பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்பொருள்‌ கதிர்வீச்சு 703

கரும்பொருள் கதிர்வீச்சு 703 வீசுகிறது. வெப்பநிலை உயர உயர, செறிவுள்ள மிகுந்த ஒளியின் அலை நீளம் குறையத் தொடங்கு கிறது. T வெப்பநிலையிலுள்ள ஒரு பொருளின் ஒளியில் பெருமச் செறிவுடன் உள்ள அலைநீளம் 1 எனில் AXT = ஒரு மாறிலி என வீன் காட்டினார். இது வீனின் இடப்பெயர்ச்சி விதி (displacement law) எனப்படும். இதுபோன்று பெருமக் கதிர்வீசல் E எனில், ET- = ஒரு மாறிலி எனவும் அவர் காட்டினார். இது ஐந்தாம் மடி விதி (fifth power law) எனப் படும். ரண்டு விதிகளையும் இணைத்து, E=KA - f(AT) என எழுதலாம். இதில் K என்பது றிலி; f(AT) என்பது 1T இன் ஒரு சார்பெண். ஒரு மா ஆனால் அதன் பிறகு சில தன்னிச்சையான, நம்பக்கூடிய கற்பனைகளைப் பயன்படுத்தி வீன் ஆற்றல் பரவீட்டுக்குப் பின்வரும் சமன்பாட்டைக் கொண்டு வந்தார். E.da = K,a e a/AT di இதில் E என்பது 1. n + di ஆகிய அலைநீளங் நிறமாலைப் பகுதியில் உள்ள களுக்குள் அடங்கிய ஆற்றலின் மாறிலிகள்; அளவு; ki,a ஆகியவை என்பது கரும்பொருளின் வெப்பநிலை. து வீனின் ஆற்றல் பரவீட்டு விதி எனப்படும். இது குறைந்த அலை நீளங்களுக்கு மட்டுமே பொருந்து கிறது. சமன் 1900 இல் ராலே, ஜீன் ஆகியோர் புள்ளியியல் எந்திரவியலையும் மின்னியக்கவியல் தத்துவங்களை யும் என்னும் பயன்படுத்தி E = 87kT/a+ பாட்டைப் பெற்றனர். இதில் k என்பது போல்ட்ஸ் மன் மாறிவி. இது ராலே-ஜீன் ஆற்றல் பரவீட்டு விதி எனப்படும். இது 25×10-4 செ.மீ முதல் 30x 104 செ மீ. வரை அலைநீளமுள்ள கதிர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. காட்டப் லம்மர், பிரிங்ஷீம் ஆகியோர் 1899 இல் செய்த ஆய்வுகளின் முடிவுகள் வரைபடத்தில் பட்டுள்ளன. குறுகிய அலைநீள நெடுக்கங்களில் வெளி யிடப்பட்ட ஆற்றலுக்கும், நெடுக்கங்களின் சராசரி அலைநீளத்திற்குமிடையில் இந்த வரைகோடுகள் வரையப்பட்டுள்ளன. வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு வெவ்வேறு கோடுகள் கிடைத்துள்ளன. ஒரு குறிப் பிட்ட வெப்ப நிலையில் கதிர்வீசப்பட்ட மொத்த ஆற்றல் அதற்கான கோட்டிற்கும், இடை அச்சுக்கும் இடையிலுள்ள பரப்பளவுக்குச் சமம். தனி வெப்ப நிலையின் நான்மடிக்கு நேர்விகிதத்தில் இந்தப் பரப் 1ாளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் மூலம் ஸ்டெஃபானின் விதி மெய்ப்பிக்கப்படுகிறது. (). (449 k. 1646 k 1259 k, 1095 k. 998k. 4. 6 2210 கரும்பொருள் கதிர்வீச்சின் ஆற்றல் பெரும் அளவு ஆற்றலுள்ள அலை நீளம் கோட்டின் முகட்டிலிருந்து கண்டுபிடிக்கப்படும். வெப்பநிலை உயர உயர இந்த முகடு, குறைந்த அலை. நீளப் பக்கமாக இடப்பெயர்ச்சி அடைகிறது. இதன் மூலம் வீனின் இடப்பெயர்ச்சி விதி மெய்ப்பிக்கப்படு கிறது. இந்த வரைபடங்களிலிருந்து கரும்பொருளின் கதிர்வீச்சு நிறுமாலையில், ஆற்றல் ஒரு சீராகப் பங்கிடப்படவில்லை என்பது தெரிகிறது. ஒரு குறிப் பிட்ட வெப்பநிலையில் அலைநீளம் உயர் உய வெப்பக் கதிரின் செறிவும்உயருகிறது. ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் அது பெரும மதிப்பை எட்டுகிறது. அதற்கு மேலும் அலைநீளம் மிகுந்தால் செறிவு குறைகிறது. அனைத்து அலை நீளங்களுக்கும். வெப்ப நிலை பெருமமானால் கதிர் வீசு ஆற்றிலும் பெரு மாகிறது. வெப்பநிலை பெருமமானால் பெருமச் செறிவுள்ள அலைநீளம் குறைகிறது. பிளாங்கின் விதி. பழங்கொள்கையின் அடிப் படையில் உருவாக்கப்பட்ட மேற்காணும் விதிகளில் காணப்பட்ட பல குறைபாடுகளைக் கண்ட மாக்ஸ் பிளாங்க் குவாண்ட்டம் கொள்கையைப் பயன்படுத்தி ஒரு சரியான ஆற்றல் பரவீட்டு விதியை உருவாக்கி னார். ஆற்றல் குவாண்ட்டம் எனப்படும் தனித்தனி யான ஆற்றல் கூறுகளாகப் பரவுவதாக அவர் வைத் துக் கொண்டார். அவர் வகுத்த சமன்பாடு பின்வரு பசறு