கரு வளர்ச்சி (தாவரவியல்) 707
அறுவை மருத்துவம் பெருங்குடலில் இரத்த ஒழுக்கு மிகுதியாக உள்ளபோதும், மெக்கல் பக்கப் பை, பிறவி இரத்தக்குழாய் மாறுபாடு முதலிய வற்றிற்கும் சிறந்தது. தொங்கு தசையை உள்நோக்கி மூலம் அகற்ற முடியும். பெருங்குடல் புண் அழற்சி மருந்தின் மூலம் கட்டுப்படா நிலையில் அறுவை ஏற்றது. இவ்வாறே இரைப்பைப் புண் புற்றுக்கும் அறுவை மருத்துவம் சிறந்தது. மேலும் போர்ட்டல் சிரை இரத்த ஒழுக்கை அகநோக்கிக் கருவி மூலம் ஊசி மருந்து செலுத்திக் குணப்படுத்த முடியும். அவ்வாறு குணப்படுத்த முடியாத நிலையில் அவசரப் போர்ட்டல் கீழ்ப்பெருஞ்சிரை இணைப்புத் தேவைப் படும். கருவளர்ச்சி (தாவரவியல்) சு.நரேந்திரன் கருப்பையில் உண்டாகும் முட்டையுடன் மகரந்தத் துகளில் உண்டாகும் விந்து சேர்ந்து இணைவதே கருவுறுதலாகும். கருவுறுதல் முடிந்தபின் கிடைக்கும் புதிய ஒருங்கிணைப்புக்குக் கருமுட்டை (zygote) என்று பெயர். செல் பிரிதல் மூலமாகக் கரு முட்டை உயிரின ஒரு கருவைக் கொடுக்கிறது. முழுமையான உறுப்பு. குருத்துகளைத் தன்னுள் கொண்ட பல செல்களின் அமைப்பிற்கே கரு என்று பெயர். இவ்வாறு உருவாகும் கருவே இறுதியில் ஒரு முழுமை யான தாவரத்தைக் கொடுக்கிறது. கருவளர்ச்சி (embryogeny). பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் கருமுட்டையின் முதல் பகுப்பு (first division) குறுக்காக அமைகிறது கருமுட்டை யின் இந்தப் பகுப்பினால் சிறிய நுனிச்செல் ஒன்றும் (apical cell) Ca' யும் மற்றும் பெரிய அடிச்செல் ஒன்றும் (basal cell) 'Cb' யும் உண்டாகின்றன. கருமுட்டையின் முதல் பகுப்பிலிருந்து கருவில் உறுப்புகள் உண்டாகத் தொடங்கும் நிலை உள்ள கருவிற்கு இளங்கரு (proembryo) பெயர். வகை. ளங்கருவில் வரை என்று உள்ள கருவளர்ச்சியின் நுனிச் செல் பகுப்புறும் தன்மை கொண்டும் பின்னர் உருவாகும் முதல் நான்கு செல்களின் அமைப்பைக் கொண்டும் நுனிச்செல், அடிச்செல் ஆகியவற்றி லிருந்து உண்டாகும் பகுதிகளைக் கொண்டும் கரு வளர்ச்சி பல பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி என்பார் 1950 ஆம் ஆண்டு மேற் கூறிய பகுப்புகளின் தன்மையைக் கொண்டு இரு வித்திலைத் தாவரங்களின் கருவளர்ச்சியை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார். அவை; கருவளர்ச்சி (தாவரவியல்) 707 இருசெல் இளங்கருவில் நுனிச்செல் நீளவாக் கில் பகுப்புறுதல்: அ. இருசெல் இளங்கருவின் அடிச் செல், முதன்மைக் கருவை உருவாக்குவதில் சிறிதளவே பங்குகொள்ளுதல் அல்லது பங்கு கொள்ளாமை. இது குருசிஃபெர் அல்லது ஓனக்ராட் வகையாகும். எ.கா. ரென்னகுலேசி, அன்னோனேசி, பிராகேசி, ஸ்க்ராஃபுலாரியேசி இருசெல், இளங்கருவின் அடிச் செவ்லும் நுனிசெல்லும் ஒன்றுசேர்ந்து முதன்மைக் கருவை உருவாக்குவதில் பங்கு கொள்ளுதல். இது ஆஸ்ட்ராய்டு வகையாகும். எ. கா: ஆஸ்டிரேசி, வைட்டேசி, வயோலேசி. பால்ஸாமினோசி. இருசெல் இளங்கருவின் நுனிச்செல் குறுக் காகப் பகுப்புறுதல்: அடிச்செல் சிறு பங்கு அல்லது எந்தப் பங்குமே கருவின் பின்வளர்ச்சியில் இடம் பெறாமை. அடிச்செல் பொதுவாகத் தாங்கிச் செல்லை மட்டும் உருவாக்குதல். இது சோலனாய்ட் வகை யாகும். எ.கா. சோலனேசி, கம்பேனுலேசி, தீயேசி. அடிச்செல்லில் பகுப்பு நடைபெறுவதில்லை. முதன்மைக் கருவில் தாங்கிச் (suspensor) செல் இருந் தால், அது நுனிச்செல்வின் மூலம் தோற்றுவிக்கப் பட்டதாகவே இருக்கும். இது கேர்யாஃபில்லாய்டு வகையாகும். எ.கா. கேர்யாஃபில்லேசி, க்ராசுலேசி, இருசெல் இளங்கருவின் அடிச்செல்லும் மற்றும் நுனிச்செல்லும் ஒன்றுசேர்ந்து முதன்மைக் கருவை உருவாக்குவதில் பங்கு கொள்ளுதல்: இது கீனோ போடிய வகை. எ.கா. கீனோபோடியேசி, பொராஜி னேசி. இந்த ஐந்து வகையான கருவளர்ச்சி முறை களில் கருமுட்டையின் முதல் பகுப்பு, குறுக்குப் பகுப் பாகும். ஜோகான்சன் என்பார் புதிய வகைக் கருவளர்ச்சி யைக் கண்டுபிடித்தார். இந்தக் கருவளர்ச்சி முறை யில் கருமுட்டையில் முதல் பகுப்பு நீள்வாக்கில் நடைபெறுகிறது. இது பைபெராய்டு வகை, எ.கா. பைப்பெரேசி, லோரான்தேசி, எனக்ராய்டு வகையில் கருவளர்ச்சி. ஒனக்ராய்டு வகையைச் சேர்ந்த காப்செல்லா பர்சாபாஸ்டோரிஸ் என்னும் தாவரமே கருவளர்ச் சியைப் பற்றி முழுமையாக ஆராயப்பட்ட முதல் தாவரமாகும். இதன் கருவளர்ச்சியின் கருமுட்டை யின் முதல் பகுப்பால் உண்டாகும் ca, cb என்னும் செல்களில் ca குறுக்காவும் cb நெடுக்காகவும் பகுப் புற்று 1 வடிவான நான்குசெல் இளங்கரு தோன்று கிறது. நுனிச்செல்களிரண்டும், நீள் போக்கில் முன் பகுப்புக்கு நேர் குறுக்காகப் பகுப்புற்று நான்கு செல்களாகின்றன. இது நான்கு செல் நிலை (quadrant) எனப்படும். இந்நான்கு செல்களும் குறுக்காகப் பகுப்புறுவதால் எட்டுச் செல்களா கின்றன. இந்த எட்டுச் செல்களில் நுனிச் செல்கள்