பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்பு 695

வாறு நிலச்சூழலும் மாறுபடுகிறது. செம்மண் நிலத் திலும் கரும்புச் சாகுபடி செய்யலாம். இந்த நிலத்தில் நுண்துளைகள் மிகுதியாக உள்ளமையால் இது நல்ல வடிகால் வசதி பெறுகிறது. எனவே இந்த நிலத்தில் அடிக்கடி உரம் இடவேண்டும். இரும்புக் (tractor) நிலம் தயாரிப்பு. கரும்புச் சாகுபடிக்குச் சிறந்த தண்ணீர் வசதியும் வடிகால வசதியும் உள்ள மேட்டுப் பாங்கான நிலத்தைத் தேர்ந்து எடுத்து, கலப்பை அல்லது இழுவை எந்திரம் கொண்டு நன்றாகப் புழுதி ஆகும்படி உழுதல் வேண்டும். கரும்பு நடுவதற்குச் சால்களை 80 செ.மீ. இடை வெளியில் 20 செ.மீ. ஆழத்தில் அமைக்க வேண்டும். நீர் பாய்ச்சத் தனியாக வாய்க்கால்களைத் தேவைக்கேற்ப விட்டு இடைவெளி அமைக்க வேண்டும். நிலத்தைச் சுற்றிலும நிலத்தின் உள்ளும் 10 செ.மீட்டருக்கு ஒன்றாக 45-50 செ.மீ. ஆழ முள்ள வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். கரும்பின் தரம். கரும்பு வகைகள் நன்றாக விளையக்கூடியவையாகவும், தரம் உயர்ந்தவையாக வும், நோய்கள் பாதிக்காதவையாகவும், ஆலைகளின் தேவைக்குத் தகுந்தவாறு அறுவடை செய்வதற்கு ஏற்றவையாகவும் இருக்க வேண்டும். விதைக்கரணைகளைத் தேர்ந்தெடுத்தல். விதைக் கென்றே விளைவித்த 6-8 மாதமான குறுகிய காலப்பயிரின் விதைக்கரணைகள் விதைக்கு மிகவும் ஏற்றன. ஒரு கரணை என்பது மூன்று கணுக் களையும் இரு கணுவிடைப்பகுதிகளையும் கொண் டது. இதில் மூன்று கோண மொட்டுகள் உள்ளன. ஓர் ஏக்கர் நட 50,000 கரணைகள் தேவைப்படும். நடுவதற்கு முன் சுரணைகளைப் பெலிஸ்டின் அல்லது அகலால் மருந்து கலந்த நீரில் ஆழ்த்தி எடுத்து நட வேண்டும். கரையான் பாதிப்பு டங்களில் உள்ள ஹெக்ட்டேருக்கு 37.5 கி.கி. வீதம் BHC 10 என்னும் மருந்தை நடவுசால்களில் தூவி நடும்போது கரணையின் மொட்டுகள் பக்கவாட்டில் இருக்கும் படியும், கிடங்கின் சரிவில் தெரியும்படியும் மண்ணில் அழுத்திவிட வேண்டும். 3, 4 வாரங்களுக்குள் வெற்றி டங்களிலும் முளைத்த கரணைகளை நட்டுவிட வேண்டும். நடவுககாலம். கரும்பை டிசம்பரிலிருந்து மே மாதம் வரை நடுவர். முன்பட்டத்தில் நட்டு ஜனவரி பிப்ரவரி மாதத்தில் அறுவடை செய்தால் உயர் விளைச்சலும் சர்க்கரையும் கிடைக்கும். பெரு மழை பொழியும் மாதங்களில் கரும்பு நடவு கூடாது. ஆடிப் பட்டத்தில் ஜூலை - செப்டம்பர் மாதங்கள் நட விற்குச் சிறந்தவை. - உரமிடுதல். நட்ட கரும்பு நன்றாக வளர்வதற் குப் போதுமான உரத்தை உரிய காலத்தில் ஏற்ற அளவில் இடுவது இன்றியமையாததாகும். கரும்பு 695 அடியுரம். கரும்பு நடவிற்கு முன்பாக அடி உர மாக ஹெக்ட்டேருக்கு 25 டன் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் உரத்தை இறுதி உழவிற்கு முன்பாக இடவேண்டும். கிலோ சூப்பர் பாஸ்பேட் நடவிற்கு முன்பாகப் பார்களில் வீசி, களைக் கொத்தி யால் மண்ணில் உரத்தை நன்றாகக் கலக்க வேண்டும். 