682 கருத்தியல் படிமங்களிலிருந்து நடைமுறை உலைகளின் வேறுபாடுகள்
682 கருத்தியல் படிமங்களிலிருந்து நடைமுறை உலைகளின் வேறுபாடுகள் இது ஒரு நெருங்கிய தோராயமாகும். கருத்தியல் படிமத்தை ஒன்றியுள்ள நன்கு கலக்கப்பட்ட உலைக்கு இம்மதீப்பீடு ஒவ்வாது. ஏனெனில் இவ்வினைக்கலத் தில் நுழைந்தவுடனேயே பாய்மக் கலப்பு முழுமை யடைந்துவிடுகிறது. இந்நிலையில் தனிப்படுத்தப்பட்ட பாய்வைக் கற்பனை செய்து கொள்ளல் தவறாகும். சம குழாய் உலைக்கு உலையின் அச்சில் சீரான அதிர்வுடன் பாய்ம ஓட்டம் நிகழ்வதாகக் கொளல் (axial disperison model) நடைமுறை அமைப்பை நெருங்கும் உத்திகளுள் ஒன்றாகும். கொந்தளிப்புப் பாய்வு கொண்ட உலையின் இந்நிகழ்வு மாதிரி பொருத்தமானதாகும். மூன்றாம் படிமத்தில் கொள்ளளவு கொண்ட நன்கு கலக்கப்பட்ட வினைத் தொட்டிகளின் வரிசையைக் கருத்தில் கொள்ளுதல் சிறந்த பயன் தரும். நான்காம் வகையில் மீள் சுழற்சியுடன் (recycle) அமைந்த தடுப்புப் பாய்வு உலை கருதப்படுகிறது. பாய்மத்தின் பல்வேறு பகுதிகள் வெவ்வேறு திசைவேகங்களில் பாயக்கூடும். இதனால் கால்வாய்ப் போக்கு உருவாகக்கூடும். சில சுழலா மையங்களும் (dead spots) தோன்றக்கூடும். இவ்வாறு நிகழ்வ தற்குப் பாய்மம் நன்கு கலவாது. தனிப்படுத்தப் பட்டிருத்தல் (segregated) வேண்டும். மற்றொரு கார ணம் குழாய் அமைப்புள்ள உலையில் வளிம ஓட்டத் தின் திசையில் கலப்பு (local mixing) நிகழ்வதாகும். நடைமுறை உலைகளை நிறுவுதற்குக் கருத்தியல் படிமங்களின் சிறப்பியல்புச் சமன்பாடுகளைப் பயன் படுத்துகையில் அச்சமன்பாடுகளில் திருத்தக் காரணி அ. தடுப்புப் பாய்வு ஆ. முழுக் கலப்பு களைப் புகுத்த வேண்டியுள்ளது. ஓர் உலையில் வினைக்கலவையின் பாய்வுப் பாதைகளை அறிதல் தேவை. மேலும் வினையுறு தூள்களின் உலையுறை வாழ் காலம் (residence time) வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு அமைகிறது என்பதும் நன்கு அறியப்பட வேண்டும் இதை அறிவதற்கு உலையின் நுழைவாயி லில் வினைப்பொருட் கலவையுடன் வேவு பொருள் (tracer) ஒன்றைக் (எ.கா.) (சாயம் கதிரியக்க ஓரிடத் தனிமம்) கலந்து உலையின் வெளி முனையில் வேவுப் பொருளின் செறிவில் தோன்றும் மாற்றத்தைக் காலத்தின் சார்பலனாகக் குறித்துக் கொள்ள வேண் டும். இவ்வரைபடம் பதில் செயல் கோடு (response curve) எனப்படும். வினைப்பொருட் கலவையில் ஒரு நொடி நேரம் வேவு பொருளைக் கலந்தால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் (7) ஒரு தருணத்தில் வேவு பொருள் வினைக்கலத்தின் வெளி வாயிலில் தோன்றும், பின்பு செறிவு எதிர் பாராத விதமாகப் பூஜ்யத்தை அடையும். (படம் 1அ) ஏனெனில் தடுப்புப்பாய்வு வகை உலையில் அனைத்துத் துகள்களும் இணை கோடுகளில் ஒரே வேகத்தில் செல்கின்றன. துகள்கள் அனைத்துக்கும் உலை வாழ் காலம் சமமாகும். வேவுபொருள் ஒரு மெல் லிய அடுக்குப் பாதையில் செல்வதால் வினைக் கலனின் நுழைவு வாயிலில் உள்ள சாயப் பொருள் செறிவே வெளிவாயிலிலும் இருக்கும். முழுமையாகக் கலப்பு நிகழும் வினைக்கலவையில் சாயப் பொருளைச் சேர்த்தால் அதன் செறிவு படிப் படியாகக் குறையும் (படம் 1ஆ). தடுப்புப்பாய்வு வகையும் இல்லாது முழுமையாகக் கலவையும் C வேவு பொருள் உலை உறை வாழ்காலம் செறிவு TU இ. நல்லியல்பற்ற பாய்வு τ படம் 1.