பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருஞ்செம்பை 695

கருஞ்செம்பை 675 கொடி அல்லி இதழ் கரும்பழுப்பு, சிவப்புநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இது விரைவில் வளரும் மென் மரமாகும். கிளைகளை வெட்டிவிட நன்கு தழைக்கும். குறுகிய காலமே வாழும் இம்மரத்தைச் சமவெளிப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் 1200 மீட்டர் வரையுள்ள பகுதி களிலும் காணலாம். இம்மரத்தின் பூக்களை நவம்பர் -மார்ச் வரையில் காணலாம். காய்கள் ஜனவரி மாதம் முதல் உண்டாகின்றன. கருஞ்செம்பை மருத்துவக் குணம் நிறைந்தது. இதைக் காற்றுத்தடை (wind break) மரமாக மிளகு. வெற்றிலைக் கொடிக்கால்களிலும் நெல் வரப்புகளிலும் திராட்சைத் தோட்டத்திலும் வளர்ப்பர். காற்றுத்தடையாக வளர்க்கும்போது மரங்களின் கிளைகளை வெட்டுவதில்லை. 1689 இதை மஞ்சள். தேயிலை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகிய பயிர்களுக்கு நிழல்தரும் மரங்களாக வளர்க்கலாம். இம்மரத்தை வெற்றிலைக் கொடிகளை ஏற்றி வளர்ப் பதற்காகவும் பயிரிடுவதுண்டு. இலைகளைக் கால் நடைகளுக்குத் தீவனமாகவும், பீகார் மாநில மக்கள் பூக்களைக் கறியாகவும் பயன்படுத்துவதுண்டு. இம் மரத்தின் வளர்ச்சி மிகு பனியினால் தாக்கம் அடை கிறது. தழைகளை வெட்டிப் பசுந்தழை உரமாக நெல் வயல்களுக்கு இடலாம். இலையில் பொட்டாசியம் 26.6% நார் 8.4%, நைட்ரஜன் இல்லாத சாறு 49.5%, சாம்பல் 10 கிராம் உள்ளன. மேலும் 100 திராம் தழையில் கால்சியம் 3250 மி.கி. கால்சியமும் 340 மிகி பாஸ்ஃபரஸும் உள்ளன. பூக்களில் ஃபிளே வோனோல்களும் மக்னிஷியமும் சிறிதளவு இரும்புச் சத்தும் உள்ளன. விதைகளில் புரதம் மிகுதி. நூறு கிராம் விதைகளில் 33.7 கிராம் புரதம், 4.8 கிராம் கொழுப்பு, 18.2 கிராம் நைட்ரஜன் இல்லாத சாறு, 28.3 கிராம் செல்லுலோஸ், 4.2 கிராம் சாம்பல், 89.4 மி.கி. வைட்டமின் C முதலியவை உள்ளன. பெட்ரோலியம், ஈதர் விதைச்சாற்றில் 5.3% பச்சை கலந்த மஞ்சள் நிற எண்ணெய் இருக்கும். விதை எண்ணெயில் பால்மிட்டிக் ஸ்டீரிக், லினோசெரிக் ஒலிக், லினோலினிக், லினோலிக் முதலிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. விதையிலுள்ள கேனவானின் என்னும் நச்சுப்பொருளின் காரணமாக இதன் புரதத் தைப் பயன்படுத்த இயலவில்லை. இது அர்ஜினைன் என்னும் அமினோ அமிலம் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. காய்களிலிருந்து பிரித்தெடுத்த விதைகளை அப் படியே பயன்படுத்தினால் கால்நடைகளுக்குத் தீங்கு உண்டாகும். விதைகளை 3 நாளுக்கு நீரில் ஊற வைத்து 30 நிமிடங்கள் வேகவைத்துக் கால்நடை களுக்கு உணவாகத் தரலாம். பட்டைகளிலிருந்து ir கருஞ்செம்பை நார் தயாரிக்கலாம். நார் 9.1-12.3 மீ விட்டமுடை யது. நாரில் 65.9% செல்லுலோஸ், 24.3% லிக்னிக் மற்றும் பெக்ட்டின், 2,2, சாம்பல் உள்ளன. இம் மரத் தக்கையை மீனவர்கள் மிதவைகளாகப் பயன் படுத்துவர். இம்மரத்தை வெல்லம் காய்ச்சுவதற்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதுண்டு. தென்னிந் தியப் பகுதிகளில் இதன் மரத்தடிகளைக் குடி வீடுகள் கட்டுவதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். பர்மாவில் இம்மரத்தைப் பயன்படுத்திப் பொம்மைகள் செய்கின்றனர். ஆஃப்ரிக்கா மரத்தண்டி லிருந்து அம்புகள் செய்வதுண்டு. இம்மரத்திலிருந்து பூச்சி மருந்தும், எழுது மையும் தயாரிக்கலாம். மக்கள் சை 15-20 மரம். கருஞ்செம்பை ஐந்து மீட்டர் உயரம் வளரும் தன்மையது. இதன் கிளைகளில் சில சமயங் களில் முள்களைக் காணலாம். இலைகள் 7.5-15 சிற்றிலைகள் செ.மீ. நீளத்திலிருக்கும். இணைகள் ரட்டைப்படைக் கூட்டிலை அமைப்பில் ருக்கும். லைகள் எதிரடுக்கத்தில் தோன்றும். சிற்றிலைகள் நீள்முட்டை வடிவில் 0.9-2, 0.2-0.4 செ.மீ. அளவில், ஓரம் வளைவில்லாமல் முழுமை இருக்கும். இலைக்காம்பு ஒரு செ.மீ நீளத்தி லிருக்கும். சிற்றிலைக்காம்பு ஒரு மி மீ. நீளத்தி லிருக்கும். செதில்கள் 7 இலையடிச் மி.மீ. நீளம் கொண்டிருக்கும். கூட்டிலைக்காம்பில் (rachis) யாக