பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு வளர்ச்சி (தாவரவியல்‌) 709

கொன்று குறுக்கான இரண்டு நீண்ட பகுப்புகளால் எட்டுச் செல்களாகின்றன. இந்த எட்டுச் செல்களில் கீழ் நான்கு செல்களும் வேர்ப் புறணியின் தோற்று வாய்ச் செல்களாகின்றன. மேல் நான்கு செல்களும் வேர் வெளித்தோல், வேர் நுனிமுடி ஆகியவற்றின் தோற்றுவாய்ச் செல்களாகின்றன. அதே சமயத்தில் இளங்கருவின் நுனிப் பகுதி யில் செல் பகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இளங்கரு ஏறக்குறைய ஒரு பந்து போன்ற உருவத்தை அடைந்த பிறகு வித்திலைகள் தோன்றுவதற்கான டங்களில் செல்கள் விரைவாகப் பகுப்புற்று வித்திலைகளைத் தோற்றுவிக்கின்றன. வித்திலைகள் தோன்றத் தொடங்கிய சமயத்தில் கரு ஏறக்குறைய இதயத்தைப் போன்ற உருவத்தைப் பெறுகிறது. பிறகு வித்திலைகளும், வித்திலைக் கீழ்த்தண்டும் நீண்டு வளர்கின்றன. மேலும் கருவளர்ச்சியடையும் போது ஒரு குதிரை லாடம் போல் வளைந்து கொள்வதால் அதற்கேற்ப வித்திலைகளும் வளைந்து கொள்கின்றன. ஒருவித்திலைக் கருவளர்ச்சி, ஒருவித்திலையில் இளங்கருவின் வளர்ச்சி தொடக்க நிலையில் இரு வித்திலையின் வளர்ச்சியிலிருந்து வேறுபாடு அடைவ தில்லை. ஆனால் இவ்விரு பிரிவுகளிலும் முதிர்ந்த கருவின் அமைப்பு மிகவும் இருக்கிறது. வேறுபாடுடையதாக கருவளர்ச்சி (தாவரவியல்) 709 கரு ஜங்கேசி குடும்பத்தைச் சேர்ந்த அஸுலா ஃபார்ஸ்ட்ரி என்னும் தாவரத்தில் எளிதான வளர்ச்சி காணப்படுகிறது. இரு செல் இளங்கருவின் ca செல் நெடுக்காகவும் Cb குறுக்காகவும் பகுப்புறு கின்றன. Cb இலிருந்து உண்டாகும் செல்கள் Ci,'m' என்பவையாகும். Ca அடுக்கின் இருசெல்களும் நெடுக்காக முன்பகுப்புக்குக் குறுக்கில் பகுப்புறு கின்றன. அதனால் நான்குசெல் நிலை பு உண்டாகி றது. m. செல் நெடுக்காகப் பகுப்புறுகிறது. Gi குறுக் காகப் பகுப்புற்று nin' ஆகிய செல்களை உண்டாக்கு கிறது. நான்குசெல்களின் குறுக்குப் பகுப்பில் '1, 1' அடுக்குகளைக் கொண்ட எட்டுச் செல் நிலை உண் டாகிறது.1 அடுக்கிலிருந்து ஒரு வித்திலையின் நுனிப் பகுதியும் 1' அடுக்கிலிருந்து ஒருவித்திலையின் அடிப் பகுதியும், வித்திலைக் கீழ்த்தண்டு, தண்டு நுனி ஆகியவையும் உண்டாகின்றன. m அடுக்கிலிருந்து வேர் நுனி உறையின் பகுதியும் பெரிப்ளமும் (perip lum) உண்டாகின்றன. செல்லிலிருந்து வேர் நுனி உறையின் எஞ்சிய பகுதி தோன்றுகிறது. n' செல் லிலிருந்து குறுகிய தாங்கிச்செல் உண்டாகிறது. இத் தாவரத்தின் கருவளர்ச்சியில் குறிப்பிடத்தக்க கூறாக நான்கு செல் நிலையிலேயே புறத்தோல் செல்கள் (dermatogen) உண்டாகின்றன. போயேசி குடும்பத்தின் கரு ஒருவித்திலைத் தாவரங்களில் கருவினின்றும் பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகிறது இக்குடும்பத்தைச் சேர்ந்த போவா A cb ca n O cb m +n C ca ५ படம் 2 லுஜூலாஃபார்ஸ்ட்ரியின் கருவளர்ச்சிப் படிகள்