பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கட்டடப்‌ படிமானங்கள்‌

50 கட்டடப் படிமானங்கள் -tion Failure-John Wiley & sons Inc, Newyork, 1968. Robt Hammond, Engineering Structural Failure, Odhams Press Ltd, London, 1956. கட்டடப் படிமானங்கள் த் ஒரு கட்டடத்தின் அடிமானம் (foundation) தாக்க முற்றால், அக்கட்டடம் நிலைகுலைகிறது. தாக்கம் கட்டடத்தில் ஏற்படும் சுமையாலோ, மானப்பொருள்கள் சிதைவடைவதாலோ அடி ஏற்படு கிறது. கடல் தறியில் (jetty) உள்ள தேக்குக் குத்துத் தூண்கள் (timber piles) மண், நீர் இவற்றில் உள்ள உயிரிகள், கறையான்கள், துளைப்பான்கள் ஆகியவற் றால் அரிக்கப்படலாம். கப்பல் உராய்தல் அல்லது இடித்தல்,பனிக்கட்டி போன்ற மிதக்கும் பொருள்கள் மோதுதல் போன்றவற்றாலும் தேய்மானம் அடைய லாம். மேலும் இக்குத்துத்தூண்கள் கடற்கரையோரங் களில் அமைக்கப்படுவதால் அலைகளாலும் அவை பாதிக்கப்படுகின்றன. கற்காரை அடிமானங்கள் நிலத்திலுள்ள சல்ஃபேட்டுகளை எதிர்க்கும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். சில சூழ்நிலை களில் எஃகு குத்துத் தூண்களில் கூட அரிப்பு ஏற்படு கிறது. தாக்கத்தின் அளவு அழிவுப்பொருள்களின் செறிவு நிலநீர் மட்டம், தட்பவெப்பநிலை ஆகிய வற்றைப் பொறுத்தது. ஆய்வுமுறைகள்: அடிமானங்களைக் காக்கும் முறையில், மண், நிலநீர் முதலியவற்றை விரிவாக ஆய்வு செய்வதே முதல் படியாகும். வேதியியல் ஆய்வுக்காக நிலநீர் மற்றும் மண்மாதிரி எடுக்க வேண்டும். நிலநீர் மட்டம் எந்த அளவிற்கு உயர் கிறது என்பதை ஆய்வது இன்றியமையாதது. மேலும் மண்ணில் எந்த விகிதத்தில் சல்ஃபேட் என்பதையும் ஆய்தல் வேண்டும். சல்ஃபேட்டுகளைக் குறைக்கும் பாக்ட்டீரியாக்கள் மண்ணில் இருந்தால் அவை மிகுதியான அரிப்பை உண்டாக்குகின்றன. உள்ளது ஒரு கட்டகப் படிமானம் இரு பகுதிகளைக் கொண்டது. அவை உடனடியான படிமானம் (immediate settlement), நேரம் கடந்த திடமான (consolidation settlement) படிமானம் ஆகும். உடனடியான படிமானம் சுமை ஏற்படும்போதே ஏற்படுகிறது. இது மண்ணின் நீர் அளவு மாறாமல் மண் உருக்குலைவதால் ஏற்படுகிறது. திடமானப் படிமானம் மண்ணிலுள்ள நீர் பிதிர்ந்து வெளிவந்து கன அளவு குறைவதால் ஏற்படுகிறது. மொத்தப் படிமானம் இவை ரண்டையும் சேர்ந்ததாகும். குறை அடர்த்தியிலிருந்து மிகு அடர்த்தியுடைய மண், சரளைக்கல்லில் உள்ள அடிமானங்களில், ரு படிமானங்களும் குறைந்தளவே உள்ளன. அவை ரண்டும். ஒரே சமயத்தில் ஏற்படும். சுமை அனைத்தும் ஏற்பட்ட நிலையில் மொத்தப்படிமானம் அடிமானத்தில் ஏற்படுகிறது. தளர்ந்த மண்ணில் (loose sand) சுமை ஏற்பட்டவுடன் பெருமளவு படிமானம் உண்டாகும். ஆனால் களிமண்ணில் நீண்ட நேரத்தில் குறைந்தளவே படிமானம் ஏற் படுகிறது. சமயம் மென்மையான வண்டல். களிமண் முதலிய வற்றில் குறைந்த சுமைகளிலேயே படிமானம் ஏற் படுகிறது. கடற்கரையோரங்களில் காணப்படும் தடுப்புச் சுவர்களில் மிகுந்த படிமானம் ஏற்பட்டால் அச்சுவர் சிதைவடையும் வாய்ப்புள்ளது. ஒரு கட்ட கத்தின் அடிமானம் ஒரே அளவிற்குப் படிவதால் அக்கட்டகத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவ தில்லை. ஆனால் அடிமானத்திலுள்ள பகுதிகள் வெவ்வேறு அளவுகளில் படிந்தால் கட்டகத்தில் ஆங்காங்கே தகைவுகள் (stress) தோன்றுகின்றன. அதனால் வெடிப்புகள், பிளவுகள் போன்றவை ஏற் படுகின்றன. படிமானம் மிகுந்தால் சில கட்டகமே சிதைவடையும் வாய்ப்புள்ளது. கட்டடச் சூழ்நிலை, மண் அமைப்பு, அடிமானத்தில் ஏற்றப் படும் சுமை ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள். அடிமானத்தில் மிகைச் சுமையேற்றல், கட்டகத்தி லுள்ள பகுதிகளை வெவ்வேறு கால இடைவெளி களில் கட்டுதல் போன்ற காரணங்களால் வேறுபட்ட படிமானம் (differential settlement) கட்டகங்களில் ஏற்படுகிறது. பல திசைகளில் உறுதியான மிதவை அடிமானங்களைக் (raft foundation) கட்டுதல், மிக ஆழமான அடித்தளம் அமைத்தல், தாங்கு சட்டங் களை அமைத்தல், குறைவான சுமைகளையுடைய பகுதிகளில் மிகு சுமையேற்றல் போன்றவற்றால் இதைத் தடுக்கலாம். கட்டட மரங்கள் இரா. சரசவாணி அறிவியல் முன்னேற்றத்தால் கட்டடப் பொருள்கள் காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்தாலும், இரும்பு வலிவூட்டப்பட்ட கற்காரை (reinforced concrete) போன்றவை நடைமுறையில் இருந்தாலும் மரத்தின் தேவை குறையவில்லை. ஏனெனில் மரங்கள் இயற்கை யில் எளிதில் கிடைப்பன; இவற்றை வடிவமைப்பதும் எளிது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தாத் தன்மையுடையவை ஆதலின் கட்டடப் பாதுகாப்பும் அமைகிறது. மரங்களின் நாரோட்டங்களாலும் (grain structure). இழை நயத்தாலும் (texture) வடிவமைப்பும் வண்ணமும் கவர்ச்சியும் அமைகின்றன. பயனுக்கும் விலைக்கும் ஏற்றவாறு பலவகை மரங்கள் கிடை க்கின்றன. வேண்டும் வலிமையை மிகுவிப்பதற்