692 கரும்பு
692 கரும்பு கரும்பு கொண்டு செல்லப்பட்டது என்பது டயாஸ் கொரிடிஸின் கருத்திலிருந்து தெரிய வருகிறது. இந்தியாவிலிருந்து அரேபியாவிற்குக் கரும்பு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அது எகிப்து நாட்டை அடைய ஐந்நூறு ஆண்டுகள் ஆனது. இந்தியாவி லிருந்து பாரசீகத்திற்கும், அங்கிருந்து எகிப்து நாட்டிற்கும் கி. பி. 641 ஆம் ஆண்டில் சென்று பிறகு சிரியா, சைப்ரஸ், கிரேட்முதலிய நாடுகளுக்கும், கி.பி. 714 இல் ஸ்பெயினுக்கும் கொண்டு செல்லப்பட்டது. கி.பி. 1420இல் போர்ச்சுக்கீசியர்கள் கரும்பை மதீராவிற்கும், பிறகு அங்கிருந்து கானரித்தீவுகள், அஸோரிஸ், மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் எடுத்துச் சென்றனர். கொலம்பஸ் தம் ரண்டாம் உலகக் கடல் பயணத்தில் சர்க்கரையை எடுத்துச் சென்றார். கரும்பு கி.பி.1506 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கும், கி.பி. 1520 இல் மெக்ஸிகோவிற்கும், 1532 இல் பிரேசிலிற்கும், 1533 இல் பெருவிற்கும் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் கொண்டு செல்லப் பட்டது. இனங்களும் தோற்றமும். இது சக்காரம் பேரினத் தில் ஒருவித்திலைத் தாவரங்களுள் குளுமேசீ என்னும் தொகுதியுள் கிராமினே என்னும் குடும்பத்தில் ஆண்ட்ரோ போகனே என்னும் துணைக் குடும்பத்தில் வைக்கப்படும். இப்பேரினத்தில் பல்லாண்டு வாழும் ஆறு புல்வகையுண்டு. இவற்றுள் சக்காரம் ஸ்பான் டேனியம் (2n - 40-128) இயற்கைவாழ் இனமாக இந்தியாவிலிருந்து தோன்றி அங்கிருந்து மத்திய தரைக்கடல் நாடுகள் கிழக்கு, வடக்கு, ஆஃப்ரிக்கா. சைனா. தைவான். மலேசியா, நியூகினியா முதலிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது கெட்டி யானது: குறைந்த சாறு உடையது. நீண்ட கணு வெளிப் பகுதிகள் உடையது. . சக்காரம் ரோபஸ்டம் (Saccharum robustum) (2n = 60-194) என்னும் கரும்பினம் நியூகினியா மலேஷியாத் தீவுகளில் 1928 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகவும் கெட்டியானது, குறைந்த சாறு உடையது. சக்காரம் அஃபிஷினேரம் (Saceham) Officincrum) உயர் வகைக் கரும்பு என்று கருதப்படும். இது தென்பசிபிக் தீவுகளான நியூகினியாவிலிருந்து தோன்றியது. இதில் சாறு மிகுதி. கெட்டியான புறணி இல்லாததால் மென்று தின்ன உதவுகிறது. இது வட இந்தியக் கரும்பு வகைகளுக்கு முன்பே பயிரிடப்பட்டு வந்துள்ளது. வங்காளம், பீஹார் ஓரிஸ்ஸா கிய பகுதிகளில் ச. அஃபிஷினோம், ச. ஸ்பான்டேனியம் இவற்றின் கலப்பால் வட இந் தியாவில் காணப்படும் ச. பார்பெரி (S barb.ri) (2n = 82-124) ச. சைனென்ஸ் (S. Sinense) (2n=118) ஆகியவை உண்டாயின என்றும் கருதப் படுகிறது. கரும்பு 2 1. இலைப்பட்டை 2. சிலிர்ப்பட்டை 3. அலகு வளரியல்பு. கரும்பு ஒரு பெரிய புல். இது 12-30 அடி உயரம் வரை வளரும். ஒவ்வொரு தண்டும் ஏறத்தாழ 21-7 கி.கி வரை எடையுடையது. தண்டு கெட்டியானது; 'கணுக்களும் கணுவிடைப்