பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்பு 691

கரும்பு 691 அந்துப்பூச்சி பழுப்பு நிற பழுப்பு,சிவப்பு-பழுப்பு, வெண்பழுப்பு ஆகிய நிறங் ல்லாத களில் இருக்கும். பொதுவாக,கறுப்பாக விலங்குகளில் ஒரு சில இயல்புக்கு மீறிய மிகுந்த கறுப்பு நிறத்துடன் பிறப்பதுண்டு. இவை கரும் பிறவிகள் எனப்படும். இவற்றின் தோல், மயிர், சிறகு, தலை முதலியவற்றில் இயல்புக்கு மீறிய கருநிறமி இருப்பதால் சுறுப்பாகக் காணப் படுகின்றன. வை சுரப் விலங்குகளின் உடலில் பொதுவாக நொதிகள் என்னும் வேதிப்பொருள்கள் வேறு சில பொருள் களுடன் சேரும்போது கறுப்பு நிறம் ஓரளவு உண்டா கிறது. இவ்வேதிச் செயலால் மட்டும் விலங்குகள் கறுப்பாகி விடுவதில்லை. ஆனால் சூரிய ஒளிபட்டால் கறுப்பாகி விடுவதுண்டு. எடுத்துக்காட்டாக, இளம் உருமாற்றத்தின்போது பான் பூச்சி வளர் பூச்சிப் பருவத்தில் வெண்மை, வெண் பழுப்பு நிறத்தி லிருக்கும். சூரிய ஒளி பட்டவுடன் கரும்பழுப்பு நிறம் பெற்றுவிடுகிறது. கருநிறம் அதிகரிப்பதை அட்ரினல் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன் ஊக்குவிக்கிறது. கரும்பிறவித்தன்மை பொதுவாகப் பெரும் பாலான விலங்குகளில் இயற்கையாக உள்ள இயல்பு களில் ஒன்றாகும். கருநிறமற்ற சில விலங்குகளில் கருநிறமுள்ளவை தோன்றிப் படிமலர்ச்சி பெற்றுப் பல்கிப் பெருகுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு இறுதி வரையில் ஐரோப்பா தொழில் துறையில் முன்னேறாமல் இருந்த காலத்தில் தொழிலகங்கள் மிகக் குறைவாயிருந்தன. இதனால் தொழிலகங்களி லிருந்து வரும் புகை போன்ற கழிவுகளும் குறைவா யிருந்ததால் அவற்றைச் சுற்றியுள்ள வயல்களிலும் காடுகளிலும் மரங்களும் செடிகளும் பெரிதும் பாதிக் கப் படவில்லை. மரப்பட்டை. நிறத்தையொத்த சாம்பல் நிற இறக்கையுடைய அந்துப்பூச்சி (moth) பிஸ்டன் பெட்டுலேரியா (piston petularia) எதிரி கருப்புநிற மரப்பட்டையில் அமர்ந்துள்ளமை களின் பார்வையில் படாமல் தப்பிப் பெருகி வாழ்ந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி யில் ஐரோப்பாவில் தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் தோன்றிய மிகுதியான தொழிலகங்களிலிருந்து வந்த கரும்புகை வயல் வெளிகளிலும் காடுகளிலும் நிரம்பி, செடிகளை யும் மரங்களையும் கருநிறமாக்கின. கரும்புகை மரத்தில் நிரம்பிய பின்பு இப்பூச்சிகள் கருநிற அமரும்போது தெளிவாகத் தெரிந்ததால் எளிதில் இரையாயின. 1845இல் தொழிலகங்கள் நிறைந்த மான்செஸ்ட் டர் பகுதியில் திடீரெனக் கருநிற அந்துப்பூச்சிகள் தோன்றின. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் கருநிற அந்துப்பூச்சிகள் பல்கிப் பெருகி 99% வரை வந்து விட்டன.இன்று சாம்பல் நிற அந்தும் பூச்சிகளே உள்ளன. சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். கரும்பு ஒரு சில கே.கே.அருணாசலம் சர்க்கரை பல தாவரங்களிலிருந்து கிடைத்தாலும், கரும்பிலிருந்துதான் சிறப்பாகவும். மிகுதியாகவும் தயாரிக்கப்படுகிறது. கரும்பு தொன்மை வாய்ந்த பயிராக இந்திய நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 326 ஆம் ஆண்டிலேயே அலெக்சாண்டரின் படை யினர் கரும்பைக் கண்டிருந்தனர். நாணலில் இருந்து உண்டாகிய தேன் என்று கரும்பைப் பற்றித் தியோஃ பிராஸ்டஸ் குறிப்பிடுகிறார். கிறிஸ்து பிறந்த ஒரு நூற்றாண்டிற்குப் பிறகுதான் ஐரோப்பாவிற்றுக்