பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 கரும்பொருள்‌ கதிர்வீச்சு

700 கரும்பொருள் கதிர்வீச்சு பல உருவாக்கப் வெப்பநிலை அளக்கும் கருவிகள். கதிர்வீச்சு ஒரு பரப்பின் மேல் விழும்போது அப்பரப்புச் சூடாகிறது. இப்பண் பைப் பயன்படுத்தி வெப்பக் கதிர்களைக் கண்டுபிடிக்க வும் அளக்கவும். கருவிகள் பட்டுள்ளன. சாதாரணமான நீர்ம அளவியின் குமிழில் கரி பூசி வைத்தால், வெப்பக் கதிர்கள் அதன்மேல் படும்போது அது சூடாகி வெப்ப நிலை அளளியின் நீர்மமட்டம் உயருகிறது. லெஸ்லி யின் பகுகாற்று வெப்பநிலை அளவியில் (differential air thermometer) இரண்டு காற்றடைத்த கண்ணாடிக் குமிழ்கள் ஒரு ப-லடிவக்குழல் மூலம் ணைக்கப் பட்டுள்ளன. அக்குழலில் கந்தக அமிலம் போன்ற ஏதாவது ஓர் ஆவியாகாத நீர்மம் வைக்கப்பட்டிருக் கும். ஒரு குமிழை மறைத்து வைத்து மற்ற குமிழின் மேல் கதிர் படும்படிச் செய்தால் அது சூடாகி, அதிலுள்ள காற்று விரிவடைய அதன் கீழேயுள்ள நீர்ம மட்டம் கீழே இறங்கும். ப-குழாயின் இரு புயங்களிலுமுள்ள நீர்ம மட்டங்களுக்கிடையான வேறுபாட்டைக் கதிர்வீசலின் அளவாக எடுத்துக் கொள்ளலாம். . குரூக்ஸ் கதிர்வீசல் அளவி (radio meter) என்னும் கருவியில் ஒரு காற்றாடி அமைப்பு உள்ளது. அதன் இலைகளின் ஒரு பக்கத்தில் மட்டும் கரி பூசப்பட்டிருக் கும். கரி பூசிய பரப்புகளில் கதிர்கள் படும்போது, கதிர்வீசு தோற்றுவாயிலிருந்து அப்பரப்புகள் விலகிச் செல்லும் வகையில் காற்றாடி சுழலத் தொடங்கு கிறது. கரி பூசப்படாத பக்கத்தைவிடக் கரி பூசிய பக்கம் பெருமளவில் கதிர்களை உட்கவர்ந்து உயர் வெப்பநிலையை அடைகிறது. கரி பூசிய பக்கத்தின் மேல் மோதும் காற்று மூலக்கூறுகள், சுரி பூசாத பக்கத்தின் மேல் மோதும் மூலக்கூறுகளைவிட மிகுதி வெப்பத்தைப் பெறுகின்றன. இதனால் கரி பூசிய பக்கத்திலிருந்து எதிரொளிக்கப்படும் மூலக் கூறுகள் மிகுதியான உந்தத்துடன் வெளியேறுகின்றன. எனவே கரி பூசிய பக்கத்தின்மேல் செலுத்தப்படும் விசை மிகுதியாக உள்ளது. இதன் காரணமாகக் கரி பூசிய பக்கங்கள் கதிரிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. கதிர்வீசல் இது அளவி விளைவு (radiometer effect) எனப்படும். காற்றாடி சுழலும் வேகத்திலிருந்து கதிர்வீச்சின் அளவை அளவிடலாம். படுக மெல்லோனி என்பார் வெப்ப மின் அடுக்குகளைப் (thermopile) பயன்படுத்திக் கதிர்வீசல் அளவை அளக் கும் கருவியை உருவாக்கினார். அதில் ஆன்ட்டிமனி, பிஸ்மத் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் வெப்ப முனைகளில் கரி பூசிய செம்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். கதிர்வீச்சால் அவை சூடாகும்போது பிஸ்மத்திலிருந்து ஆன்ட்டி