பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 கருஞ்செம்பை

674 கருஞ்செம்பை படும். இவற்றைத் தேன்இலைகள் thoney leaves) என்பர். தேன் இலைகளில் குழல் போன்ற அடிப் பகுதியும் அதற்குப் பாதுகாப்பாகக் கூரை போன்ற பகுதியும் உண்டு. இதற்குள் தேன் சுரப்பிகள் காணப் படும். சில தாவரவியலார் இத்தேன் இலைகளை மகரந்தத் தாள்களின் உருமாற்றம் என்பர். அதாவது அவர்களின் கூற்றுப்படி நைஜெல்லா மலர்கள் அல்லி அற்றவையாகும். எண்ணிலடங்காதவை; மகரந்தத் தாள்கள். சுற்றுகளில் அமைந்திருக்கும். பல சூலகம். சூவிலைகள் 3-10. கீழ்ப்பாதி இணைந் தும் மேல்பாதி தனித்தும் காணப்படும். சூல்தண்டுகள் தனித்திருக்கும். சூலறை ஒன்று. சூல்கள் பல. கனி. பலபுற வெடி கனி வகை (capsule) ஆகும். கனியின் மேல் பகுதி பிளவுபட்டு விதைகள் வெளிப் படும். விதைகள். பல; கறுப்பாகவும் கெட்டியாகவு மிருக்கும். மகரந்தச் சேர்க்கை. பூச்சி நாட்ட வகையாகும். தேன் இலைகளில் தேக்கி வைக்கப்படும் தேனைச் சேகரிக்க வரும் பூச்சிகள் மகரந்தச் சேர்க்கையை நடத்துகின்றன. சாகுபடி. பொதுவாக இந்தியாவில் கருஞ்சீரகத் தைப் பெருமளவில் சாகுபடி செய்வதில்லை. மேலும் மலைக்காடுகளில் தன்னிச்சையாக வளரும் செடிகளி லிருந்து விதைகள் திரட்டப்படுகின்றன. வட இந்தி யாவில் இதன் விதைகளுக்காகவே இவற்றைப் பயிரிடு வதுண்டு. பயன். கருஞ்சீரக விதைகள் மணத்தோடு காரச் சுவையும் கொண்டவையாகும். அதனால் இவ்விதை களைக் கறி, உணவுப் பண்டங்களில் சேர்ப்பதுண்டு. வ்விதைகளைக் கம்பளி, லினன் துணிகளில் மடிப்பு களுக்கு இடையே வைப்பதால் பூச்சிகளின் தொல்லை இருப்பதில்லை. ஐரோப்பாவில் இவ்விதைகளை மணப் பொறு உருளா கவும், செரிப்பானாகவும் பயன்படுத்துகின்றனர். இவ்விதைகளைப் பொடி செய்து சிறிதளவு உட் கொண்டால் உடல் வெப்பநிலை உயர்வதோடல்லா மல், நாடித் துடிப்பும் மிகும். மேலும் தோல் மற்றும் சிறுநீரகச் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. கருஞ்சீரகத்தை மருந்தாகவும் பயன்படுத்துவர். செரியாமை நீக்கவல்ல மருந்தான ஹிங்குவாஷ்டசு சூரணத்தில் பெருங்காயம், திரிகடுகம், கருஞ்சீரகம் முதலியவை சேர்க்கைப் பொருளாகும். கருஞ்சீரசு விதைகள் முகப்பருவை நீக்கும் மருந்தாகப் பயன் பட்டு வந்ததாகத் தமிழ் மருத்துவ நூல்கள் கூறு கின்றன. நாட்டு மருந்துக் கடைகளில் காணப்படும் சுருஞ் சீரக விதைகள் மற்ற விதைகளால் கலப்படம் செய்யப் பட்டவையாகும். பொதுவாக இவ்விதைகளை முழு விதைகளாகக் கொடுக்க வேண்டுமேயன்றித் துண்டித்தோ பொடி செய்தோ பயன்படுத்தக் கூடாது. உட்கூட்டுப்பொருள். கருஞ்சீரக விதையில் சாம் பல் சத்து 4-5%, ஆவியாகும் எண்ணெய் 0.5-1.5%. கொழுப்பு எண்ணெய் 36-42% அளவில் காணப் படும். நீராவித் துணை கொண்டு காய்ச்சுதல் மூலம எளிதில் ஆவியாகும் எண்ணெய் எடுக்கப்படுகிறது இது சற்றுக் கெடுநாற்றம் கொண்டது. இந்த எண்ணெயிலிருந்து நைஜெல்லலோன் சேர்மம் கிடைக் கிறது. இதற்கு இருமல், ஆஸ்த்துமா போன்ற நோய் களைப்போக்கும் தன்மையுண்டு. விதைகளை நசுக்கிப் பிழிந்து எடுக்கப்படும் பகுதி-உலர் எண்ணெய் (semi- drying oil) சமையலுக்குப் பயன்படுகிறது. மேலும் இவ்விதைகளில் சிஸ்டின், லைசின், அஸ்பார்ட்டிக் அமிலம், குளுட்டோமிக் அமிலம், அலனின், ட்ரிப்டோஃபோன், வாலின் மற்றும் லூசின் முதலிய அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த சென்ட்ரான் தீரம் அன்தெல்மின்டிசும் (Centranthirum anthelminti- cum) காய்கள் சிறிய விதைகள் போல் காணப்படும். இவற்றைச் சிலர் கருஞ்சீரகம் என்று கூறினாலும், அதன் மருத்துவப் பெயர் காட்டுச் சீரகம் ஆகும். இது வெண்குஷ்டத்திற்குச் சிறந்த மருந்தாகும். தென்னிந்தியா முழுதும் தரிசு நிலங்களில் தன்னிச்சை யாக வளர்கின்றது. தி. ஸ்ரீகணேசன் கருஞ்செம்பை து அன்னபனன். சகுடை, செம்மை, சிற்றகத்தி, கருஞ்செம்பருத்தி, கருஞ்சிற்றகத்தி என்று வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா செஸ்பான் (Sesbania sesban). கருஞ்செம்பையின் பழைய பெயர்கள் செஸ்பேனியா எஜிப்ஷியாகா (Sesbania aegyptiaca), ஏஸ்கினோமீன் செஸ்பான் (schynamene Seshan) என்பனவாகும். பூக்களின் நிறத்திற்கேற்ப, கருஞ்செம்பையை மூன்று சிற்றினங்களாகப் பிரிக்கலாம். செஸ்பேனியா செஸ்பான் வகை டிப்பிகா: இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலிருக்கும். இதன் தாயகம் இந்தியா. செ. செஸ்பான் வகை பிக்ட்டா: பூவிலுள்ள கொடி அல்லி இதழ்கள் வெளிப்பக்கத்தில் கருஞ்சிவப்பு நிறப் புள்ளிகளுடன் இருக்கும். மிகுதியான அளவில் இது வளர்க்கப்படுகிறது. செ. செஸ்பான் வகை பைகலர்: