684 கருதுகோள் ஆய்வு
684 கருதுகோள் ஆய்வு எண் (peclet number) எனப்படும். இதன் மதிப்பு, சுழியிலிருந்து (தடுப்பு முறை உலை) முடிவிலி (infinite) (முழுக் கலப்பு வகை உலை) வரை இருக்கக் கூடும். படம் 2 இல் உள்ள பதில் செயல் கோடுகள் இதை விளக்குகின்றன. விரவல் வகைப் படிமம் நிலையான திண்மப் பொருளினூடே செலுத்தப்படும் வளிமங்களுக்கும், குழாய் வகை வினை உலைகளுக்கும் பொருத்தமாகும். கலவைத் தொட்டி வகைப் படிமத்தில் (mixed tank model) சம கொள்ளளவு கொண்ட முழுக் கலப்புற்ற அடுத்தடுத்து அமைந்த பல தொட்டிகளில் பாய்வு நிகழும் தோற்றம் உருவகப்படுத்தப்படுகிறது. ஒரு தொட்டிக்கும் அடுத்துள்ள தொட்டிகளுக் கும் இடையே கலப்பு இல்லையெனக் கொள்ளப்படு கிறது. தொட்டிகளின் எண்ணிக்கை கூடுதலாகி, இறுதியில் எண்ணிறந்த நிலையடையும்போது தடுப்புப் பாய்வு ஆகிறது. a மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி IP. Mukhlymov, Chemical Technolog Part I, Mir Publishers, Moscow, 1979. கருதுகோள் ஆய்வு ஒவ்வொருநிலையிலும் முழுமைத் தொகுதியை ஆய்வு செய்ய இயலாது. ஆகவே கூறுகளை ஆய்வு செய்து அதனால் பெறப்படும் முடிவு முழுமைத் தொகுதிக் கும் பொருந்துவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட நோயைத் தடுக்கவல்ல ஒரு மருந்தை ஆய்வு செய்ய அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் நிலையை மருந்து பயன்படுத்தியோர், பயன்படுத்தா தோர் ஆகிய இருபாலாரையும் கொண்டு அறிய முடியும். அதேபோல் புதிய முறையில் கயிறு தயா ரிக்க விருப்பப்படும் ஒரு வணிகர் பழைய முறையில் தயாரிக்கப்பட்ட கயிறுகளில் உள்ள கோளாறுகளை உணர வேண்டும். அப்போதுதான் எடுத்த குறிக் கோளை நிறைவேற்ற முடியும். கருதுகோள் ஆய்வில் (testing of hypothesis) இருவிதப் பிழைகள் ஏற்படுகின்றன. கொள்கை சரி யானதாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட ஆய்வு அதை நிராகரிப்பது முதல் பிழையாகும். கொள்கை தவறாக இருக்கும் போது ஆய்வில் அதை ஏற்றுக் கொள்வது இரண்டாம் பிழையாகும். வை முத லாம் வகைப்பிழை (Type I error) இரண்டாம் வகைப் பிழை (Type II error) எனப்படும். உண்மை யிலேயே பொருட்படுத்தத்தக்க வேறுபாடு இல்லா திருக்கும்போது வேறுபாடு மிகைத்தன்மை வாய்ந்த தாகக் கொண்டு இல் என்னும் எடுகோளை, (Null hypothesis) நிராகரிக்கும்போது முதலாம் வகைப் பிழை ஏற்படுகிறது. உண்மையிலேயே பொருட்படுத் தத்தக்க வேறுபாடு இருக்கும்போது வேறுபாடு மிகைத்தன்மை வாய்ந்தது எனக் கொண்டு இல் எனும் எடுகோளை ஏற்றுக் கொள்ளும்போது இரண் டாம் வகைப் பிழை ஏற்படுகிறது. ஆய்வில் எடுத்துக் கொள்ளும் எல்லையினால் முதலாம் வகைப் பிழை முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. 5% கருதளவு எல்லையுடைய கொள்கைகளைக் கூட 100க்கு 5 நிலைகளில் t>1.96 ஆக இருப்பின் நிராகரித்துவிடலாம். இதேபோல் பிற நிலைகளைக் கூறவியலும். மிகைத்தன்மை வரையினைக் குறைப் பதன் மூலம் முதலாம் வகைப்பிழையை எவ்வளவு சிறியதாக வேண்டுமானாலும் ஆக்கி விடலாம். ஒரே சமயத்தில் இரு பிழைகளையும் குறைத்தல் இயலாது. இரண்டாம் வகைப் பிழையைவிட முதலாம் வ வகைப் பிழையைக் குறைத்தல் ஆய்வுக் கொள்கைகளில் முக்கியமானதாகும். கருந்துளை விண்மீன்கள் மு. அரவாண்டி . ஈர்ப்பு விசையின் காரணமாக அண்டவெளியில் பரந்து விரிந்துள்ள வளிம மூலக்கூறுகள் இறுக்கப்படும்போது. அடர்த்தியான வளிமக்கோளம் உருவாகிறது. இச்சுருக்கத்தால் வளிமக்கோளத்தின் வெப்பநிலை 3000-6000 கெல்வின் மிகுதியாகலாம். இந்த வெப்ப நிலை உயர்வு ஈர்ப்புச் சுருக்கத்தை ஒரு வரம்பிற்கு உட்படுத்துவதோடு. வளிமக்கோளத்திலுள்ள மிக லேசான ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் படம் 1. அணுக்