52 கட்டட மரங்கள்
52 கட்டட மரங்கள் தட்பவெப்ப நிலைக்கு ஈடுகொடுத்து, துளைப்பான் பூச்சி, கறையான் ஆகியவற்றால் தாக்கப்படாமல் இருக்கும் மரவகைகளே நீடித்த உழைப்புத்திறன் கொண்டவை. அவ்வகை மரங்கள் வேண்டிய அளவில் கிடைப்பது அரிதாகையால், தற்போது குறிப்பிட்ட மரங்கள் அல்லாமல் காட்டில் வளரும் மரங்களையும் பயன்படுத்தும் தேவை விட்டது. எனவே உரிய முறைகளில் உலர் பதப் படுத்தியும், பொருத்தமான பாதுகாப்பிகளைப் பயன் படுத்தியும் நீடித்த உழைப்புத்திறன் கூடுதலாக்கப் படுகிறது. பிறவகை ஏற்பட்டு வேம்பு இருள், வெண் பயன்பாட்டுக்குத் தகுந்த மரவகைகள். உத்திரம் முதல் பலகை, சட்டம் அனைத்திற்கும் அந்தமான் வேங்கை, அயின், இருள், கோங்கு, தடுசு, தேக்கு பாதிரி, மருது வகைகள், வெண்தேக்கு முதலியன பயன்படுகின்றன. அயினி, கருவேல், கருமருது, பாலி, மலைப்புன்னை, மருது, வேங்கை ஆகியவை கம்பங்கள், கைமரங்கள். சாரக்கட்டைகள் செய்யப்படுகின் ன்றன. கருவாகை, தேக்கு, தோதகத்தி, பலா, மஞ்சட்கடம்பு, மகாகனி, பா வாகை. வெண்தேக்கு. வேங்கை. வேம்பு முதலியன பலகைகள், செய்யப் பயன்படுகின்றன. தள வரிசைக்கட்டைகள் ஈரக்கசிவு மற்றும் மணற்பாங்கான இடங்களில் மண்ணிற்குள் செலுத்தப்படும் நிலத்தூண்களுக்கான மரங்களாகக் கருவேல், தேக்கு, நாங்கு, பூம்பாதிரி, முள்ளிலவு, வெண்தேக்கு போன்றவை காணப்படு கின்றன. கட்டட மரப் பாதுகாப்பு முறைகள். இம்முறை உலர்பதனிடுதல், பாதுகாப்பிகளைப் (preservatives) பயன்படுத்தல் என இருவகைப்படும். உலர்பதனிடல் மரங்களில் இயற்கையாக உள்ள ஈரப்பசையின் அளவைப் பயனாகும் இடங்களின் காற்று மண்டல ஈரப்பத அளவுக்குக் குறைத்தலே உலர்பதனிடல் ஆகும். இதனால் மரங்களை எளிதாக அறுக்க, இழைக்க இயலும். மேலும் வளைவு, திருக்சும், முறிவு, வெடிப்பு, வடிவிழப்பு போன்ற குறைபாடு களைத் தவிர்க்கவும் முடியும். மேலும் நீண்ட நாள் பயன்படும். உலர் பதனிடுமுறை மரங்களின் இயல்புக்குத் தக்கவாறு இருவகையில் செய்யப்படுகின்றது. அவை காற்றில் உவர்பதனிடல், வளிம உலர்த்தல் ஆகியவை யாகும். காற்றில் உலர்பதனிடல். மரக்கட்டைகளை அல்லது அறுத்த மரப்பொருள்களை (சட்டங்கள், பலகைகள்). ஒன்றின்மேல் ஒன்றுவைத்து, இடையில் காற்றுப் புகும்படி அடுக்கிச் சில நாள் வைக்க வேண்டும். இதைத் திறந்த வெளியிலோ உயர் கூடார நிழலிலோ செய்யலாம். இதனால் மரங்களில் உள்ள ஈரப்பசை, வெளிக்காற்றால் மெதுவாக உறிஞ்சப்படக் கட்டை கள் உலர்கின்றன. வளிம உலர்த்தல். சில கடின வகை மரங்களை வேண்டும் வடிவில் அறுத்த பின்னர், கொதிகலன் போன்ற மூடப்பட்ட உருளைகளில் வைத்து, சூடான வளிமத்தை உருளைக்குள் செலுத்திக் கட்டைகளில் உள்ள ஈரப்பசையை விரைவில் நீக்க வேண்டும். பாதுகாப்பிகளைப் பயன்படுத்தல் இது மூவகைப்படும். மரப்பொருள்களைக் கட்ட டத்துள் பொருத்தும் முன்பு செய்வது, பொருத்திய பின்பு செய்வது இதில் அடங்கும். இவ்விருவகைகளும் கட்டடங்களில் பொருத்தப்படுமுன் செய்யப்படுவன. இறுதி வகை, பொருத்தப்பட்ட பின் செய்யப்படுவ தாகும். பாது அமிழ்த்தல் முறை. மரப்பொருள்களை, காப்பிகளான மர எண்ணெய், மரத்தார்க்குழம்பு உள்ள தொட்டிகளில் நன்கு மூழ்கும்படிச் சில நாள் அமிழ்த்தி வைத்திருந்து, பின்னர் எடுத்து உலர்த்திப் பயன்படுத்தல் வேண்டும். இம்முறை பல நுண்துளை கள் (pores) உள்ள மிகக்கடின மர வகைகளுக்குப் பொருந்தும். உட்செலுத்துதல் முறை (impregnation), அடர்த்தி யான செல்களுக்குள் அமிழ்த்தல் முறையால் கடின வகை மரங்களில் பாதுகாப்பிகளை உட்செலுத்த இயலாது. மூடப்பட்ட கொதிகலன் உருளைக்குள் மரப்பொருள்களை அடுக்கி வைத்து, காற்றழுத்தம் மூலம் பாதுகாப்பி மருந்துகளைக் குறிப்பிட்ட நேரத் துக்கு உட்செலுத்தி மரப்பொருள்களின் அடர்ந்த செல்களுக்குள் செலுத்தவேண்டும். பின்னர் அவற்றை வெளியில் எடுத்து உலர்த்திப் பயன்படுத்தலாம். பூச்சு முறை. மண்ணுக்குள் அல்லது சுவருக்குள் பொருத்தப்படும் மரப்பொருள்களின் முனைகளைத் தார், மர எண்ணெய் பூசிப் பயன்படுத்துவர். கட்டடங்களில் பொருத்தப்பட்டு வெளியில் தெரியும் மரப்பகுதிகளைத் தட்பவெப்பநிலை மாற்றம், பூச்சி இவற்றின் கறையான், துளைப்பான் தாக்கம் ஆகியவற்றிலிருந்து தடுத்துக் காக்கவும், மேலும் சில மரவகைகளின் நார்க்கோல அழகை வெளிப்படுத்தவும் பல்வகை மெருகெண்ணெய்கள் (varnishes), நெய்வணங்கள் (paints) பயன்படுகின்றன. இம்முறை ஆண்டுக்கு ஒரு முறையோ ஈராண்டிற்கு ஒருமுறையோ செய்யப்பட்டு வந்தால் மரப்பொருள் கள் நன்னிலையில் நீண்ட காலத்திற்குப் பயன்படும். நீர் படாமல் இருந்தால் மேலும் நிலைத்திருக்கும். கட்டட மரங்களில் புதுமைப் பொருள்கள். கட்டட மரப்பொருள்கள் செய்வதில் காலத்தின் தேவையால்