பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்பு 693

கரும்பு 693 பகுதிகளும் உண்டு. சராசரியாக ஒரு கரும்பில் ஏறத்தாழ 20 கணுக்கள் இருக்கும், தரையை ஒட்டி யுள்ள கணுக்களில் இருந்து 4-6 வரை தாம்புகள் (tidlers) தோன்றும். தண்டின் சராசரிக் குறுக்களவு, நிறம் முதலியவை மாறுபடும். மூன்று சென்டி மீட்டர் குறுக்களவு உள்ள கரும்புகள் மெலிந்தவை என்றும். நான்கு சென்டி மீட்டர் குறுக்களவு உடையவை சாதாரணமானவை என்றும், நான்கு செண்ட்டிமீட்டருக்கு மேல் குறுக்களவு உடையவை கொழுத்தவை என்றும் கருதப்படும். கணுவிடைப் பகுதிகள். இவை உருவத்தில் மாறு பட்டுள்ளன. பீப்பஸ், உருளை, கதிர் போன்ற பல வடிவங்களிலும் மாறுபட்ட நீளங்களிலும், நிறங் களிலும் காணப்படும். ஒவ்வொரு கணுவிலும் கோண மொட்டுக் காணப்படுகிறது. ஏனைய கணுக்கள். இனங்களுக்கு ஏற்றவாறு கணுவிடைப்பகுதியை யைவிடப் பருத்தோ, சிறுத்தோ கணுக்கள் தோறும் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன. உள்ளன. . வளர்ச்சி வளையம். இது கணுவிற்கும் கணு விடைப் பகுதிக்கும் இடையேயுள்ள குறுகிய பகுதி ஆகும். இதன் அகலமும், நிறமும் மாறுபடும். இப்பகுதிகளில் எப்போதும் பகுப்பு அடைந்து கொண்டே இருக்கும் இடை ஆக்குத்திசு உள்ளது. கரும்பு காற்றினால் முறியாத வண்ணம் இப்பகுதி வளைந்து கொடுத்துக் காக்கிறது. வேர்ப்பட்டை. வளரும் வளையத்திற்கும், இலை உறையின் இணைந்த பகுதிக்கும் நடுவே உள்ள இடைவெளி வேர்ப்பட்டை எனப்படும். அது ஏமி.மீ. 12 மி.மீ. வரை அகலம் உள்ளது. இது கணுர விடைப் பகுதியைவிட மாறுபட்ட நிறத்தை உடையது. இப்பகுதியிலிருந்து பல் வேற்றிடவெளி வேர்கள் தோன்ற வாய்ப்புண்டு. இலைவடு. இலை விழுந்தபிறகு எஞ்சியிருக்கும் வை உறையின் அடிப்பகுதி இலைவடு எனப்படும். இளம் கரும்புக் கணுக்களின் இப்பகுதியில் நீண்ட தூவிகள் காணப்படும். இலை முதிர்ச்சி அடையுமுன் இவை எளிதில் உதிர்ந்துவிடும். சாம்பல் பட்டை, இலைவடுவின் கீழே 1 செ.மீ. அகலத்திற்குச் சாம்பல் நிறம் கலந்த கடற்பச்சை நிறமுள்ள பகுதி உள்ளது. இதில் மெழுகுப்பூச்சு உள்ளது. மொட்டுகள். மொட்டின் உருவம் பல்வேறு இனங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. இது பல வகை வடிவங்களிலும், சிலசமயம் தூவிகளுடனும் காணப்படும். இலைஉறை. இதன் மேற்பரப்பில் பல விறைப் பான தூவிகள் உள்ளன. சிலவற்றில் தூவிகள் இருப்ப தில்லை. பல வண்ணங்களிலும் காணப்படும். 3. கணுவிடை 2. அடி 4. தண்டோடு கூடிய வடிவச் சிவிர் நீட்சி இவை -5 இலைப்பட்டை சீ. இலைப்பட்டை இலை விளிம்பு 5, சிலிர் 6. செவி இதன் வாய்ப்பகுதி நிறமற்றது: இரு நிறம் கொண்ட முக்கோணப்பகுதிகள் உள்ளன; இதன் சிலிர் (ligule) பழுப்பு நிறத்துடன் குட்டையாக வளைந்து காம்பைப் பற்றி இருக்கும்.