாகும். வாடப் அ. வீரப்பன் நூலோதி.Thoman H, Mckcing-Field Inspection of Building construction, Mcgraw-Hill Book com- pany Inc, Newyork, 1958, Jacok Field, Construc-