400 மேலுரம். மேலுரமாக நைட்ரஜனையும், பாஸ்ஃ பரஸையும் நட்ட 45 நாளிலும் பிறகு 90 நாளுக்குப் பிறகும் இரு பகுதியாகப் பிரித்து இடவேண்டும். நைட்ரஜன் உரமிடுதலை நட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முடித்துவிட வேண்டும். காலம் நீட்டித்து உரம் இடுவதால், பயிரின் வளர்ச்சிக் காலம் நீடித்து கரும்பு முதிர்ச்சி அடைய நீண்ட நாளாகும். அள பயிரின் வளர்ச்சியை அதிகப் வுக்கு மீறி உரமிடுதல் படுத்தி, கரும்பில் சர்க்கரையின் அளவைக் குறைத்து விடும். இலைகளின் மேல் யூரியா தெளித்தல். கரும்பிற்கு வேண்டிய நைட்ரஜனை இரண்டு முறையாக மண்ணில் இடுவதைவிட, பாதி நைட்ரஜன் (138 கிலோ) உரத்தை நாற்பத்தைந்தாம் நாளில் மண்ணில் பயிர்களின் தூர்களில் போட வேண்டும். எஞ்சிய நைட்ரஜன் உரத்தைத் தொண்ணூறாம் நாளில் மண்ணில் இடுவதற்குப் பதிலாக 58 திலோ நை ரஜன் சத்துக் கொடுக்கக்கூடிய தூய யூரியாக் கரை சலை (78 கிலோ யூரியாவை 2500 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்) இரு முறையாகத் தொண்ணூ றாம் நாளிலும் நூறாம் நாளிலும் கரும்புத் தோகை களின் மேல் தெளிக்க வேண்டும். இதனால் உரமிடு வதில் 58-85 கிலோ ஹெக்ட்டேருக்கு நைட்ரஜன் உரம் எஞ்சும். க வரை வாரங் பின் செய் நேர்த்தி, கரும்பு தட்டச் களுக்குப் பிறகு களை எடுக்க வேண்டும். நிலத்தின் தரத்திற்கு ஏற்றவாறு மீண்டும் ஒருமுறை தனை எடுக்க வேண்டும். ரண்டாம் முறை உரம் வைத்த பிறகுகரும்புத் தோகைகளைக் கரும்புத் தூர்களுக்குப் பக்கவாட்டில்வைத்து மண் அணைக்க வேண்டும். ஓங்கி வளர்ந்த கரும்பு காற்றின் வேகத்தால் சாய்ந்து ஒடிந்து விழாமலிருக்கக் கரும்புத் தூர்களுக்கு உயர மாக மண் அணைக்க வேண்டும். தோகைகளைச் சங்கிலி போலப் பிணைத்துக் கரும்பு வரிசைகளுக்கு இடையே விட்டம் கட்ட வேண்டும். நீர்ப்பாசனமும் வடிகாலும். கரும்பு நட்டு நன்றாக முளைக்கும் வரை வாரம் ஒரு முறையும். 1-3 மாதம் வரை தூர்கள் வெடிக்கும் பருவத்தில் பத்து நாளுக்கு ஒரு முறையும், பின்னர் வளர்ச்சிப் பருவத்தில் பத்து மாதங்கள் வரை வாரம் ஒரு முறையும். கரும்பு முதிர்ச்சி அடையும் பருவத்தில் நீண்ட நாள் இடை வெளி விட்டுப் பதினைந்து நாளுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுவது ஏற்றது. தக்க வடிகால் வசதி செய்ய வேண்டியதும் இன்றியமையாதது. முளைப்புச் சமயத்