பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 கருஞ்சீரகம்‌

672 கருஞ்சீரகம் லாம். தேவையானால் தூக்கமருந்துகளின் மூலமாகத் தாயின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி அளிக்க லாம். தக்க உடனடி மருத்துவம் கருச்சிதைவு நிகழாமல் காக்கும். சில சமயங்களில், மருத்துவத்திற்குப் பின்னும் இரத்தப்போக்கு நிற்பதில்லை; அந்நேரங்களில் தொடர்ந்து இரத்தம் வெளியேறு வதைத்தடை செய்ய, கருவை வெளியேற்றிக் கருப்பையைத் தூய்மைப்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் இரத்தப் போக்கைத் தொடர்ந்து எவ்வித முயற்சியை யும் மீறிக் கரு இயல்பாகவே வெளியேற்றப்படுகிறது. இவற்றையே தவிராக் கருச்சிதைவு எனக் குறிக் கின்றனர். தூண்டுதற் கருச்சிதைவுகள் மருத்துவ முறை யிலும் அமையலாம். குற்ற முறையிலும் அமைய லாம் (medical & criminal) கருச்சிதைவு செய்வதற் கான அதிகாரம் பெறாதவர்களால், தூய்மையற்ற சூழ்நிலையில் செய்யப்படுவதே குற்றமுறைக் கருச் சிதைவாகும். குழந்தைகளை மிகுதியாகப் பெற்று மேலும் குழந்தை வேண்டாமெனக் கருதுவோரும் திருமணமாகாமல் தாய்மைப் பேறடைவோரும் தவறான முறையில் கருத்தரிப்போரும் விலைமாதர் களும் மறைவாகவே கருவைக் கலைக்கக் கருதிச் சட்டப்புறம்பான வகைகளை நாடுகின்றனர். இவ்வா கருச்சிதைவுகளைத் தோற்றுவிக்கப் பலவித முறைகளும் பயன்படுத்தப் றான மான கருவிகளும் படுகின்றன. மரப்பட்டைகள், களிம்பு தடவிய குச்சிகள் போன்றவற்றைக் கொண்டும், ஊசி மூலம் பல வகைப் பசைகளையும் நீர்மங்களையும் பிறப்புறுப்புக்குள் செலுத்தியும் கரு கலைக்கப்படுகிறது. பெண்கள் கை களில் பெரும்பாலும் இருக்கும் கொண்டை ஊசிகள், பின்னற் வேலைப்பாட்டு ஊசிகள் போன்! மறவையும் பயன்படுத்தப்படலாம். இவ்வகையைச் சார்ந்த கருச் தைவுகளால் பல சிக்கல்கள் உண்டாக்கப்ப படுகின்றன. இரத்தப்போக்கு, சீழ்பிடித்தல் கருப்பை, குடல், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளில் காயங்கள் போன்ற பின் விளைவுகள் தோன்றி உயிருக்கே கேடு விளைவிக்கின்றன. இசிவு நோயும் ஏற்படலாம். இத்தகு கருக்கலைப்பிற்கு உள்ளான தாய் உயிர் பிழைத்தாலும், இடையழற்சி, சிரை உறைவு அழற்சி போன்ற நோய்களால் தாக்கப் படுவதோடு நிலையான மலட்டுத்தன்மையும் அடை யக்கூடும். தனால் . குற்றமுறைக் கருச் சிதைவுகளாலும், அவற்றின் விளைவான சிக்கல்களாலும் தாய்மை நலக்கேடும், மரணமும் அளவுக்கு மீறக்கூடும்; தொடர்ந்து, கருச் சிதைவுகளையும் சட்டக் கட்டுப்பாட்டில் கொணர் தல் வேண்டும். இந்தியாவில் 1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து மருத்துவக் கரு அழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, தாய்மைப் பேறுற்ற பெண்ணின் உயிரைக் காப்பதற்காகவோ, அவளின் உடல் மன நலத்திற்கு உண்டாகக்கூடிய கேட்டைத் தடுப்பதற்காகவோ, பிறக்கவிருக்கும் குழந்தை உடல், மனக் குறைபாடுகளோடும் பிறக்கு மெனத் தெரிந்தால், நடவாமல் அதை நிறுத்துதற் காகவோ, கற்பழிப்பின் காரணமாக உண்டானகருப்ப மென்றாலோ, கருத்தடைக் கருவிகளின் தோல்வியால் ஏற்பட்டு விட்ட பிள்ளைப்பேறு என்றாலோ சட்ட வரம்பிற்கேற்ற கருச்சிதைவு செய்யலாம். கருவளர் காலத்தின் முதல் இருபது வாரங்களில் இது நிகழ்த்தப் படலாம் என இச்சட்டம் வரையறுக்கிறது. கருஞ்சீரகம் சுதா சேஷய்யன் இதன் தாவரவியல் பெயர் நைஜெல்லா நைஜெல்லா சடைவா (Nigella sativa) ஆகும். நைஜெல்லா என்பது நைஜர் என்னும் லத்தீன் சொல்லின் திரிபு ஆகும். இது கருமை நிறத்தைக் குறிக்கும். நைஜெல்லா என்னும் இனம் ரேனன்குலேசி எனப்படும் இரு வித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கருஞ்சீரகம் வான்ட் நாட்டைத் தாயகமாகக் கொண்டது. தற்போது இது இந்தியாவில் பஞ்சாப், பீஹார், இமாசலப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் பயிரிடப்படுவது மட்டுமல்லாமல் தன்னிச்சையாகவும் வளர்வதுண்டு. வளரியல்பு. கருஞ்சீரகம், ஏறத்தாழ 40-50 செ.மீ. உயரம் வளரக்கூடிய சிறு செடியாகும். . இலைகள். மாற்றிலையடுக்கு அமைப்பு: சிறகு வடிவ முறையில் 2ஆம் 3ஆம் நிலைவரை பிளவு பட்டிருக்கும் (bipinnate and tripinnate); இலைகள் 2.5 செ.மீ. நீளமிருக்கும். இலைப்பரப்பு குறுகிய நீண்ட நாடா போன்ற பகுதிகளாகப் பிளவு பட்டிருக்கும். மஞ்சரி. மலர்கள் தனித்தவை. தண்டு நுனி சைம் (cyme) வகை ஆகும். மலர்கள். நீண்ட காம்பு கொண்டவை. இரு-பால், ஒழுங்கான பூக்கள், வெளிர் நீல நிறமுடையவை: 2-2.5 செ. மீ குறுக்களவு செதில்கள் இல்லை. உடையவை. பூவடிச் கொண்டது. ஒழுங் புல்லிவட்டம். 5 புல்லிகள் கானவை: அல்லிகள் போல் வண்ணத்தோடு காணப் படும். விரைவில் உதிரக்கூடியவை. அல்லிவட்டம். 8. சிறிய, ஈருதடு கொண்ட உரு மாறிய, நுனி பிளவுபட்ட உறுப்புகளாகக் காணப்