பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/718

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 கரும்பொருள்‌

698 கரும்பொருள் சுண்ணாம்பு மாதிரியில் கால்சியம் ஆக்சைடின் சதவீதத்தை மதிப்பிடலாம். நீர்த்த சோடியம் ஹைட் ராக்சைடு, ஃபீனைல் ஹைட்ரசீன், அம்மோனியா கலந்த வெள்ளி உப்புக்கரைசல் ஆகியவற்றுடன் சுக்ரோஸ் வினைப்படுவதில்லை. நீராற்பகுக்கப்பட்ட நிலையில் வினைபுரிகிறது. சுக்ரோஸ் அசெட்டிக் நீரிலியுடன் சுக்ரோஸ் ஆக்ட்டாஅசெட்டேட்டைத் உண்டாக்குகிறது. சுக்ரோஸின் வடிவ வாய்பாடு மேற்கூறிய வினைகளின் அடிப்படையில் நிறுவப் பட்டது. சுக்ரோஸைக் கட்டுப்பாட்டுடன் காற்றில் ஆக்சிஜ னேற்றம் செய்தால் அரபோனிக் அமிலம் கிட்டும். வெவ்வேறு சூழ்நிலைகளில் நைட்ரிக் அமிலத்தில் ஆக்சிஜனேற்றம் செய்தால் ஆக்சாலிக் அமிலம் பார்டாரிக் அமிலம், குளூக்கோனிக் அமிலம் ஆகியன விளைகின்றன. ஹைட்ரஜனேற்றம் செய்தால் மானிட்டால் மற்றும் சார்பிட்டால் எனும் ஆல்கஹால் கல்வை கிடைக்கும். குளூக்கோஸ், மால்ட்டோஸ், செல்லோபயோஸ் போலல்லாது, சுக்ரோஸ் ஃபெலிங் கரைசை ஒடுக்குவதில்லை. ஆக்சைம், ஓசசோன் ஆகிய சார்புப் பொருள்களை விளைவிப்பதில்லை. சுக்ரோஸிக்கு இரு வடிவ வாய்பாடுகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன (படம் 1). இவ்விரண்டு வாய்பாடு களிலும் சுக்ரோஸ் ஒரு சமநிலையிலுள்ளது. ஃபீசர் வாய்பாடு = ஹாவொர்த் வளையவாய்பாடு குளுக்கோஸ் வளையத்தில் ஆறு அணுக்களும் ஃரக்ட்டோஸ் வளையத்தில் ஐந்து அணுக்களும் 9. it all at வடிவமைப்பின் பெயர் அடிப்படையில் சுக்ரோஸின் 3-D. குளூக்கோபைரனோசைல் D- ஃபிரக்டோஃப்யூரனோஸைடு. ஒற்றைச் சர்க்கரைடு களிலேயே னிப்பு மிக்கதான சுக்ரோஸ் ஃபிரக்ட் டோஸ் வளையம் இடம்பெறுவதால்தான் இனிப்பு மிக்கதாகவுள்ளது. சுக்ரோஸ் ஒரு முதன்மையான உணவுப் பாதுகாப்புப் பொருள் (food preser- vative) மற்றும் இனிப்புவகை மூலப்பொருள் ஆகும். இயற்கையில் கிடைக்கும் சர்க்கரைகளில் மிசுவும் விலை குறைந்தது இது. வணிக அளவில் சுக்ரோஸைத் தரக்கூடிய தோற்றுவாய்கள் கரும்பும் (சராசரியாக 13% சுக்ரோஸ் கொண்டது). பீட்கிழங்கும் {சராசரியாக 16% சுக்ரோஸ் கொண்டது) ஆகும். இக்கரைசல்கள் தூய்மையாக்கப் பட்டு. ஆவியாக்கப்பட்டு, சர்க்கரைப் படிகமாக்கப் படுகின்றன. இவ்வழிமுறை மூலம் 90.8% தூய்மை யான சுக்ரோஸை எளிதாகப் பெறலாம். தயாரிக்கப் படும் சர்க்கரையின் தூய்மையை அளந்தறிவதற்குக் கரைசலின் நியம ஒளிச்சுழற்சியை அளக்க வேண்டும். இதற்கான கருவி சர்க்கரை அளவி (saccharimeter) எனப்படும். பழவகை ஆப்பிள் வாழைப்பழம் பைன் ஆப்பிள் ஸ்ட்ராபெரி ஆப்ரிகாட் ரதவீத அளவு 1-3.4 5 11.3 6.3 6 சில பழவகைகளில் சுக்ரோஸ் அடக்கம் மேர் காணுமாறு உள்ளது. மே. ரா. பாலசுப்ரமணியன் கரும்பொருள் தன்மீது படும் மின்காந்தக் து கதிர் அனைத்தையும் உட்கவரும் பொருள் கரும்பொருள் (black body) எனப்படும்.பொதுவாகப் பொருள்கள் ஒளிக்கதிர்களை உட்கவர்ந்து அவற்றில் ஒரு சில கதிர்களை மட்டும் வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறப் பொருள் அனைத்து ஒளியையும் உட்கவர்ந்து சிவப்பு நிற ஒளி அலையை மட்டும் வெளிவிடுகிறது. அவ்வாறே இயல்பான வெப்பநிலையில் அனைத்து ஒளிக்கதிரையும் கரும்பொருள் உட்கவர்ந்துவிடும். கருமை நிறம் ஒன்றை மட்டும் கொண்டு அ பொருளைக் கரும்பொருள் என்று கூறிவிட முடியாது. வேறு வெப்பநிலைகளில் கருமை நிறமற்றதும். ஒளிரக்கூடியதுமான சில் பொருள்களும் கரும் பொருள் எனப்படும். எனவே, கரும்பொருள் தன்மை என்பது வெப்பமாக இருக்கும் நிலையில் கதிர் வீசக் கூடியதும், குளிர்ச்சியாக இருக்கும் நிலையில் வெப்பத்தை உட்கவரக்கூடியதும் ஆகும். உயர்மட்ட வெப்பநிலையில் கரும்பொருள் புறஊதா முதல் அகச் சிவப்பு வரை அனைத்து ஒளி அலைகளையும் வெளிப்படுத்தவல்லது. ஒரே வெப்பநிலையில் பிற எந்தப்பொருளையும்விடப் பெருமளவு ஒளி அலையை வெளிப்படுத்தும் தன்மையுடையது. அவ்வாறு ஒளி அலையை வெளிப்படுத்தும்போது பிற பொருள் களை விட மிகுதியான அலைகளையும் வெளிப் படுத்தும். கரும்பொருளின் முழுக் கதிர்வீச்சைக் கரும் பொருள் கதிர்வீச்சு (blackbody radiation மானலாம். மாபூங்குன்றன்