பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 கருமருது

704 கருமருது E da = dA 8 hc a (ehc/k AT 1) 87hcd! i° {¢hv KT - 1} இதில் c என்பது 3×10 மீ,நொh என்பது பிளாங் கின் மாறிவி: டி என்பது அதிர்வெண். இது கரும்பொருளின் கதிர்வீச்சில் அலைநீளத்திற் கும் ஆற்றல் பரவீட்டிற்குமிடையிலுள்ள தொடர்பை நுட்பமாகத் தருகிறது. ஆய்வு முடிவுகளுடன் சரியாகப் பொருந்துகிறது. மேலும் வீன், ராலே-ஜீன் சமன்பாடுகளைப் பிளாங்கின் சமன்பாட்டின் சிறப்பு நிலைகளாகப் பெற முடியும். 1T சிறிதாயிருக்கும் போது அதாவது புற ஊதாப்பகுதியில் அல்லது குறைந்த வெப்பநிலை லைகளில் பிளாங்கின் சமன்பாடு வீனின் சமன்பாட்டைப் போன்றதாகி விடுகிறது. AT மிகுதியாகயிருக்கும்போது கீழ்ச்சிவப்புப் அதாவது பகுதியிலோ உயர் வெப்ப நிலைகளிலோ அது ராலே யின் சமன்பாட்டைப் போனறதாகி விடும். பிளாங் கின் குவாண்ட்டம் காள்கை பழங்கருத்துக்களை மாற்றியமைத்து. இன்றைய இயற்பியலின் அடிப் படைக் கருத்துகளில் ஒன்றாகியுள்ளது. கருமருது கே. என். ராமச்சந்திரன் இதன் தாவரவியல் பெயர்கள். டெர்மினேலியா டொமென்டோசா (Terminalia tomentosa), டெர்மி னேலியா கிரனுலேட்டா (F. crenulata), பென்டாப் டிரா கிரனுலேட்டா (Pentaptera crenuluta) ஆகும். இத்தாவரம் (பண்ணை,வாகை) காம்பிரேட்டேசி (Combretaceae) என்னும் இருவித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் பஞ்சாப், அசாம் மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்களிலும் இலங்கை, பங்களாதேஷ் நாடுகளிலும் வளர்கிறது. 100 மீ. 200 மீ வரை மலைப்பகுதிகளிலும், ஆற்றங்கரைப் பகுதிகளிலும் இம்மரம் காணப்படுகிறது. (படம் பக்.705) இம்மரம் உயரமான கருமருது மரம் 20 2.-25 LB. வரை உயர் மிருக்கும். கிளைகளிலும், பக்கக் கிளைகளிலும் மயி ரிழைகள் போன்ற நுண் வளரிகள் காணப்படு கின்றன. இலைகள், தனி இலைகளாக மாற்று லை யடுக்கத்திலோ சற்றேறக்குறைய எதிர் இலை அடுக் கத்திலோ அமைந்துள்ளன. இலைகள் நீள்முட்டை வடிவத்தில், பெரியவாகவும் சொர சொரப்பாகவும் உள்ளன. இலைக்காம்பு 2 செ.மீ. நீளமுடையது. இலையின் அடிப்பகுதியில் சுரப்பிகள் காணப்படு கின்றன. மலர்கள், தூனி (spike), மஞ்சரி வகையில் அமைத் உச்சி துள்ளன. மஞ்சரி இலைக் கோணத்திலோ யிலோ அமைந்துள்ளது. மலர்கள் இருபால் மலர்கள். கீழ்மட்டச் சூல்பை கொண்ட மலர்கள். இவை நான்கு அங்க ( tetramerous) மலர்களாகவோ ஐந்தங்க மலர்களாகவோ காணப்படுகின்றன. புல்லிதழ்கள், குழல் போன்று மிகச் சிறியவை யாக உள்ளன. புல்லிதழ்க் குழலின் அடிப்பகுதி மயிரிழைகள் கொண்டதாகவும், நுனிப்பகுதி சொர சொரப்பாகவும் காணப்படும். பத்து மகரந்தத் தாள்கள் உள்ளன. கீழ்மட்டச் சூலகப்பை ஓர் அறை அமைப்பு உடையது. சூலக அறையில் 2 அல்லது 3 சூல்கள் காணப்படுகின்றன. மலர்கள் ஜூலை மாதத்தில் பூக்கின்றன. இதன் கனி, உள்ளோட்டுச் சதைக்கனி வகையைச் சேர்ந்தது. கனிகள் ஜூலை பின் தோன்று மாதத்திற்குப் கின்றன. கனிகளில் இறகுபோன்ற வெளி வளரிகள் காணப்படுகின்றன. இந்த இறகுகள் தொடக்கத்தில் சிவப்பாகவும், பின்னர் பச்சை நிறமாகவும் மாறு கின்றன. பயன்கள். மரம், மரச்சாமான்கள் செய்வதற்கும், கட்டடங்களுக்கும் பயன்படுகிறது. மென்கட்டை (sap wood) மஞ்சள், வெண்மை நிறமாகும். வைரக் கட்டை (heart wood) இளம் பழுப்பு நிறத்துடனோ சிவந்த பழுப்பு நிறத்துடனோ கருமையான இழை யுடன் காணப்படுகிறது. மரத்தில் எவ்வித மணமோ சுவையோ இல்லை. பெரும்பாலும் நேரான, நெருக்க மான அமைப்பு உடையது. மரம் அழுத்தமாக, உறுதி யாக நெடுங்காலம் உழைக்கும் தன்மை உடையது. தேக்கு மரத்தை விட 25-30% கருமருது மரம் உறுதி யானது. கருமருது மரம் அழுத்தத்திலும், எடையிலும் தேக்கு மரத்தை விட 50-60% மிகுதியானது. கட்டு மானப் பணிகள், மரச்சாமான்கள் செய்வதற்கு மிகவும் ஏற்ற மரம். அறுப்பதற்கு வாய்ப்பாகவும். இழைப்பிற்கு எளிதாகவும் இருப்பதால், வழவழப் பான மேற்பரப்பைப் பெற முடியும் தேயிலைப் பெட்டி செய்வதற்கும், கூரைத் தகடு, தீப்பெட்டி. தீக்குச்சி செய்வதற்கும், கப்பல். படகு கட்டுவதற் கும் மின் கம்பங்களுக்கும் மரம் பயன்படுகிறது. கனிகள். தோலைப் பதப்படுத்தவும் சாயம் ஏற்றி வும் பயன்படுகின்றன. இலைகள், கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன. மத்திய பிரதேசத்தில் லைகள் வட்டுப் புழுக்களுக்கு உணவாகவும் பயன் படுகின்றன. மரப்பட்டை மருந்தாகவும், மரம் எரி பொருளாகவும் பயன்படும். நா.வெங்கடேசன் of நூலோதி. B.P., Pandey, Taxonomy, of Angios perms. S. Chand & Company, New Delhi, 1982.