நனிக்கு வெப்ப மின்னோட்டம் பாயும். இந்த மின் னோட்டத்தை ஒரு கால்வனாமீட்டரில் சலுத்தி அதிலேற்படும் விலக்கத்தின் மூலம் கதிர் வீச்சின் பாய்சின் கதிர்வீசல் நுண் அளவியில் (Boys radio micrometer) ஆன்ட்டிமனி, பிஸ்பத் ஆகியவற்றாலான இரு சிறு துண்டுகள் ஒரு செம்பு அல்லது வெள்ளிக் கம்பியாலான ஒற்றைக் கண்ணியின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும். அத்துண்டுகளின் கீழ் முனைகள் ஒரு சிறிய செம்புத் தகட்டில் பற்ற வைக்கப்பட்டுள்ளன. ஒற்றைக் கண்ணி இரண்டு காந்த முனைகளுக்கு இடையில் ஒரு குவார்ட்ஸ் இழையால் தொங்கவிடப்படுகிறது. குவார்ட்ஸ் இழையில் ஒரு சிறிய சமதள சிறிய சமதள ஆடி ஒட்டப்பட்டி ருக்கும். கோல் கரி பூசப்பட்ட செப்புத் தகட்டின் மேல். கதி கள் படும்போது அது சூடாகி ஆன்ட்டிமனி-பிஸ்மத் வெப்ப மின்இரட்டையில் ஒரு மின்னோட்டத்தைத் தோற்றுளிக்கிறது. இந்த மின்னோட்டம் கண்ணியின் வழியாகப் பாயும்போது கண்ணி சுழற்றப்படுகிறது. கண்ணியின் சுழற்சியை ஒரு விளக்கு - அளவு முறையால் அளவிட்டுக் கதிர்வீசலின் அளவை மதிப் பிடலாம். க்கருவி மிகு உணர்வு நுட்பமும் நுண் தன்மையும் கொண்டுள்ளது. ஆனால் இதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருத்தி வைத்துத்தான் பயன்படுத்த முடியும். பிளாட் லாங்லி என்பாரால் உருவாக்கப்பட்ட போலோ மீட்டர் (bolometer) என்னும் கருவியில் டினத் தகடுகளின் மேல் கதிர்வீச்சுப் பட்டு, சூடா வதன் காரணமாக அவற்றின் மின் தடையில் ஏற்படும் அதிகரிப்பு அளக்கப்படுகிறது. லம்மர், குர்ல்பாம் ஆகியோர் ஒரு வீட்ஸ்டோன் (wheatstone) வலையமைப்பில் போலோ மீட்டர் தகடுகளை ணைத்து இக்கருவியின் உணர்வு நுட்பத்தை அதிகப்படுத்தினர். . கதிர்வீசலின் தன்மைகள். சூரியனிலிருந்து வரும் ஒளியும் வெப்பமும் புலியை ஒரே சமயத்தில் வந்து அடைவதிலிருந்தும், ஒளி மறைக்கப்பட்டால் வெப்பம் மறைந்து விடுவதிலிருந்தும், ஒளிக் கதிர்களும் என்பது வெப்பக்கதிர்களும் ஒரே தன்மையானவை நீண்டகாலத்திற்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. பிற்கால ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. வெப்பக்கதிர்கள் வெற்றிடத்தின் வழியாக ஒளி யின் வேகத்துடன் நேர் கோட்டுப் பாதைகளில் பயணம் செய்கின்றன. ஒளியைப் போலவே வெப்பக் கதிர்களின் செறிவும் தொலைவின் இருமடிக்குத் தலைகீழ் விகிதத்தில் மாறுகிறது. வெப்பக்கதிர்கள் ஒளிக்கதிர்களைப் போலவே எதிரொளிக்கப்படுவதும், விலகல் அடைவதும், நிறப்பிரிகையடைவதும் காணப் பட்டுள்ளன. அவற்றில் குறுக்கீட்டு விளைவுகளும், விளிம்பு விலகல் விளைவுகளும் ஏற்படுகின்றன. ஒளியைப் போலவே வெப்பக் கதிர்களும் தள விளைவுக்கு உள்ளாகின்றன.